புதன், 6 ஏப்ரல், 2022

 

Palm Sunday C: 2022, குருத்தோலை ஞாயிறு (இ)



குருத்தோலை ஞாயிறு ()
10.04.2022

M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai, Jaffna.

Thursday, 7 April 2022



முதல் வாசகம்எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்பிலிப்பியர் 2,6-11
நற்செய்திலூக்கா 22,14 - 23,56


குருத்தோலை ஞாயிறு:
இன்றோடு தவக்காலம் முடிவடைகிறது அத்தோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகின்றது
இன்றைய நாள்அன்று இயேசு மகிமையுடன் எருசலேம் நகரினுள் நுழைந்ததைநினைவூட்டுகின்றதுஇயேசு எருசலேமில் நுழைந்த போது அவரைச் சுற்றியிருந்தவர்களும்அவரோடு வந்தவர்களும் ஆர்பரித்து ஆரவாரம் செய்தார்கள்தங்களுடைய கைகளில் ஒலிவஇலைகளை தாங்கி இருந்தார்கள்ஒலிவ இலைகள்மாட்சியையும் வெற்றியையும் குறிக்கின்றஅடையாளங்கள்சாதாரணமாக போரில் வெற்றி பெற்று வருகின்ற அரசர்கள்படைவீரர்கள்மற்றும் தலைவர்களுக்கு இவ்வாறு ஒலிவ இலைகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்இயேசுவை வரவேற்றவர்கள் தங்கள் போர்வைகளை பாதையின் மேல் போட்டு இயேசுவிற்குசெங்கம்பழ வரவேற்பு கொடுக்கிறார்கள்இயேசு கழுதைக் குட்டியின் மீது வருகிறார்இவையனைத்தும் அடையாள மொழிகள்இயேசுபோர்த் தலைவர்களைப் போல் வெண்புரவியில் அல்லாமல்சாதுவான கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து வருவது அவரது அரசின்வித்தியாசமான சாந்தமான கொள்கையைக் காட்டுகிறது
போருக்கு சென்று நாடு திரும்பும் வெற்றி பெற்ற அரசர்ஒன்றில் தன் வெற்றியைக்கொண்டாடுவார் அல்லது நாட்டிலே புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவார்இதனைப்
போலவே இயேசுவுடைய எருசலேம் வருகையும் அமைகிறதுஇயேசு எருசலேம் வருவதுஅவருடைய மனித வாழ்வின் இறுதி நாட்களை அறிவிப்பது போல அமைகிறதுஇதனைபோருக்காக முன் வரும்வருகை என்றும் கூடச் சொல்லலாம்
குருத்தேலை வருகையை அனைத்து நற்செய்திகளும் காட்டினாலும் (காணக் மத்தேயு 21,1-11: மாற்கு 11,1-10: லூக்கா 19,28-38: யோவான் 12,12-18) யோவான் மட்டுமே ஒலிவ 
இலைகளைப் பற்றி பேசுகிறார் (காண்க யோவான் 12,13). 



(லூக்கா 22, 14 - 23, 56)

லூக்கா எழுதிய படிபாடுகளின் வரலாறை இவ்வாறு பிரிப்போம்

விடுதலை தரும் பாஸ்கு உணவு
உறவின் மேசையில் கலவரம்
இறைவனின் துயரமும் கைதும்
தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு
பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்முடிவு
வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல்
உயிருக்கு மரண தண்டனை
மீட்பின் சிலுவைப் பாதை
தேய்வத்தை சிலுவையில் அறைதலும் மரணமும்
உயிரின் நல்லடக்கம்


விடுதலை தரும் பாஸ்கு உணவு (22,7-20), இயேசு புதிய பாஸ்கா உணவாகிறார்.

1. லூக்கா மாற்கு மற்றும் மத்தேயுவைப்போல ஆண்டவரின் இராவுணவை பாஸ்காவுணவாகவேகாட்டுகிறார்இயேசு பேதுருவிடமும் யோவானிடமும் அடையாளங்கள் வாயிலாக பாஸ்காகொண்டாடும் இடத்தைப்பற்றி சொல்லுவதுஒருவேளை தான் முன்கூட்டியே கைதாகமல் 
இருப்பதற்கு என கருதலாம்வழமையாக பெண்கள் தண்ணீர் குவளைகளை சுமந்து கொண்டுவருகின்ற காலங்களில்ஆண்கள் அதனை சுமப்பது சீடர்களுக்கு நல்ல அடையாளமாகஅமைகிறது

2. லூக்கா இயேசுவை உண்மையான பாஸ்கா உணவாக காட்டுகிறார்நான் ஆவலாகஇருந்தேன் என்று இயேசு சொல்லுவதன் மூலம்இந்த பாஸ்காவுணவு இயேசுவிற்கு முக்கியம்வாய்ந்ததாக அமைகிறதுஇறையாட்சி நிறைவேறும் மட்டும் இனி இந்ந பாஸ்கா உணவைஉண்ணமாட்டேன் என்று இயேசு சொல்வதுஇறையாட்சி என்பது ஒரு தொடர் பணி அதுசாதாரண பாஸ்காiவிட முக்கியமானதுஇறையாட்சின் முன் இப்படியான கொண்டாட்டங்கள்இரண்டாம் தரமானவை எனக் காட்டுகிறது

3. வவ 19-20: இந்த வசனங்கள்தான் திருச்சபை ஒவ்வொரு நாளும் திருப்பலியில்பயன்படுத்துகின்ற வசீகர செபங்கள்இந்த செபங்கள் வருடாந்த பாஸ்கா விழாவையும் தாண்டிஇப்போது அவை இயேசுவை மையப்படுத்துகின்றனகடவுளே வரும் போது பூசாரிக்கு என்னவேலை எனக் கேட்கலாம்பாஸ்கா விழா பல வகையான செபங்கள்ஆசீர்கள்உணவு வகைபரிமாற்றங்களைச் சார்ந்ததுஇங்கே இயேசு தன்னை மையப்படுத்திஅப்பத்திலும் 
இரசத்திலும் தனது செய்தியை கொடுக்கிறார்இது ஒரு புதிய நித்திய உடன்படிக்கையைகுறிக்கலாம்நினைவாக செய்யச்சொல்லுவதுஇதே போன்ற பலியை மக்கள் தங்கள் வாழ்வில்பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறதுநினைவுகள் வாழ்வதற்கே என்ற தத்துவம் இங்கேதிருவருட்சாதனமாக்கப்படுகிறதுநற்கருனை ஏற்படுத்தப்பட்ட கதாம்சம் இரண்டுபாரம்பரியங்களில் நமக்கு வருகின்றன
). மாற்கு-மத்தேயு பாரம்பரியம்
). பவுல் பாரம்பரியம்சாதாரணமாக நான்கு கிண்ண இரசங்கள் பாஸ்காவிழாவிற்குபயன்பட்டனஇயேசு இரண்டை பாவித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

உறவின் மேசையில் கலவரம்: (22,21-38), பதவி மோகம்.

1. ஆசை யாரையும் விடாதுகடவுள் பக்கத்தில் இருந்தும் கூடபதவிகளை நாடச்செய்கிறதுலூக்கா இந்த காட்சியை சற்று வித்தியாசமாக பதிவு செய்கிறார்லூக்கா யூதாசின் காட்டிக்கொடுப்பை உதாரணமாக்கி ஒருவரின் பாவ வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு என்றி சொல்லிவிதி என்று ஏமாற்று வித்தை காட்டவேண்டாம் என்கிறார்யூதாசிற்கும் இந்த பன்னிருவருக்கும்இந்த மேசையில் பெரிய வித்தியாசங்கள் இல்லைஅவன் பணத்தை விரும்பினான்இவர்கள்பதவிகளை விரும்புகின்றனர்யார் பெரியவர் என்ற வாதம் இதனையே குறிக்கிறது

2. யார் பெரியவர் என்ற கேள்வியும் அதற்கான கதையிடங்களும் மாற்குவிலும் மத்தேயுவிலும்(மாற் 10,42-45: மத் 20,25-28) வேறு இடங்களில் அமைகின்றனஇயேசு இறையாட்சிக்கும்அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார்அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களேநன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கிறார்இயேசு உரோமையரின் ஆட்சியை நன்குவறுத்தெடுக்கிறார்இறையாட்சியில் அதிகாரம் கிடையாதுதன்னையொட்டி சேவை மட்டுமேஉள்ளது என்கிறார்(διακονία தியாகோனியா-சேவை).

3. சேவையின் தன்மைகளைப பற்றி பன்னிருவருக்கு அறிவுறுத்திய பின் இயேசு சீடர்களை 
இஸ்ராயேலரின் குலமுதுவர்களாக நியமிக்கிறார்இப்போது இந்த புதிய இஸ்ராயேலின் முதல்குலமுதுவரை அவருடைய எபிரேய பெயரில் அழைக்கிறார் (சீமோன் - Σίμων)சாத்தான் அனுமதிகேட்கிறான் என்பதன் மூலம்பன்னிருவரை சோதிக்க விசேட அனுமதி தேவை என்கிறார்ஆனால் தனது உடனிருப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார்பேதுருவின்பலவீனத்தை ஆண்டவர் சொன்ன வேளை பேதுரு தனது பலததை நிரூபிக்கப் பார்கிறார்சேவல்கூவாது என்பதுஇங்கே பேதுரு தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு விடியல்இல்லை என்பது போல உள்ளது

4. சீடர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வை மீளாய்வு செய்கிறார் இயேசு (9,3). சிலமாற்றங்களையும் உண்டு பண்ணுகிறார்அப்போது கடவுளின் தயவை நாடச்சொன்னவர்இப்போது பணப் பையையும்பயணப் பையையும் எடுக்கச் சொல்கிறார்இது ஆரம்ப காலதிருச்சபையின் அங்கலாய்பு நிறைந்த நாட்களை படம் பிடிக்கிறதுஆயுதங்களை எடுக்கச்சொன்னது போருக்கு தயாராக இருக்கச் சொல்லுவது போல உள்ளதுசீடர்கள் அதனை மிகஆழாக எடுத்து எத்தனை கத்திகள் வேண்டும் என கேட்கின்றனர்இயேசு சொன்னதுஆயத்தங்களைஆயுதங்களை அல்லஇங்கே வாள் என்று லூக்கா எழுதுவது ஒரு வகைபட்டாக்கத்தி (μάχαιρα மகாய்ராபட்டாக் கத்தி), அக்காலத்து கைத்துப்பாக்கி எனச்சொல்லலாம்இது தற்பாதுகாப்பிற்கேபோருக்கு உதவாது

இறைவனின் துயரமும் கைதும் (22,39-53), 
அழுக்காகிப்போன அன்பு முத்தம்.

1. மாற்குவின் கெத்சமெனி காட்சியை லூக்கா சிறியதாக்கியுள்ளார்ஒலிவ மலை லூக்காவிற்குமிக முக்கியமான இடம்இங்கு இயேசு பல முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் இதனால்தான்கெஸ்தமெனியை ஒலிவ மலையாக மாற்றுகிறார் லூக்காஅல்லது ஒலிவ மலையில்கெஸ்தமெனி 
இருந்ததை உறுதிப்படுத்துகிறார்.  மாற்குவிலும் மத்தேயுவிலும் இயேசுவை மூவர்பின்தொடர்ந்தனர்இங்கு சீடர் என்று பலரை உள்வாங்குகின்றார் லூக்காஆக செபமும்திருவிழி;ப்பும் அனைத்து சீடர்களின் கடமையாகிறதுசெபித்தலும் விழித்தலும் அனைவருக்கும்உரியது என்கிறார் போலசோதனை இயேசுவையும் விடவில்லை ஆனால் அவர் அதனைமேற்கொண்டதை கோடிடுகிறார்கிண்ணம்(ποτήριον-பொடெரியோன்) சாதரணமாககடவுளுடைய நீதியையும் கோபத்தையும் வெளிப்படுத்தலாம்இங்கு தீர்ப்பைவெளிப்;படுத்துகிறதுவானதூதரின் பங்களிப்பு இயேசு தனியாக இல்லை எனக் காட்டுகிறதுஇரத்த வியர்வை இயேசுவின் முழு மனித இயல்பை காட்டும் உருவகம்மறு புறத்தில் சீடர்களின்உறக்கம் மனித பலவீனத்தை காட்டஅதனை மேற்கொள்ள விழித்திருந்து செபிக்க வேண்டும்என்கிறார் இயேசுதுயரத்தால் அவர்கள் தூங்கினார்கள் என்று இவர்களின் தவறைசிறியவர்களின் தவறாக்குகிறார் லூக்கா

2. யூதாசை பன்னிருவருள் ஒருவன் என்பதன் மூலம் திருத்தூதர்களின் முரண்பாட்டைவிளக்குகிறார்இங்கே மாற்கு-மத்தேயுவுடன் சேர்ந்து போகிறார் லூக்காகாதல்அன்புநம்பிக்கைஉறவுநட்பு போன்றவற்றின் அழகிய அடையாளமான முத்தம் காட்டிக்கொடுக்கும்அசிங்கமான அடையாளமாக மாறுகிறதுபாவியென்று ஆண்களால் அடையாளமிடப்பட்டபெண்ணொருவர் ஆண்டவரின் பாதங்களை கண்ணீரால் முத்தமிட்டு கழுவினார்இங்கேதிருத்தூதரிலே ஒருவர் கன்னத்தை முத்தமிட்டு தீயவர்களிடம் தன் ஆண்டவரையேகையளிக்கிறான்(ஒப்பிடுக 7,38: 22,47)யோவான் நற்செய்திப்படி இயேசுவிற்காக படைவீரரின்காதை துண்டித்தவர் பேதுருலூக்கா நற்செய்தியில் மட்டுமே இயேசு காதுதுண்டிக்கப்பட்டவரை குணப்படுத்துகிறார்லூக்காவிற்கு இயேசு எப்போதுமே குணப்படுத்தும்ஆண்டவர்இருளில் நடக்கும் கைது மனிதர்களின் இருண்ட யுகத்தையும் இருண்டகுணங்களையும் காண்பிக்கிறதுநேரம் என்பது அதிகமாக யோவானில் நேர் பதமாகும்லூக்காஇங்கே இதனை எதிர் மறையாக பாவிக்கின்றார்இருட்டில் இவர்கள் செய்யும் செயல்கள்வர்கள்செய்யும் கொள்ளை செயலாகும் என்று சொல்கிறார் போலும்.

தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு (22,54-65), அபாயமாகிப்பபோன ஆண்டவர்.

1. தலைமைக்குருவின் வீட்டிற்கு இயேசுவை இழுத்துச் செல்வதுஏற்கனவே இவர்கள் அதனைதிட்டமிட்டிருந்தார்கள் என்பதனைக் காட்டுகிறதுமற்றைய நற்செய்திகளைப் போலல்லாதுபேதுருவை மையப்படுத்துகிறார் லூக்காஒரு மணித்தியாலத்தில் ஒரு பெண்ணும் இருஆண்களுமாக மூன்று பேர் பேதுருவை சோதிக்கின்றனர்ஒரு வேளை பேதுரு சோதனைகளின்போதும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதனைக் காட்டலாம்ஆண்டவர்பேதுருவை கூர்ந்து நோக்கினார் என்றுஎமது காட்டிக்கொடுப்புக்களில் கடவுள் கூர்ந்துநோக்குகிறார் என்கிறார் லூக்காமனம்நொந்து அழுததுஇயேசுவிடம் இருந்து ஓடிச்செல்லஅல்லமாறாக ஊதாரி மகனைப்போல தந்தையிடம் திரும்பிவரவே என்கிறார் லூக்காபேதுருபாவியானலும் துரோகியல்ல என்பது போல உள்ளது

2. இயேசுவை பரிகாசம் செய்தவர்கள் ஆலய காவலர்கள் என்பது லூக்காவின் எழுத்துஇங்கேமெசியா அல்லது மனுமகன் என்பதைவிடகடவுளின் உண்மையான இறைவாக்கினர் ஏளனம்செய்யப்படுகிறார் எனக் காட்டுகிறார்இறைவாக்கினரை பழிந்துரைப்பதன் மூலம் ஆலயத்தைகாக்கிற இவர்கள்ஆலயத்தின் கடவுளையே பழிந்துரைக்கின்றனர் என்கிறார் லூக்கா

பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்முடிவு (22,66-71): 
கடவுள் நிந்தனை சட்டம்கடவுளை நிந்திக்கிறது.

1. இயேசுவை இழுத்து வந்தவர்கள் மூப்பர்கள்தலைமைக்குருக்கள்மறைநூல் அறிஞர்கள்என்பதன் மூலம் அனைத்து தலைமைத்துவமும் இயேசுவை முடிவுகட்ட ஒன்றாக வருவதைஅழகாக காட்டுகிறார்லூக்காஇங்கே உரையாடல்களை பதிவு செய்வதன் மூலம்இயேசுசுயநினைவில் இருந்தார் என்பதனை காட்டுகிறார்எனவே இவர்கள் இயேசுவை கொலை செய்யதிட்டமிடுகின்றனர்இயேசு தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதில் மற்றையநற்செய்தியாளருடன் ஒத்துபோகிறார்மத்தேயு-மாற்குவில் இரவில் நடக்கும் சங்கக் கூட்டம்இங்கே விடியலில் நடக்கிறதுஇயேசு இத்தலைவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்அத்தோடு தனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது என்கிறார்தன்னை இங்கே மானிடமகனாக உருவகித்து கடவுளின் வலப்புறம் தன்னுடையது என்கிறார் (காண் தானி.7,13-14)தேவநிந்தனைச் சட்டம்தேவனையே நிந்திப்பதாக மனிதர்களின் நகைச்சுவையை விவரிக்கிறார்லூக்கா

2. சங்கத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லாமையால் அதனை தேடவழிதேடுகின்றனர்இயேசுவின் வாயிலிருந்து கேட்டோமே என்று இவர்கள் சொல்வதன் மூலம்கேட்டும் புரிந்து கொள்ளவில்லை என ஊகிக்க வைக்கிறார்

வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் (23,1-12)
நரியும் கழுதைப்புலியும்

1. பிலாத்து அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளிஐந்துவருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான்தன்னுடைய அலுவலகம் செசாரியாவில்இருந்தாலும்பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான்அரசியல் ரீதியான காரணங்களை தங்களுடைய சகோதரனுக்கு எதிராக ஒர் அன்னியஆட்சியாளரிடம் முன்வைக்கின்றனர்இந்த மூத்த சகோதரர்கள்மத ரீதயான காரணங்களைபலகடவுள் கொள்கைக்காரர்களான உரோமையர் செவிசாயார் என்பதனை உணர்ந்து:  புரட்சிகப்பம்அரச துரோகம் என்ற குற்றங்களை சுமத்துகின்றனர்மாற்குவைப் போல லூக்காவும்பிலாத்துவை அவ்வளவு கெட்டவனாக காட்டாமல்ஆண்டவரை குற்றம் சுமத்தியவர்கள்மேல்வாசகர்களின் பார்வையை இழுக்கிறார்பிலாத்துவுக்கு இயேசு கொடுக்கும் பதில்புதிர் போலஉள்ளது.

2. ஏரோது முன்னிலையில் இயேசுவின் காட்சி லூக்காவில் உள்ள சிறப்பம்சம்இந்தஇதுமேயனான ஏரோதுஒரு யூதன் அல்லமக்கபேயருடைய காலத்தில் கிரேக்கருடனும்உரோமருடனும் சேர்ந்துஹஸ்மோனிய ஆட்சியாளர்களை வஞ்சித்து ஆட்சியை பிடித்தவன்தான்இவன் பாட்டன்பெரிய ஏரோதுவரலாற்றில் பெரியவர்கள் இப்படியானவர்கள்தான்இவனைத்தான் ஆண்டவர் நரி என்று வர்ணிப்பார்பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர்குறைவில்லாத அரசியல் செய்கின்றார்கள்ஏரோது திருமுழுக்கு யோவானைப் பொருட்டுஇயேசுவைக் காணவிரும்பினான்இயேசு இவனுக்கு எந்த பதிலும் சொல்லாததுஅவனுக்குகிடைக்கும் உச்ச கட்ட தண்டனைஅவர் வார்ததைகளைக் கேட்க இவனின் காதுகளுக்குதகுதியில்லை எனச் சொல்லாம்அமைதி எவ்வளவு பலமான 
ஆயூதம் என்பதை இங்கு காணலாம்.  ஆலய படைவீரர்களைப் போல ஏரோதின்கூலிப்படைகளும் ஆண்டவரை ஏளனம் செய்கிறதுதீயவர்கள் நன்பர்கள் ஆகிறார்கள்இயேசுவின் உயிர்பின் பின்னர் இந்த நரியும்பிலாத்துவும் தங்களது தலைவர்களாலேயே தூக்கிவீசப்படுவார்கள்பிலாத்து ஏரோதுவை வைத்து அரசியல் லாபம்செய்யப் பார்கிறான்உரோமையர்கள் தங்களை கழுகு என்பார்கள்இவனுக்கு எந்த கழுகுக் குணமும் இல்லை




மரண தண்டனை (23,13-25), 
உயிருக்கு மரணதன்டனை.

1. இந்த காட்சி மூன்று செய்திகளை அழகாக வர்ணிக்கிறது
இயேசுவின் குற்றமின்மை
கலகக்கும்பலின் தீமைக்கான கொந்தளிப்பு
பிலாத்துவின் பலவீனம்
பிலாத்து மூன்று முறை அதாவது நிறைவாகஇயேசுவை விடுதலை செய்ய விரும்பியும்அவனால் முடியவில்லை என்று காட்டுவதன் மூலம் இந்த பாவத்திற்கு முழுகாரணமும் இந்தமக்கட் தலைவர்களே என்கின்றார் லூக்காபரபாவை இவர்கள் விடுதலை செய்யக் கேட்பதன்ஊடாக எப்படியாவது அல்லது எவரையாவது கொண்டு இயேசுவை முடிக்கவேண்டும் என்பதில்இவர்கள் உறுதியாக இருப்பது புலனாகிறது.17 லூக்காவின் மூல பிரதியில் இல்லைமாற்குவிலிருந்து உள்புகுத்தப்பட்டுள்ளது (மாற் 15,6). பிலாத்து இவர்களை கூப்பிட்டு பேசநினைக்கையில் கலகக் கும்பல் திடீரென சிலுவை மரணத்தைக் கேட்டு கத்துகிறதுலூக்காகிரேக்கத்தில்ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டார்கள் (ἀνακράζω அனாகிராட்ஸோ) என்றுஎழுதுகிறார்

2. ஆட்சியாளின் பலவீனமும்கலகக்காரர்களின் பலமும் எவ்வளவு ஆபத்தானதுஅவை 
இயேசுவிற்கு மரசண தண்டனையை கொண்டுவருகின்றனசிலுவை மரணம் உரோமையருடையஆட்சியில்பேரரசிற்கு எதிராக கலகம் அல்லது பாரிய குற்றம் என உரோமையர்கள்நினைத்ததை-செய்தவர்களுக்கு வழங்கப்பட்டதுஇது உரோமையர் அல்லாதவர்களுக்குமட்டுமே வழங்கப்பட்டதுயூதர்கள் இந்த தண்டனையை கடவுளுடைய சாபமாக கண்டனர்(காண் இனை 21,23: காலா 3,13). இங்கே கடவுளுடைய சாபத்தை கடவுளுக்கு கொடுக்கஇவர்கள் முயலுகிறார்கள்பிலாத்துவின் முயற்சி தோற்க்ககலகக் கும்பலின் கூச்சல்வெற்றியளிக்கிறதுஇயேசு இவர்களின் ஆசைக்கு கையளிக்கப்படுகிறார் என்று உணர்வுபூர்வமாக பதிகிறார் லூக்கா

மீட்பின் சிலுவைப் பாதை
 (23,26-31), பாதையான முதல் பயனம்

1. இந்த பகுதியில் எமது பாரம்பரிய சிலுவைப்பாதையின் சில நிலைகள் வருவதைக் காணலாம். (சீரேனூர் சீமோனும்எருசலேம் மகளீரும்). இந்த சீரேன் ஊர் சீமோன்பின்னாலில் வந்தசீரேனிய கிறிஸ்தவர்களை நினைவூட்கிறார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்சீமோன்இயேசுவின் சிலுவையை சுமந்ததை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கின்றனர்சீமோன்நல்ல சீடன் போல இயேசுவிற்கு பின்னால் நடக்கிறார். (காண் 14,27: சிலுவையைசுமந்துகொண்டு என்னை பின்பற்றாதவர் என் சீடராய் இருக்க முடியாது.)

2. பலமில்லாமல் சிலுவையைச் சுமந்தாலும்ஆண்டவராக இருக்கிறார் என்பதை எருசலேம்மகளீருக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து எண்பிக்கிறார் லூக்காஇங்கே ஆழமான பலகருத்துக்களை பதிகிறார் லூக்காஎருசலேம் மகளீர் என இஸ்ராயேல் இனத்தையேகுறிப்பிடுகிறார் லூக்காஇயேசு ஒசேயா 10,8 வரிகளையே நினைவூட்டுகிறார்லூக்கா 11,27ல்ஒரு பெண் மரியாவுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ந்ததற்கு மாறாக இப்போதுஇவர்கள் பிள்ளைப்பேற்றை நினைந்து அழுவார்கள் என்பதுலூக்கா வாசகர்களுக்கு தரும்கடவுளின் இறுதி நாள் பற்றிய பயங்கர காட்சிகளாகும்பாவம் செய்யாத ஆண்டவருக்கு இந்ததண்டனை கிடைத்தால்பாவத்திறகுரிய எருசலேமின் நிலை என்ன என்று கேட்கிறர் லூக்காஇந்த கேள்விற்கு விடை கி.பி 70இலும், 150 இலும் கிடைத்ததுஒசேயா 10,8 நிறைவேறியதுஉரோமையரின் இரக்கமற்ற இராணுவ கைகளால்

சிலுவையில் அறைதலும் மரணமும் (23,32-49).
உயிர்த் தூக்கம்.

1. லூக்காகொல்கொதா என்ற அரமேயிக்க சொல்லை பாவிக்கமால் மண்டையோடு என்றுகல்வாரி மலையின் உச்சியை குறிக்கும் ஒரு பொதுப் பெயரை பாவிக்கிறார்இயேசு இரண்டுகுற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையப்படுகிறார்இதனை மூன்றுநற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர் (காண் எசா 53,12). 

2. இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகள் பின்னாலில் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் மன்னிப்புவார்த்தைகளானதுஸ்தேவானும் இதனையே சொன்னார் (காண்தி.பணி 7,60). 

3. இயேசுவின் ஆடைகளை பகிர்ந்து தி.பாடல் 22,19 நிறைவுசெய்கிறார்கள்லூக்கா முழு 
யூத இனத்தையும் குற்றம் சொல்லாமல்அவர்களின் தலைவர்களையே கடுமையாக சாடுகிறார்லூக்காவழிப்போக்கர்கள் இயேசுவை கடவுளின் மெசியா என்று சொல்லி கிண்டல் செய்வாதாககுறிப்பிடுகிறார்இது ஆண்டவரின் திருஉரு மாற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது (காண்9,35). மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த இடத்தில் இயேசுவையூதர்களின் அரசர் என்றுசொல்லி ஏளனம் செய்ததாக எழுதியுள்ளார்கள்படைவீரர்கள் தங்களது இரண்டாம் தரஇரசத்தை அரசரான இயேசுவுக்கு கொடுப்பதன் மூலம்தங்களது பகிடிவதையைகாண்பிக்கின்றனர்

4. திருந்திய குற்றவாளியின் விசுவாச பிரமாணம்லூக்காவிற்கே உரிய பாணிஅவரின்நற்செய்தியின் மையப் பொருளும் இதுதான்பாவிகளையே தேடி மீட்கிற கடவுள்இங்கேயும்அதனையே செய்கிறார்இவரின் மூலம்ஆண்டவரின் அரசு வருகிறது என்பதையும்அதிலேஅரசர்இயேசு என்பதையும்மனந்திருப்பியவர்கள் இன்றே அதை அடைவார்கள் என்பதையும்இயேசுவின் மரணம்தான் புதிய விடுதலைப் பயணம் என்பதையும் அழகாக காட்டுகிறார்இன்று(σήμερον செமெரொன் - இன்றுஎன்பதன் மூலம்இயேசு காலங்களை நிர்ணயிக்கும் கடவுள்என்று காட்டுகிறார்பேரின்ப வீடு என்பது கிரேக்கத்தில் பரதெய்சொஸ் (παράδεισος) எனப்பொருள் படும்இது ஏதோன் தோட்டத்தை நினைவுபடுத்துகிறது

5. இயேசுவின் மரணத்தில் பல காட்சிகள் நடைபெறுகின்றனஇருள்தீமையின் நேரம் எனஉருவகிக்கலாம்திரை கிழிதல்இயேசுவின் மரணம்கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலானதிரையை கிழக்கிறது என நினைவூட்டுகிறதுஇயேசுயாராலும் கொலை செய்யப்படமுடியாதவர்அவர் கடவுள்தன் ஆவியை தன்னால் தான் கொடுக்க முடியும் என்று காட்டுகிறார்லூக்காசொந்த மக்கள் தம் மெசியாவை புறக்கணிக்க இங்கே ஒரு அன்னியன் அவரைஇறைமகனாக அடையாளம் காண்கிறார்மாரடித்து புலம்புவதன் மூலமாக பெண்கள் எப்போதும்லூக்காவில்  முக்கியமான இடத்தை பிடிப்பதைக் காணலாம்லூக்காகெஸ்தனமெனியில்சீடர்க்ள் இயேசுவை விட்டு ஓடினார்கள் என்று குறிப்பிடவில்லைஆகவே அவர்கள் இங்கேதெலைவில் நின்று அனைத்தையும் பார்திருக்கலாம்

உயிரின் நல்லடக்கம்
 (23,50-56)

1. அரிமத்தேயா எருசலேமிற்கு வடக்கிலிருந்த ஒரு சிற்றூர்யோசேப்பு இங்கே சக்கரியாஎலிசெபேத்துசிமியோன்அன்னா போன்ற நீதிமான்களின் வரிசையில் இடம்பெறுகிறார்
இவரும் இறையாட்சிக்கு காத்திருக்கிறார்புதுக் கல்லறை என்கிற இடத்தில் ஆச்சரியாமாகஒத்தமை நற்செய்தியாளர்களும் யோவானும் ஒத்துப்போகிறார்கள்தெய்வீக மக்கள் அல்லதுஅரசர்கள் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை பல வரலாற்று கதைகளில் காணலாம்.

2. பெண்கள் கல்லறையில் இயேசுவை தரிசித்தார்கள் என்று சொல்லி இது வதந்தியல்லஎன்கிறார் லூக்காஓய்வு நாளுக்கு எதிராக எவரும் எதனையும் செய்யவில்லை என்பதைஅவதானமாக சொல்கிறார் லூக்காஇது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சட்டங்களுக்குஎதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வாதத்தை தருகிறதுநறுமண தைலங்களையும்எண்ணைகளையும் ஆயத்தம் செய்கிறார்களே தவிரஅவற்றைக் கொணர்ந்து இயேசுவிற்கு ஓய்வுநாளில் பூசவில்லை என்கிறார்.


ஆண்டவரின் பாடுகளின் வரலாறு கல்லறையில் முடிவடையவில்லை
அது அவரின் உயிர்பிலே நிறைவடைந்து தொடர்கிறது
எருசலேமிலே அவர் நடந்த பாதைகளில் 
இன்றும் பல ஆயிரம் மக்கள் தினம் தினம் நடக்கிறார்கள்
ஆனால் அழுகையும் ஒப்பாரியும் இன்றும் நின்றபாடில்லை
இயேசு நம்முடைய பாதையும்பயணமும்,
நாம் அடையவேண்டிய இலக்குமாக இருக்கிறார்

இந்த குருத்து ஞாயிறிலே
கழுதைக் குட்டியில் வருகின்ற ஆண்டவர்
எங்களை எமது பாவங்கள்பலவீனங்களில் இருந்து மீட்பாராகஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...