புதன், 13 ஏப்ரல், 2022

 



பெரிய வெள்ளி - Good Friday
15.04.2022

எசாயா: 52,13-53,12
திருப்பாடல் 31
எபிரேயர் 4,14-16: 5,7-9
யோவான் 18,1 - 19,42



பெரிய வெள்ளி என்று தமிழில் அழகாக அழைக்கப்படும் இந்த தூய்மையான வெள்ளி பலவாறுபல மொழிகளில் அழைக்கப்படுகிறதுGood Friday என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்இத்தினம் God Friday என்பதிலிருந்து வந்ததென்கின்றனர் சிலர்இதனை விட இன்னும் சிலநாடுகளில் இது தூய வெள்ளிபெரிய வெள்ளிகறுப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறதுஜேர்மானியத்தில் இவ்வெள்ளி Karfreitag (வியாகுல வெள்ளி) என்று அழைக்கப்படுகிறதுஆண்டவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்தியது உயிர்ப்பு ஞாயிறு என்றால்அவரின் அளவுகடந்தஅன்பையும் இந்த மனித குலத்தின் பெறுமதியையும் உறுதிப்படுத்தியது இந்த வெள்ளியாகும்துன்பாமான வெள்ளியாக இருந்தாலும்மனித குலத்தை விடுவித்ததால்இதனை பெரிய-வெள்ளிஎன்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்


எசாயா: 52,13-53,12
துன்புறும் ஊழியர்

13இதோஎன் ஊழியர் சிறப்படைவார்அவர் மேன்மைப்படுத்தப்பட்டுஉயர்த்தப்பட்டுபெரிதும்மாட்சியுறுவார். 14அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்அவரது தோற்றம் பெரிதும்உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்ததுமானிடரின் உருவமே அவருக்குஇல்லை. 15அவ்வாறேஅவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்அரசர்களும்அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள்காண்பர்தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2இளந்தளிர் போலும் வறண்ட நில வேர் போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லைநாம் விரும்பத்தக்க தோற்றமும்அவருக்கில்லை; 3அவர் இகழப்பட்டார்மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்வேதனையுற்றமனிதராய் இருந்தார்நோயுற்று நலிந்தார்காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும்நிலையில் அவர் இருந்தார்அவர் இழிவுபடுத்தப்பட்டார்அவரை நாம் மதிக்கவில்லை. 4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர்தண்டிக்கப்பட்டார்அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். 6ஆடுகளைப் போல நாம்அனைவரும் வழிதவறி அலைந்தோம்நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்ஆண்டவரோ நம்அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். 7அவர் ஒடுக்கப்பட்டார்சிறுமைப்படுத்தப்பட்டார்ஆயினும்அவர் தம் வாயைத் திறக்கவில்லைஅடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறிபோலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 8அவர் கைது செய்யப்பட்டுதீர்ப்பிடப்பட்டுஇழுத்துச் செல்லப்பட்டார்அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்ஏனெனில்வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்என் மக்களின் குற்றத்தைமுன்னிட்டுக் கொலையுண்டார். 9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லைவஞ்சனை எதுவும்அவர் வாயில் இருந்ததில்லைஆயினும்தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். 10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும்ஆண்டவர் திருவுளம் கொண்டார்அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்எனவேதம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11அவர் தம்துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால்பலரை நேர்மையாளராக்குவார்அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12ஆதலால்நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்அவரும் வலியவரோடுகொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்ஏனெனில்அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

நான்காவது ஊழியர் பாடல் என்று அறியப்படும் இந்த இரண்டாவது எசாயா புத்தகப் பாடல்யூதமற்றும் கிறிஸ்தவ வழிபாடுகளில் மிகவும் முக்கியமான பாவனையை கொண்டுள்ளதுயார் இந்ததுன்புறும் ஊழியர் என்பதில்கிறிஸ்தவ மற்றும் யூத வல்லுனர்களிடையே பல வேறுபட்டகருத்தியல்களைக் காணலாம்யூத அல்லது எபிரேய ஆய்வாளர்கள்இந்த துன்புறும் ஊழியரைஇறைவாக்கினர் எசாயாஅல்லது தாவீதின் ஒரு வாரிசுஅல்லது புலம் பெயர்ந்த இஸ்ராயேல்இனம் என்று காண்கின்றனர்கிறிஸ்தவ பாரம்பரியம் மாற்றுக் கருத்துக்கள் இன்றிஇத்துன்புறும் ஊழியரை ஆண்டவர் இயேசுவாகவே காண்கின்றனர்

வவ. 13-15: இந்த வரிகள் கடவுளின் நேரடி சொற்களாக உள்ளனதாழ்தப்பட்டகீழ்மையிலிருந்துஊழியர் (עֶבֶד 'எவெத்-பணியாளர்) எவ்வாறு உயர்த்ப்பட்டு மேன்மையடைவார்என்பதை இவ்வரிகள் விவரிக்கின்றனபிற இனத்தார்அரசர்கள்என்று கூறப்படுவதால் இந்தஊழியர் துன்புறும் இஸ்ராயேல் இனம் என்றே எண்ணத்தோன்றுகிறது
இவர் மேன்மைப்படுத்தப்பட்டுஉயர்த்தப்பட்டுமாட்சியுறுகிறார் (יָרוּם וְנִשָּׂא וְגָבַהּ מְאֹד׃ யாரூம்வெநிஸ்ஸாவெகாவாஹ் மெ'ஓத்)இந்த நிலை சாதாரணமாக ஊழியர்களுக்குநடைபெறுவதில்லைஆக இந்த ஊழியர் வித்தியாசமான ஊழியர் என்பது காட்டப்படுகிறது

அவரைக் கண்ட பலர் திகைப்புறுகின்றனர்அவரது சாயல் உருக்குலைந்து மனித சாயல்இல்லாமல் இருக்கிறதுஅத்தோடு அவருக்கு மனித சாயலே இல்லாமல் இருக்கிறது 
(וְתֹאֲרוֹ מִבְּנֵי אָדָֽם வெதொ'அரோ மின்னெனே 'ஆதாம்அவருடைய சாயல் மனித பிள்ளைகளுடையசாயலுக்கு அப்பால்). 
எசாயா சைரசை விவரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறதுசைரஸ் முதலில் மேதியாவைஇணைத்துபின்னர் பாரசீக பேரரசை உருவாக்கினார்பபிலோனியாவை கைப்பற்றிய இவர்கிரேக்க மற்றும் எகிப்தின் எல்லைவரை சென்றார்இதனை செய்யும் முன்னர் இவரை அறிந்தஅரசியல் நோக்கர்கள்நிச்சயமாக இவரை நகைத்திருப்பர்இதனைத்தான் எசாயாஇறைவாக்குரைக்கிறார் எனலாம்கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தில் இந்த வரிகள்இயேசுவிற்கு அப்படியே பொருத்தமாக அமைகிறது

அவர் பிறவினத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்அரசர்கள் அவர் பொருட்டு வாய்பொத்திநிற்பர்,  அவர்கள் தங்களுக்கு சொல்லப்படாததை காண்பார்கள்இந்த வரியும் சைரசின் எழுச்சிபலருக்கு அதிசயமாக இருக்கும் என்பதை சூழலியலிலும்இயேசுவின் மாட்சியிலும் காட்டுகிறது.  

வவ. 1-3: இங்கே பேசுகிறவர் இன்னொருவர்ஊழியர் எவ்வாறு பரிகாசம் செய்யப்பட்டார் என்றுஇறைவாக்கினர் விவரிக்கின்றார்இங்கே சொல்லப்படுகின்ற விவரணங்கள் அதிகமானஅடையாளங்களை கொண்டதாய் அமைந்துள்ளனஇயேசு கைது செய்யப்படுவதற்கு முன்அவருடைய தோற்றமும்மக்கள் அவரிலே வைத்திருந்த மரியாதையும் இந்த இறைவாக்குடன்ஒத்துப்போகாதுகைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சாயல் இந்தவிவரணங்களுடன் ஒத்து போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன

இளம்தளிரும் வறண்ட நிலமும் (יּוֹנֵק யோனெக், אֶרֶץ צִיָּ֔ה 'எரெட்ஸ ட்சிவ்வாஹ்): 
பார்பதற்கற்ற விரும்பாத அமைப்பு (לֹא־תֹאַר லோதோ'அர்): 
இகழ்ந்து புறக்கணிக்கப்பட்டார் (נִבְזֶה וַחֲדַל  நிவ்ட்செஹ் வஹதல்): 
வேதனையுற்ற (מַכְאֹבוֹת மக்'ஓவோத்), நோயுற்று நலிநத்தவர் (חֹלִי ஹோலி), இழிவுபடுத்தப்பட்டவர் (נִבְזֶה நிவ்ட்செஹ்): 

வவ. 4-6: இந்த வரிகள் நச்சென்று இயேசு ஆண்டவருக்கு பொருந்துகின்றனஇதனை  
இந்தப்பாடலின் மையப்பொருள் என்று சொன்னால் மிகையில்லை. 'அவரும் நாங்களும்என்றுஒப்பிட்டு ஊழியரின் செயல்கள் விவரிக்கப்பட்டு மெச்சப்படுகின்றனமக்களின் பாவங்களை ஓர்ஆட்டின் மீது ஏற்றிஅந்த ஆட்டை சமூகத்திற்கு வெளியே அனுப்பிஅதனை கழுவாயாக்கும் மரபுஇருந்ததுஅந்த மரபில் இங்கே இந்த ஊழியர் கழுவாயாகிறார்

நம் பிணிகளைக் தாங்கிக்கொண்டார் (חֳלָיֵ֙נוּ֙ ה֣וּא נָשָׂ֔א ஹோலாயெனூ ஹுநாசா'), 
துன்பங்களை சுமந்துகொண்டார் (מַכְאֹבֵינוּ סְבָלָם மக்'ஓவெனூ செவாலாம்), 
நம் குற்றங்களுக்காய் காயமடைந்தார் (מְחֹלָל מִפְּשָׁעֵ֔נוּ மெஹொலால் மிப்ஷா'எனூ): 
நம் தீச்செயலுக்காய் நொருக்கப்பட்டார் (מְדֻכָּא מֵעֲוֹנֹתֵ֑ינוּ மெதூகாமெ'அஓநொதெனூ): 
நம் நிறைவாழ்விற்காக தண்டிக்கப்பட்டார் (שְׁלוֹמֵ֙נוּ֙ עָלָ֔יו ஷெலூமெநூ 'ஆலாவ்ய்)
அவர் காயங்களால் நாம் குணமடைகிறோம் (בַחֲבֻרָתוֹ נִרְפָּא־לָנוּ நஹவுராதோ நிர்பா'-லானூ): 

வவ. 7-9: இயேசுவை பலவேளைகளில் செம்மறி ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுவது வழக்கம்அதற்கான காரணத்தை விவிலிய வல்லுனர்கள் இந்த பகுதியிலிருந்து பெற்றிருப்பார்கள்எனலாம்
இயல்பிலே மிகவும் சாதுவான செம்மறிதான் கொலையுற போகிறதையும் அறியாதிருக்கிறதுஆனால் இந்த ஊழியர் அறிந்திருந்தும்கடவுளுக்கு பணிந்து அமைதியாயிருக்கிறார் என்கிறார்ஆசிரியர்ஒன்பதாவது வசனம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மிகவும் கடினமானதுஇறந்தபோதுசெல்வந்தராய் இருந்தார் என்பதற்கு பல அர்தங்கள் உள்ளனசெல்வரின் கல்லறையில்அடக்கம்செய்யப்பட்டார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ஆடுகளைப்போல் நாம் அனைவரும் வழிதவறி நடந்தோம் (כֻּלָּנוּ כַּצֹּאן תָּעִינוּ குல்லானூஉட்சோ'ன் தா'யினூ).
நம் அனைவரின் தீச்செயல்களையும் கடவுள் அவர் மேல் சுமத்தினார் (אֵת עֲוֹן כֻּלָּנוּ׃ 'எத்'அயோன் குல்லானூ).
சிறுமைப்படுத்தப்பட்டார்இருப்பினும் வாய் திறக்கவில்லை (וְהוּא נַעֲנֶה וְלֹ֣א יִפְתַּח־פִּיו֒ வெஹுநா'அனெஹ் வெலோயிப்தாஹ்-பிய்வ்). 
அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலவும்உரோமம் கத்தரிப்போர் முன்கத்தாத செம்மறி போலவும்வாய் திறவாமல் இருந்தார் (לֹא יִפְתַּח פִּיו லோயிப்தாஹ் பிய்வ்). 
வாழ்வோர் உலகினின்று அகற்றப்பட்டார் (נִגְזַר מֵאֶרֶץ חַיִּים  நிக்ட்சார் மெ'எரெட்ஸ் ஹய்யிம்). 
கொலையுண்டார் (נֶגַע நெகா'தண்டிக்கப்பட்டார்). கொலையுண்டார் என்பதுதண்டிக்கப்பட்டார் என்றே எபிரேய விவிலியத்தில் உள்ளது
வஞ்சனை எதுவும் செய்யாமல் அவருக்கு கல்லறை தீயவரோடு இருந்தது (אֶת־רְשָׁעִים֙ קִבְר֔וֹ 'எட்-ரெஷா'யிம் கிவ்ரோ). 
இறந்தபோது செல்வரோடு இருந்தார் (וְאֶת־עָשִׁיר בְּמֹתָיו வெ'எத்-'ஆஷிர் பெமோதாய்வ்). 

வவ. 10-12: முதலில் அவரை கழுவாயாக்குவதும்பின்னர் அவருக்கு நீடூழி வாழ்வு அருளுவதும்கடவுளின் திருவுளம் என்கிறார் (இரண்டாம்எசாயாபாவங்களை சுமத்தலும்பலருக்காகபரிந்து பேசுதலும் என்ற இந்த வாசகத்தின் செய்திஇஸ்ராயேல் இனம் என்பதனையும் தாண்டியாரே ஒரு நபரைக் குறிப்பது போலவே காணப்படுகிறதுயார் இந்த துன்புறும் ஊழியர்எசாயாவாசைரஸ் மன்னனாஇஸ்ராயேலாதாவிதின் ஒரு வாரிசாஅல்லது இயேசுஆண்டவரா
விசுவாச அல்லது திருச்சபையின் வரலாற்று கண்ணோட்டத்தில்இவை இயேசு ஆண்டவரைத்தவிர வேறு எவருக்கும் கச்சிதமாக பொருந்த வாய்ப்பில்லை என நினைக்கிறேன்
(וְהוּא חֵטְא־רַבִּים נָשָׂא வெஹு ஹெத்'-ராபிம் நாஷாஅவர் பலரின் பாவங்களை சுமந்தார்)

எபிரேயர் 4,14-16: 5,7-9:
இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை


14எனவேவானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும்தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாதுபற்றிக்கொள்வோமாக! 15ஏனெனில்நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டுஇரக்கம் காட்ட இயலாதவர் அல்ல் மாறாகஎல்லா வகையிலும் நம்மைப்போலச்சோதிக்கப்பட்டவர்எனினும் பாவம் செய்யாதவர். 16எனவேநாம் இரக்கத்தைப் பெறவும்ஏற்றவேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்அருள் நிறைந்த இறை அரியணையைத்துணிவுடன் அணுகிச் செல்வோமாக.


7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கிஉரத்த குரல் எழுப்பிகண்ணீர் சிந்திமன்றாடி வேண்டினார்அவர் கொண்டிருந்த இறைப்பற்றுகலந்த அச்சத்தை முன்னிட்டுகடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8அவர்இறைமகனாயிருந்தும்துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9அவர்நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக்காரணமானார். 10'மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குருஎன்று கடவுள்அவருக்குப் பெயர் சூட்டினார்.


இந்த புத்தகம் திருமுகமா அல்லது விரிவுரையா என்பதில் இன்னமும் கருத்தொற்றுமை
இல்லைகிறிஸ்தியலை மையமாக கொண்டுஅழகான இறையியல் வாதங்களைஅக்காலதேவைகளுக்கு ஏற்றபடி கொடுத்த இந்த புத்தகம்இன்றும் எமக்கு பல சிந்தனைகளைத்தந்துகொண்டே இருக்கிறதுஎபிரேயர் புத்தகத்தின் நான்காம் அதிகாரம்இயேசுவை இரக்கம்நிறைந்த நம்பத்தகுந்த தலைமைக் குரு என்று வர்ணிக்கிறதுஇன்றைய வாசகம் இரண்டுகருத்துக்களை முக்கியமாக முன்வைக்கிறது

இயேசு மாபெரும் தலைமைக்குரு
அவர் துன்புற்ற தலைமைக் குரு

வவ. 14-16: எந்த ஒரு தலைமைக் குருவும் தன்னுடைய மனிதத்தன்மை மற்றும் சுய பாவ நிலைஎன்று பலவீனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்எனவே வானங்களைக் கடக்கட இயலாதவர்ஆனால் இயேசுவிற்கு இந்த சிக்கல்கள் இல்லையென்பதால்அவர்தான் உண்மையானதலைமைக் குருவாகிறார்இயேசுவினுடைய இரக்க குணத்தை விவரிக்க (συμπαθέω) சும்பதேயோ என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளதுஇது ஒருவர்தன்னுடையவர்களுக்காக சேர்ந்து துன்பப்படுதலைக் குறிக்கும்ஆக இயேசுவின் இரக்கம்அனுதாபம் அல்லஅதையும் தாண்டிய அன்புகடந்த உடன்-இருப்பு என்கிறார் ஆசிரியர்வழமையாக அரியணைகள்ஆட்சியாளர்களின் அதிகாரங்களையும் செல்வங்களையும் குறிக்கும்இங்கே இயேசுவின் அரியணை இரக்கத்தின் அரியணை என்று விவரிக்கப்படுகிறது


. 7-: தலைமைக் குருக்களின் வேண்டுதல்கள் உன்னத தலைமைக் குருவான இயேசுவிற்குமுன்னால் இரண்டாம் தரமானவை என்கிறார்ஆசிரியர்εὐλάβεια எவுலாபெய்யா என்பதுஇறைபற்று கலந்த அச்சம் என்று அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளதுஇவர்களைபேறுபெற்றோர் என்று முதல் ஏற்பாடும் குறிப்பிடுகிறதுஇறையச்சமே மெய்யறிவின் தொடக்கம்எனவும் சொல்லப்படுகிறதுஇதுவே கடவுள் இயேசுவிற்கு செவிசாய்க்க காரணம் என்கிறார்ஆசிரியர்

வவ. 8-9: துன்பங்கள் வழியே கீழ்படிதல் (καίπερ ὢν υἱός, ἔμαθεν ἀφ᾿ ὧν ἔπαθεν τὴν ὑπακοήν, காய்பெர் ஹோன் ஹுய்யொஸ்எமாதென் அப் ஹோன் எபாதென் டேன் ஹுபாகொஏன்) என்றுமூல மொழியில் சிலேடை பாவிக்கப்பட்டுள்ளதுதுன்பப்பட்டு கற்றுக்கொண்டார்அல்லதுகீழ்படிதலை துன்புற்று கற்றுக்கொண்டார் என்றும் மொழிபெயர்கலாம்கீழ்படிதல் ஒரு விழுமியம்என்று இவ்வாறு காண்பிக்கப்படுகிறதுஇதனால் இப்போது தனக்கு கீழ்படுவோர்க்கு அதேஆசீரை வழங்குவார் என்று விவாதிக்கிறார்மெல்கிசதேக் (Μελχισέδεκமெல்கிசெதெக்என்னும் குருசாலேமின் அரசர் என்று தொடக்கநூலில் வருகிறார்இவரின் பின்புலங்களைப்பற்றிய அதிகமான புரிதல்கள் விவிலிய பதிவுகளில் இல்லை
(காண் தொ.நூ 14: தி.பா 110,4)தொடக்கமும் முடிவும் இல்லாமையாலும்ஆபிரகாமே 
இவருக்கு காணிக்கை செலுத்தியதாலும்முதல் ஏற்பாட்டில் இவர்தான் கடவுளின் முதல் குருஎன அறியப்படுகிறார்நீதியின் அரசர் என்றும் இவருடைய பெயருக்கு பொருளுண்டுஆக முதல்ஏற்பாட்டு குருக்களோ அரசர்களோ அல்லமாறாக இயேசுவே இவர் வழி வந்த உண்மையானதலைமைக்குரு என்பது ஆசிரியரின் வாதம்



நற்செய்தி 
யோவான் 18,1 - 19,42

யோவான் எழுதிய படி ஆண்டவரின் பாடுகளை தியானிப்பதற்கு முன்யோவானை பற்றிய சிறுவிளக்கம் தருவது நல்லதென நினைக்கிறேன்

. திருச்சபைகாலம் காலமாக நான்காம் நற்செய்தியின் ஆசிரியர்ஆண்டவர் இதயத்திற்குநெருக்கமான திருத்தூதர்யோவான் என நம்புகிறாள்

கலிலேயரான இந்த யோவான்ஆழமான அரேமேயிக்க மற்றும் கிரேக்க மொழிபுலமைத்துவத்தை எப்படி பெற்றிருப்பார் என்பதுபலரின் வாதமும்கேள்வியுமாகும்இவர்காலத்தில் கிரேக்க மொழி கலிலேயாவில் அறிவில் இருந்தது என்ற ஒரு புதுவாதமும் இப்போதுவளர்கிறது

அதிகாமான நிகழ்சி பற்றிய தரவுகள்யாரோ இயேசுவிற்கு மிக அருகில் இருந்துஅவதானித்தவர் போல பதியப்பட்டுள்ளன

. கொய்னே (சாதாரணகிரேக்க மெய்யியல் தழுவல்களையும்இராபினிக்க யூத கற்கைநடைமுறைகளையும் கொண்டமைந்துள்ளதும் இந்நற்செய்தியின் சிறப்பம்சமாகும்

. இயேசுவை மெசியாவாகவோஅல்லது தாவிதின் வழிமரபாகவோஅல்லது உன்னதமானமனிதராகவோ காட்டுவதை விடுத்துயோவான் நற்செய்தி இயேசுவை அதிவல்லமை வாய்ந்தகடவுள்அல்லது கடவுளின் வார்த்தையாகக் காட்டுகிறது

யோவான் நற்செய்தியில்இயேசு தான் செய்யும் எல்லா காரியங்களையும்முழு அறிவுடனும்விருப்பத்துடனுமே செய்வார்இயேசுவின் திட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன என்பதையும்யோவான் அழகாக காட்டுவார்சுருக்கக் கூறின்முதல் ஏற்பாட்டில் தோன்றிய அதோனாய்எலோகிம் இறைவன்தான் இந்த இயேசு ஆண்டவர் என்று யோவான் வார்த்தைக்கு வார்த்தைநிருபிப்பார்

இதனையே இந்த பாடுகளின் வரலாற்றிலும் யோவான் காட்சிபடுத்துகிறார்இந்த பாடுகளின்வரலாற்றை இவ்வாறு பிரிப்போம்:

. 18,1-11:    ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
.  18,12-27:  அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்
.  18,28-19,16:  பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்
.  19,16-22:   சிலுவையில் அறையப்படுகிறார்
.  19,23-24:  ஆடைகள் களையப்படுதல்
.  19,25-27:  தாயும் அன்புச் சீடரும்
.  19,28-30:   மரணம்
.  19,31-37:   விலா குத்தப்படுகிறது
.  19,38-42:   நல்லடக்கம்


.18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
(கடவுளை யாரும் கைது செய்ய முடியாதுஒளியை சிறைபடுத்த முயலும் தீப்பந்தங்கள்!!!)

யோவான் இந்த இடத்தை பெயர் சொல்லாவிட்டாலும்புவியியல் அடையாளங்களை வைத்தும்சமநோக்கு நற்செய்தியாளர்களின் தரவுகளை வைத்தும் இதனை கெத்சமெனி எனக்கணிக்கலாம்இயேசு அடிக்கடி எருசலேமிற்கு சென்றுவந்தார் என்பது யோவான் நற்செய்தியின்ஒரு படிப்பினைஇதனையும் இங்கு காணலாம்யூதாசு நெருப்புக்களோடும் தீப்பந்தங்களோடும்வந்ததுஇவை நடந்தது இரவில் (νύξ நுக்ஸ்) என்ற காட்டுகிறதுயோவான் நற்செய்தியில் இருள்(σκοτος ஸ்கொடொஸ்) தீமையின் ஆதிக்கத்தை காட்டுகிறதுசமநோக்கு நற்செய்திகளைப்போலல்லாது யோவான் இயேசுவின் மனிதத்தை அதிகமாக காட்ட மாட்டார்இங்கே இயேசுவேமுன்வந்து யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார்இது அவருடைய அதிகாரத்தை காட்டுகிறதுநான் தான் (ἐγώ εἰμι எகோ எய்மி) என்று இயேசு கூறும் வார்த்தைகள் முதல் ஏற்பாட்டில் கடவுள்தன்னை வெளிப்படுத்தும் போது கூறுகின்ற வார்த்தைகள்கடவுள் தன்னை வெளிப்படுத்தும்போது தீய சக்திகள் தரையில் விழுவது போல படைவீரர்களும்தலைமைக் குருக்கள் மற்றும்பரிசேயரின் காவலர்களும் தரையில் விழுகின்றனர்இயேசு தன்னோடு இருந்தவர்களையும்தனது அதிகாரத்தால் பாதுகாக்கிறார்கடவுள் தன் பணியாளர் மீது துன்பங்களை திணிக்கிறார்என்பது சரியான வாதமாகாதுயோவான் நற்செய்திப்படி படைவீரரின் காதை துண்டித்தவர்பேதுருஇயேசு அவ்வீரரை குணப்படுத்தியன் மூலம் வன்முறைக்கு ஆண்டவர் முடிவுகட்டுகிறார்

. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்
(கடவுள்குருக்களால் சோதிக்கப்படுகிறார்!!!)

படைபிரிவினர்ஆயிரத்தலைவர்யூத காவலர்என அதிகமானவர்கள் ஆண்டவரை கைது செய்யஒன்றாக சேர்ந்துள்ளனர்இது ஒரு போர்க் காட்சி போல இருக்கிறதுநன்பர்களைவிடபகைவர்கள் சுயநலத்திற்காக ஒன்றாக சேர்வது இலகுவான காரியம் போலஇதுவும் ஈழதமிழருக்கு நன்கு தெரிந்த அனுபவம்அன்னாஎற்கனவே இயேசுவைப்பற்றிவாக்குரைத்திருந்தவர் (11,50). இவர் முன்நாள் தலைமைக் குருகி.பி 7-14 ஆண்டுகளில்சேவையிலிருந்தார்இவரின் ஐந்து புதல்வர்களும் இறுதியாகஅவர் மருமகனான கயபாதற்போது சேவையிலிருந்தார்

!. பேதுரு மறுதலித்தல்முதலாவது தடைவையாக பேதுரு மறுதலிக்கிறார்பேதுருவுடன் சென்றஇந்த மற்ற சீடர் யார் என்று தெளிவாக சொல்லப்படவில்லைஇந்நற்செய்தியின் ஆசிரியராய்இருக்கலாம்இந்த சீடர் பேதுருவைவிட தலைவர்களிடம் பரீட்சாத்தியமாய் இருக்கிறார்முதலாவது தடவையாக ஒரு பெண்ணிடம் தன் ஆண்டவரை மறுதலிக்கிறார் பேதுருமறுதலித்தாலும் ஆண்டவரை விட்டு அகலாமல் அந்த வளாகத்திலுள்ளே சுற்றி வரும் பேதுருவைஒரு பலவீனன் ஆனாலும் புனிதன் என காட்டுகிறார் யோவான்

!. அன்னா,  யோவானில் இயேசுவை விசாரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்இங்கே 
இயேசுவே அதிகம் பேசுகிறார்இயேசுவை கன்னத்தில் அறைந்தவர்கும் இயேசுபதிலளிக்கிறார்
இயேசு அனைவருக்கும் சவால் விடுகிறார்.

!. பேதுரு இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் மறுதலிக்கிறார்பின்னர் சேவல்கூவுகிறதுஇந்த நிகழ்வுகள் சமநோக்கு நற்செய்திகளைப்போல் நாள் சாமத்தில்நடந்ததைப்போல் உள்ளன

. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்
(கடவுளை வைத்து புறவினத்தவரிடம் அரசியல் லாபம்)

!. பிலாத்து Πιλᾶτος, வரலாற்றில் நன்கு அறியப்பட்ட உரோமைய பதிலாளியோவான்பிலாத்துவை காட்டும் விதமும் தனித்துவமானதுபிலாத்துவை தந்திரக்காரனாகவும்உண்மையென்றால் என்வென்று அறியாதவர்களில் ஒருவனாகவும் காட்டுகிறார்

!. பத்து வருடங்களாக உரேமையயூதேய-கருவூல முகவராயிருந்த இவன், பல இரத்தகளரிகளுக்கு காரணமாக இருந்தான்ஆலயத்திற்குள் உரோமைய இராணுவ உருவங்களைகொணர்ந்தமைஆலய பணத்தை சுரண்டியமை போன்ற பல கேவலமான செயல்களையூதருக்கெதிராக செய்தான்யூதர்கள் எவ்வளவு கடினவாதிகளாக தங்களை உரோமையருக்குகாட்டினரோஅதனையே இவன் யூதர்களுக்கு பதிலுக்கு பதில் செய்தான்சமாரியருக்கு இவன்செய்த கொடுமையின் காரணமாக திபேரியஸ் சீசர் உரோமைக்கு இவனை திரும்பும்படிஅழைத்தார்இறுதியாக இவன் தற்கொலை செய்து கொண்டான் என்று எவுசோபியசு கூறுகிறார்உரோமைய ஆட்சியின் பல ஆளுமையற்ற தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டேமாண்டனர்மற்ற நாடுகளை சுரண்டியவர்தங்கள் இதயங்களை கையாளாமல்மாண்டுபோகிறார்கள்இதற்கு இவன் நல்ல உதாரணம்இவன் இயேசுவை விசாரித்தான்என்பதைவிடஇவன் தன்னைத்தானே விசாரிக்கிறான்இராஜதந்திரம் என்ற பெயரில்இன்றும்மனிதர்கள் செய்யும் மனிதமற்ற் செயல்களுக்கு இவன் நல்லதோர் உதாரணம்இயேசு முன்னால்இவன் தோன்றிய காரணத்தால் மட்டுமே வரலாற்றில் இன்றும் அறியப்படுகிறான்அசிங்கமாக

!. யோவான்பிலாத்து இயேசுவை விசாரித்த விதத்தைஇரட்டை அரங்கு விதத்தில்விவரிக்கிறார்இயேசு மாளிகைக்குள் இருக்கிறார்யூத தலைவர்கள் மாளிகைக்கு வெளியில்இருக்கின்றனர்பாஸ்கா காலமாகியதால் அவர்கள் உரோமைய இராணுவ மாளிகைக்குள்நுழையவில்லையாம்ஆனால் பாஸ்காவின் கடவுளும்பாஸ்கா செம்மறியும் உள்ளே இருக்கிறார்பிலாத்துவினதும்தலைவர்களினதும் கேள்விகளும் விடைகளும்இவர்களுக்கிடையில்எரிந்துகொண்டிருந்த பகைமையை நேரடியாகவே காட்டுகிறதுஆண்டவர் உள்ளேஅவர்தெரிந்த-அவரைத் தெரிந்த மக்கள் வெளியே..

!. பிலாத்து இயேசுவைநீ யூதரின் அரசனா என்று ஆச்சரியமில்லாமலே கேட்கிறான்உரோமையபேரரசில் கபபம்கட்டும் அரசர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்தான்பிலாத்துவின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் இன்னொரு கேள்வியார் யாரிடம் கேள்விகேட்பதுஇயேசு இரண்டு விடயங்களை பிலாத்துவிற்கு சொல்வது போல அனைத்து போலிதலைவாக்களுக்கும் சொல்கிறார்கடவுளுடைய அரசும்ஆட்சியும்உண்மையும் இவ்வுலகபோலித் தலைவர்களுக்கும் அவர்களின் பங்காளிகளுக்கும் தெரியவே தெரியாது என்பது அது.  

!. உண்மை, ἀλήθεια அலேதெய்யா, என்பது ஒரு முக்கியமான கிரேக்க மெய்யறிவு வாதம்இதுபிலாத்துவிற்கு மட்டுமல்லஅதிகமானவர்களுக்கும் புரியாது

!. பாஸ்கா விழாவிற்கு ஒரு கைதியை விடுதலை செய்வதுநற்செய்திகளில் மட்டுமேகாணப்படுகிறதுஅதுவும் கொலைகாரர்களை விடுதலை செய்வதும் புதுமையாய் உள்ளதுஉரோமையர்களும் கொலைகாரர்களே.. 

!. படைவீரர்கள் செய்யும் பரிகாசங்கள், போரிலே தோற்றும் சரணடையாத அரசனுக்கு செய்யும்அவமரியாதையை ஒத்திருக்கிறதுமுள் முடிசெம்போர்வைகள்மறைமுகமாக அரசஅணிகலன்களையே காட்டுகின்றனஇதோ மனிதன் (Ecce Homo) என்று பிலாத்து அன்றுசொன்னதுஇன்று பல முக்கிய வாக்காகிறதுநேரடியாக மொழிபெயர்த்தால்இதோ அப்பாவிஎன்றும் பொருள் படும்(காண்க செக்கரியா 6,12)

!. பிலாத்து தன்னுடைய அதிகாரத்தைப் பற்றி சொல்லஇயேசு தன்மேல் எவருக்கும் அதிகாரம்இல்லை என்கிறார்அதேவேளை காட்டிக்கொடுப்பவர்கள் பாவப்பட்டவர்கள் என்கிறார்.

!. கல்தளம்கபதா என்பது விசாரனை செய்யும் இருக்கைஇதன் எச்சங்களை வடக்குஎருசலேமில் இன்னும் காணலாம்இயேசு தன்னை கடவுள் என்று சொல்லி தேவ தூசனம்சொல்கிறார் என்று பொய் சொல்லியவர்கள்உரோமைய சீசரை தங்கள் கடவுளுக்கு நிகராகவைத்து அரசனாக்கி யூத தலைவர்கள் தேவ தூசனம் சொல்கிறார்கள் என்றுஅன்புச் சீடர்கோபத்தோடு ஆனால் சரியாகச் சொல்கிறார்இத்தோடு இயேசுவின் கொலைப் பொறுப்பையூதத் தலைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்



. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார்
(சிலுவை சுமக்கும் கடவுள்)

யோவான் நற்செய்தியில் இயேசு தன்சிலுவையை தானே சுமப்பார்கொல்கொதா என்கிறஎபிரேய சொல் லத்தின் மொழியில் கல்வாரியா என்று பொருள்படும்சிலுவையின் உச்சியில்வைக்கப்பட்ட பெயர் பலகை நான்கு நற்செய்திகளிலும் நான்கு விதமாக உள்ளதுமூன்றுமொழியில் எழுதப்பட்டதுஇயேசுவின் முழு உலக அரசாட்சியைக் காட்டுகிறதுஎழுதியதுஎழுதியதே என்பதுகலகக் காரர்களின் கூக்குரல் எப்போதும் எடுபடாது என்பதைக் குறிக்கலாம்பிலாத்து இயேசுவை வைத்து யூத தலைவர்களை ஏளனப்படுத்துகிறான்
Ἰησοῦς ὁ Ναζωραῖος ὁ βασιλεὺς τῶν Ἰουδαίων. இயேசுஸ் ஹொ நாட்சோராய்யொஸ் ஹொபசிலெயூஸ் டோன் யூதாய்யோன். (Latin Vulgate INRIIesus Nazarenus Rex Iudaeorum இயேசுஸ்நாட்சரெனுஸ் றெக்ஸ் யுதேயோரும்இயேசுநசரேயன்யூதர்களின் அரசன்

. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்
(தைக்கப்படாத தையல்)

சிலுவையில் அறையப்படும் கைதிகளின் உடைமைகளை படைவீரர்கள்தங்களுடையாக்கிக்கொண்டது வழமை(போரின் போதும்இடப்பெயர்வின் போதும்எமது உடமைகளை சாதாரண  இராணுவ சிப்பாய்களே தங்களுடையதாக்கினது நினைவுக்கு வரும்இன்னும் போரில்கொள்ளையடித்துஅதற்கு அர்தமும் கொடுக்கும் அழிவின் கலாச்சாரம் நின்றபாடில்லை!!! கொள்ளைக்காரர்கள்.) இங்கே இயேசுவின் தையலே இல்லாமல் இருந்த ஆடைஅவரின்தலைமை குருத்துவத்தை அடையாளப்படுத்துகிறது என்கின்றனர் சிலர்ஆனால் யோவான்இயேசுவை தலைமைக் குரு என்பதைவிட அரசராகவே காட்ட முயற்சிக்கிறார்(ὁ χιτὼν ἄραφος ஹொ கிடோன் அராபொஸ்தையல் இல்லாத ஆடை). 


  

. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்
(திருச்சபையும் தாயும்)

யோவான் நற்செய்திப்படி இதனை சாதாரண நிகழ்வாக எடுக்க முடியாதுபெயரிடப்படாதமரியாவும்யோவானும் அவர்களின் அடையாள உருவகங்களை வெளிப்படுத்துகின்றனர்இந்தநிகழ்வு பல படிப்பினைகளை தாங்கி வருகிறது

!. இந்த பெண் திருச்சபையையும்அன்புச் சீடர் கீழ்படிதலையையும் குறிக்கலாம்அன்னைமரியாளையும் திருச்சபையையும் குறிக்கலாம்

!. தொடக்க நூலில் வந்த முதல் பெண்ணும்மரக்கனியையும் போன்றுஇங்கே புதிய பெண்ணும்புதிய கனியும் என்றும் நோக்கலாம்

!. ஏன் யோவான் மட்டும் மரியாவை சிலுவையடியில் நிறுத்துகிறார்:
 - திருச்சபையின் பெண் தன்மையை காட்ட இருக்கலாம்.
 - மீட்பின் வரலாற்றில் பெண்மையின் தன்மையை காட்டவும் இருக்கலாம்
 - மரியாவின் நல் உதாரணத்தை காட்டவும் எணலாம்.
 - இனி மரியா இயேசுவிற்கல்ல மாறாக நமக்கும் தாய் எனக் காட்டவும் எனலாம்.

. 19,28-30: மரணம்
(கடவுளின் தூக்கம்)

யோவான் நற்செய்தியில் இயேசு ஆண்டவராக தனது மரண நேரத்தை தானே முடிவு செய்கிறார்அனைத்தும் நிறைவேறிவிட்டதென்பது என்பதையும் நன்கு அறிந்திருக்கிறார்தாகமாய்இருக்கிறது என்பது திருப்பாடல் 69,21 அல்லது 22,15 நினைவூட்டலாம்ஈசோப்புத் தண்டில்திராட்சை இரசம்எகிப்தில் வாயிற் கதவுகளில் பூசப்பட்ட இரத்தத்தை நினைவூட்டலாம்இப்படியாக இவரது மரணம் பலருக்கு உயிர்ப்பு கொடுக்க இவ்வாறு நிகழ்ந்தது என்றும் கூறலாம்இறுதியாக இயேசு வலியால் மரணமடையவில்லைமாறாக தனது ஆவியை தானேஒப்படைக்கிறார், παραδίδωμι பராதிதோமிகையளி என்று பொருள்இவ்வாறு அவர் முடிவையும்இங்கே அவரே முடிவுசெய்கிறார்


. 19,31-37: விலா குத்தப்படுகிறது.
(எலும்பு முறிபடாத பாஸ்கா செம்மறி)

யோவான் நற்செய்திப்படி இயேசு சிலுவையில் உயிர்விட்டதுவெள்ளி மதியம் எனவேஇதுபாஸ்காவிற்கு முதல் நாள்எனவே பலருடைய மரணம் விரைவுபடுத்தப்படுகிறதுஎனெனில்சனிக்கழமையில் (பாஸ்காவில்) உடல்கள் தொங்கப்படக்கூடாதாம்(உயிரைவிட சடங்குகள்முக்கியமாகிறதுஆண்டவரை கொலை செய்து அவரின் பாஸ்கா கொண்டாடப்படுகிறதுஆண்டவரை வெளியில் விட்டுவிட்டுஞாயிறு திருப்பலி ஆலயத்தில் ஒப்புக்கொடுப்பது போல)யோவான் இந்த பாடுகளின் வரலாற்றில் பல இறைவாக்குகள் நிறைவேறுவதை ஆரம்பம் முதல்குறிப்பிடுகிறார்விலாவில் இருந்துவந்த இரத்தத்தையும் நீரையையும்திருச்சபை தந்தையர்கள்நற்கருணைக்கும்திருமுழுக்கிற்கும் ஒப்பிடுகின்றனர்இயேசு புதிய ஆதாமாகவும்சிலுவைபுதிய மரமாகவும்திருச்சபைக்கு அருட்சாதனங்கள் இங்கே வழங்கப்படுகிறதுயோவான்இடையில் ஆண்டவரின் விலாவை குத்திய உரோமையரின் சாட்சியை பதிவு செய்கிறார் போலதோன்றுகிறதுஆண்டவரின் எலும்புகள் முறிபடாததுபாஸ்கா செம்மறியின் சட்டங்களைநினைவூட்டுகிறது (காண் வி. 12,46). குத்தியவரை ஊடுருவி பார்ப்பதன் மூலம் இயேசுநேர்மையாளர் என்று மீண்டும் நினைவூட்டப்படுகிறது (காண் செக் 12,10)



. 19,38-42: நல்லடக்கம்
(உயிரின் உறக்கம்)

நான்கு நற்செய்தியாளர்களும் அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் நல்லடக்கத்திற்குஉதவியதை பதிவு செய்திருக்கின்றனர்மத்தேயு நற்செய்திப்படி இந்த கல்லறைத் தோட்டம்அரிமத்தியா யோசேப்புடையதுநிக்கோதேம் இங்கே வந்து அரிமத்தியா யோசேப்புடன்ஆண்டவரை அடக்கம் செய்தது யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளதுயோவான் இவர்கள்இருவரையும் நல்லவர்களாக இருந்தாலும்பயந்தவர்களாகவும்இருட்டில்பணிசெய்கிறவர்களாகவும் காட்டுகிறார்இயேசுவின் சீடர்கள் இன்னும் வெளிப்படையாகபகலில் பணிசெய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார் போலஇயேசுவின்அடக்கத்திற்கு பயன்படுகின்ற நறுமண பொருட்கள் முப்பது கிலோக்களாக இருப்பதுஆச்சரியமளிக்கிறதுஇவ்வாறு யோவான் இறுதியாக ஓரு அரச நல்லடக்கத்தை காண்பிக்கிறார்புதிய கல்லறையும் இதனைத்தான் குறிக்கிறதுஇயேசு இவ்வாறு கன்னியின் வயிற்றில்உருவானவர்புதிய கல்லறையில் விதைக்கப்படுகிறார்உயிர்ப்பதற்காககடவுளுக்கே அடக்கச்சடங்கு!!!

கல்லறையில் உயிர்கள் தூங்குகின்றன என்பது கிரேக்க சிந்தனை
அங்கே உடல்கள் கடவுளின் வருகைக்காக காத்திருக்கின்றன என்பது கிறிஸ்தவ சிந்தனைதுயிலும் இல்லத்தில் உடலும் உயிரும் விதைக்கப்படுகின்றன 
என்பது ஈழ தமிழ் சிந்தனைகளின் ஒன்று
உயிரை அழிக்கலாம்உடலை சிதைக்கலாம்
உயிர்ப்பையும் உண்மையையும் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது

ஆண்டவரேஇயேசுவேபாடுகளைத் தாங்கி
மரணத்தை தழுவி உயிர்ப்பைக் காட்டிய நீர்
தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுக்கொண்டும்
அப்பாவிகளைக் காக்க விரைந்து வாரும்
துன்பமின்றி தூய்மையில்லை என்பதை கற்றுத்தாரும்ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குருத்தோலை ஞாயிறு (இ) 13.04.2025 - Palm Sunday

  குருத்தோலை   ஞாயிறு  ( இ ) 13.04.2025   Fr. M. Jegankumar Coonghe OMI, ‘Nesakkarangal,’ Iyakachchi, Jaffna.     முதல்   ...