புதன், 13 ஏப்ரல், 2022

பெரிய சனி, திருவிழிப்பு (இ) 16.04.2022

 

Holy Saturday C, 2019: பெரிய சனி, திருவிழிப்பு (இ)



பெரிய சனிதிருவிழிப்பு (16.04.2022

தொடக்க நூல் 1,1-2,2
விடுதலைப் பயணம் 14,15-15,1
எசாயா 54,5-14
எசேக்கியேல் 36,16-17,18-28
உரோமையர் 6,3-11
மத்தேயு 28,1-10

பெரிய சனிபாஸ்கு சனிஅல்லது திருவிழிப்பு சனி என்று பலவாறு இந்த நன்நாள்அழைக்கப்படுகிறதுஒரு சில தமிழ் மக்கள் சனிக்கிழமையை சனி பகவானுடைய நாளாகவும்சனி கிரகத்தினுடைய நாளாகவும் கருதி வழிபடுகின்றனர்யூத மக்கள் சனிக்கிழமையைகடவுளுடைய ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருகின்றனர்கிரேக்க-உரோமையர்சனிக்கிழமையைசனி கோளுக்கு அல்லது அதன் தேவைதையோடு ஒப்பிட்டு விவாதித்தனர்நமக்குஇயேசு ஆண்டவர் இந்த நாளில் ஓய்ந்திருந்தார் அல்லது துயில் கொண்டார்என்பதனால்இந்த நாள் முக்கியமான நாட்களில் ஒன்றாகவும்புனிதமான நாளாகவும்மாறுகிறதுஇந்த தூய்மையான நாளைப்பற்றி திருச்சபை பல படிப்பினைகளைமுன்வைக்கிறாள் அவற்றைப் பார்ப்போம்:

ஆண்டவர் இந்த நாளில் துயில் கொண்டார்,
ஆண்டவர் இறந்து பாதளங்களுக்குள் இறங்கி தொலைந்து போனவர்களை தரிசித்தார்,
செபத்தோடும் தபத்தோடும் இந்த நாள் செலவிடப்படுகிறது,
பிரதானமாக திருவருட்சாதனங்கள் இன்று நிறைவேற்றப்படாது,
திருச்சபை உயிர்ப்பு திருவிழிப்பிற்க்காக காத்திருக்கிறது,
இரவு வேளையில் இத்திரு விழிப்பு தொடங்குகிறது,
இத்திருவிழிப்பில் கடவுளின் மாட்சிமிகு செயல்கள் நினைவூகூரப்பபடுகின்றன,
புது நெருப்பு ஏற்றபடுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறது,
தியாக்கோன் (திருத்தொண்டர்அல்லது குரு பாஸ்கா புகழுரை பாடி கிறிஸ்துவை மாட்சிப்படுத்துவார்,
இன்றுஇறைவார்த்தைகள் மூலமாக மக்கள் வரலாற்றில் கடவுள் செய்தவற்றைநினைவுகூருவர்,
புதியவர்களுக்கு திரு முழுக்கு தரப்படுகிறதுஏற்கனவே அதனை பெற்றவர்கள் தங்களை புதுப்பிப்பர்,
இன்றைய நற்கருணை வழிபாடு ஆண்டின் முக்கிய வழிபாடாக உருப்பெருகிறது



தொடக்க நூல் 1,1-2,2

தொடக்க நூல் முதல் 11அதிகாரங்கள் இஸ்ராயேலின் தனி வரலாற்றைப் பற்றிவிவரிக்காமையினால் அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கப்படுகிறதுஇந்தபடைப்பு காட்சிகளினூடாக யாவே மரபு ஆசிரியரும், (மற்றவர்களும்கூடஇஸ்ராயேலை முழுவரலாற்றினுள் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர்இந்த முதல் அதிகாரங்களில் யாவேமரபிற்குகுரு மரபு அசிரியர் தொகுப்புரை வழங்க முயற்சிப்பதனால் இந்த இரண்டு மரபுகளும்மாறி மாறி வருவதனைக் காணலாம்இருந்தபோதிலும் யாவே மரபு தனது தனித்துவத்தோடுவாசகர்களை கவர்கின்றது. (நான்கு-மரபுகள் எண்ணக் கருத்தை சந்தேகித்துபுதியவிளக்கங்களை கொடுக்கும் புதிய விவிலிய ஆய்வுகள் வளர்ந்துவருகின்றன). படைப்புக்களைப்பற்றி பல கதைகள் மத்திய கிழக்கு மற்றும் எகிப்திய பிரதேசங்களில் இருந்தனஇவைமனிதனையும்உலகையும் மற்றும் கடவுளையும் பற்றி பல கேள்விகளை மேலதிமாக்கிச்சென்றனவிவிலிய படைப்புக் கதைகளில்ஆசிரியர்கள்படைப்புக்கள் கடவுளால் நடந்தப்பட்டநல்ல திட்டங்கள் எனவும்மனிதர் தங்களது தீய எண்ணத்தாலும்கீழ்படியாமையினாலும்சுயநலத்தாலும் கடவுளைவிட்டு அகன்று சென்றனர் எனவும் விவரிக்கின்றார்

. 1,1-2  : படைப்பின் தொடக்கம்

தொடக்க நூலின் முன்னுரை தனியாக தெரிவதன் மூலம்இது முழு முதல் ஏற்பாட்டிற்கும்தொடக்க உரை போல தோன்றுகிறதுமுதல் இரண்டு சொற்கள் (בְּרֵאשִׁית בָּרָא பெரெஷித் பாரா') மட்டுமே பல விவிலிய வாதங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது (בְּרֵאשִׁית בָּרָא אֱלֹהִים אֵת הַשָּׁמַיִם וְאֵת הָאָֽרֶץ׃  பெரெஷித் பரா எலோஹிம் 'எத் ஹஷ்ஷமாயிம் வெ'எத்ஹா'ஆரெட்ஸ் - தொடக்கத்தில் கடவுள் வானங்களையும் நிலத்தையும் படைத்தார்). முதலாவதுவசனத்தில்கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்ததால் அவர் முழுவல்லமையுடையவர் என காட்டப்படுகிறார்ஆனால் உலகு உருவற்று சாயலற்று இருந்ததால்கடவுள் அதனை எவ்வாறு வடிவமைத்தார் என்றுதொடர்கின்ற வசனங்கள் விவரிக்கின்றன
இரண்டாவது வசனத்தில் உலகம் இருளாகவும்கைவிடப்பட்டும்நீரால் மூடப்பட்டும்விசித்திரமான ஆவியால் ஆட்கொள்ளப்பட்டும் இருந்தது என விவரிக்கிறதுஇவை உண்மையில்உலகம் எவ்வாறு தொடக்கத்தில் இருந்தது என்பதைவிடகடவுள் உலகை எவ்வாறு படைத்தார்என்பதையே காட்ட முய்ற்சிக்கின்றன

. 1,3-23 : படைப்பு தொடர்கின்றது

வவ. 3-5: ஒளியின் படைப்புஇருண்ட உலகிற்குஒளி தோன்றுக (יְהִי אוֹר யெஹி 'ஓர் - உண்டாகுக ஒளி) என்று கடவுள் சொன்னவுடன் ஒளியேற்றப்பட்டதுஒளி இங்கே ஒரு பெரியசக்தியாக காட்டப்படுகிறதுநவீன அறிவியலாளரின் பெரு வெடிப்பு கொள்கையும் ஒளியோடுஉலகம் தோன்றியது என்று வாதிடுகின்றனர்கடவுள் ஒளிதோன்றியதன் பின்னர்அதனைநல்லதெனக் கண்டதன் மூலம்படைப்பு நல்லதாகவே உருவெடுக்கிறதுஇங்கேபாவிக்கப்படுகின்ற இரவுபகல்மாலைகாலை போன்றவற்றை எபிரேய நாட்கணிப்பில்விளங்கிக்கொள்ள வேண்டும்வார்த்தைக்கு வார்த்தை இக்கால கணக்கின் படி வாசித்தால்சரியான விளக்கங்களை கண்டுகொள்ள முடியாமல் போகும்

வவ. 6-8: நீர்த்திரள் பிரிக்கப்படுகிறது: (וִיהִי מַבְדִּיל בֵּין מַיִם לָמָיִם வியெஹி மவ்தில் பென் மாயிம்லாமாயிம்நீரிலிருந்து நீர் பிரிக) இவ்வாறு கடவுளுக்கு நீர்திரளின் மீதுள்ள அதிகாரம்காட்டப்படுகிறதுஇஸ்ராயேல் மக்கள் நீரை ஒரு வகை சக்தியாக கருதினர்உலகத்தின் கீழும்மேலுமாக நீர்திரள் இருப்பதாகவே கருதினர்கடவுள் ஒர் ஆகாய-விரிப்பினால் (רָקִיעַராகியா)அதனை பிரித்துள்ளார் என சிந்தித்தனர்.

வவ. 9-13: நிலங்கள்தாவரங்களின் படைப்புக்கள்உலர்ந்த தரைவிதவிதமான தவாரங்கள்கடவுளின் ஒழுங்கான படைப்புத்திறனுக்கு உதாரணங்கள்.

வவ. 14-19: சூரியன்சந்திரன்நட்சத்திரங்கள் (שְׁנֵי הַמְּאֹרֹת הַגְּדֹלִים ,הַכּוֹכָבִים ஷெனே ஹம்ஓரோத்ஹக்டோலிம்ஹகோகாவிம்-இரண்டு பெரிய ஒளிகள்நட்சத்திரங்கள்) போன்றவற்றை அக்காலமக்கள் தெய்வீக சக்திகளாக கருதினர்இங்கே கடவுளே அவற்றை படைக்கின்ற போதுஅவரின் பலம் தெரிகிறது அத்தோடு அவை பலமானவை ஆனால்படைப்புப் பொருள்கள என்பதுதெரிகிறது.

வவ. 20-23: பறவைகளும்மீன்களும்சில கடல் உயிரினங்கள்அக்காலத்தில் புராணக்கதைஉருவக உயிரினங்களாக பார்க்கப்பட்டுபயமுறுத்தும் விலங்கினங்களாக கருதப்பட்டனஇன்றுநாம் அறிந்துள்ள டைனோசர்கள் போன்றவற்றை அவர்கள் கடல் உயிரினங்களாகவும்பெயரிடப்படாத உயிரினங்களாகவும் கண்டனர்விலங்கினங்கள் முதலில் கடலிலும் மற்றும்நீரிலும் தோன்றின என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும்விவிலிய அறிவிக்கும் எதோதொடர்புள்ளது போல தோன்றுகிறது

. 1,24-31 : மிருகங்களினதும் மனிதரினதும் படைப்பு

வவ. 24-31: மனிதரின் படைப்புமனிதர் கடவுளின் உச்ச படைப்புபல புராணக் கதைகள்மனிதரை பாவியர் எனவும்தீயவர் எனவும்கலகக்காரர் எனவும் சொன்னவேளைதொடக்கநூல்மனிதரை கடவுளின் சாயலும்பாவனையும் என்று சொல்வதுமிகவும் அற்புதமானது 
(נַעֲשֶׂה אָדָם בְּצַלְמֵנוּ כִּדְמוּתֵנוּ 'அசெஹ் 'ஆதாம் பெட்சல்மெனூ கித்மூதெனூமனிதனை நம்சாயலிலும் வடிவத்திலும் படைப்போம்)கடவுள் இந்த இடத்தில் தன்னை பன்மையாகபாவிக்கிறார்நான் என்பது இங்கே நாம் என்று சொல்லிடப்படுகிறதுஇதற்கு இன்று வரை பலவிளக்கங்கங்கள் தரப்படுகின்றனஇதனை திரித்துவத்துடன் ஒப்பிட்டு ஒரு விளக்கம்கொடுக்கப்படுகிறதுசரியான விளக்கம் இன்றுவரை கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்(אֲנַחְנוּ 'அநாஹ்நூநாங்கள்:  אָנִי அனிநான்

மனிதனிடம் சகல படைப்புக்களும் ஒப்படைக்கப்படுகின்றனபடைப்புக்களை பாதுகாக்ககடவுள் மனிதனை ஏற்படுத்துகிறார்ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்றுயாவே மரபில்கடவுள்மனிதனிடம் பிரிவினையை காணவில்லை எனலாம்கடவுள் அனைத்தையும் நல்லதுஎனவே கண்டார்(וְהִנֵּה־ט֖וֹב מְאֹ֑ד வெஹின்னெஹ்-தோவ் மெ'ஓத்அனைத்தும் நல்லதாகஇருந்தது.)

. 2,1-3   : தூய ஏழாம் நாள்

கடவுள் எப்படி தான் படைத்தவற்றை விரும்பினாரோஅவ்வாறே ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்(וַיִּשְׁבֹּת בַּיּוֹם הַשְּׁבִיעִ֔י מִכָּל־מְלַאכְתּוֹ אֲשֶׁ֥ר עָשָׂה׃ வாய்யிஷ்வொத் பாய்யோம் ஹஷ்வி'மிக்கோல்மெலா'க்தோ அஷேர் 'ஆசெஹ் - ஏழாம் நாளில் ஓய்ந்தார்தான் செய்த அனைத்துவேலையிலிருந்தும்கடவுளுடைய நாளை புனிதப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியருக்குஇருந்ததுஅதனை இங்கே அழகாக காட்டுகிறார்கடவுளே ஓய்ந்திருந்தார்எனவேகடவுளுடைய நாள் கடவுளுக்கு உரியது என்பதே இங்கே மையப்படுத்தப்படுகிறதுஓய்வு நாள்(בַּיּ֣וֹם הַשְּׁבִיעִ֔י  பய்யோம் ஹஷ்ஷெவி'புனிதமானது என்ற சிந்தனை இதிலிருந்தே வருகிறது







விடுதலைப் பயணம் 14,15-15,1

இந்த பகுதியிலே ஆசிரியர்எகிப்திய கடவுள் என பார்க்கப்பட்ட பாரவோனுக்கும்
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கும்இடையிலான ஓர் போராட்டத்தை காட்டுகிறார்மக்களின் பயம் அவர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறதுகடவுள் மோசேயின் கையைக்கொண்டு கடலை பிரித்ததுஆண்டவரின் பணியாளர்களோடு அவர் இருக்கிறார் என்பதைக்காட்டுகிறதுகடல்தீய சக்தியாக இருந்தாலும் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்கிறார்ஆசிரியர்இங்கே விவிலிய ஆசிரியர் பபிலோனிய மற்றும் கானானிய சிந்தனையிலிருந்துமாறுபடுகிறார்மேகத்தூணும் நெருப்புத்தூணும் (עַמּוּד הֶעָנָן  'அம்மூத் ஹெ'ஆனான்மேகத்தூன்)கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகிறதுஇங்கே பார்க்கப்படவேண்டியது கடவுள் எப்படிஎகிப்தியரை சாவடித்தார் என்பதைவிடகடவுள் எப்படி இஸ்ராயேலரை பாதுகாத்தார் என்பதேஉண்மையில் செங்கடல் என்பது எங்கே இருக்கிறது என்பதிலும் இன்று வரை பல புதிர்கள்இருக்கின்றனசெங்கடலை கடந்து வந்த அனுபவம் இஸ்ராயேல் மக்கள் மட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கையை உண்டுபண்ணியதை முழு விவிலியத்திலும் காணலாம்மக்கள்ஆண்டவரிலும் அவர் பணியாளன் மோசேயிலும் நம்பிக்கை கொண்டனர் என்பதேஇந்தகதையின் செய்தியார் கடவுள் என்ற கேள்விக்கும் இந்த பகுதி விடையளிப்பதாக அமைகிறதுஆண்டவரா அல்லது பாரவோனாஎன்பதே அந்தக் கேள்விஎகிப்தியர்கள் இஸ்ராயேல்ஆண்டவரைக் கண்டார்கள் என்பதே அதன் விடை

எசாயா 54,5-14

கடவுள் இஸ்ராயேல் மக்கள்பால் கொண்ட அன்புஎன்ற மையப் பொருளில் இந்த பகுதிஅமைந்துள்ளதுஆண்டவருக்கு மிக முக்கியமான இனிமையான பெயர்கள் வழங்கப்பட்டுளளனஅவர் படைகளின் ஆண்டவர் (יְהוָ֥ה צְבָאוֹת அதோனாய் செவாஓட்), இஸ்ராயேலின் தூயவர் உன்மீட்பர் (גֹאֲלֵךְ קְדוֹשׁ יִשְׂרָאֵ֔ל கேஅலெக் கதோஷ் யிஸ்ராஏல்)உலக முழுமைக்கும் கடவுள் 
(אֱלֹהֵי כָל־הָאָרֶץ ஏலேஹெ கோல் ஹாஅரெட்ஸ்) என சொல்லிடப்படுகிறார்இந்த பகுதியிலேஎசாயாஇஸ்ராயேலை ஒரு தாயாகவும்இளம் மனைவியாகவும் (אֵשֶׁת נְעוּרִים 'எஷெத் நெ'ஊரிம்),ஒப்பிட்டு அழகான வார்த்தைகளால் இந்த பகுதியை நெய்துள்ளார்கடவுளை கணவராக 
இஸ்ராயேலுக்கு (כִּי בֹעֲלַיִךְ עֹשַׂיִךְ கி வோ'அலாய்க்; 'அசாயிக்) ஒப்பிடுவது அழகான உருவகம்
இது இங்கே அழகாக கையாளப்பட்டுளளது
இப்போது இஸ்ராயேலின் நிலைகைவிடப்பட்டவள் போல் இருந்தாலும்மீட்பராகிய கடவுள்அதனை மாற்றுவார் என்பது எசாயாவின் இறைவாக்குகடவுளின் தன் மன்னிப்பைநோவாவோடுசெய்துகொண்ட உடன்படிக்கையையோடு நினைவூட்டி உறுதிப்படுத்துகிறார்மலைகள்சாயினும் கடவுளின் நம்பிக்கை சாயாது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறதுஅடித்தளங்கள்கால்மாடங்கள்வாயில்கள் போன்றவை ஒரு நகருக்கு மிக முக்கியமானவை
இஸ்ராயேலை ஒரு நகராக ஒப்பிட்டு கடவுள் இந்த நகரை இப்போது புதுப்பிக்க இருக்கிறார்என்று எசாயா இறைவாக்குரைக்கிறார்நேர்மையில் நிலைநாட்டப்படுதல் (בִּצְדָקָ֖ה תִּכּוֹנָ֑נִי பெட்செதாகாஹ் திக்கோனானி) என்பதுநம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு மிகவும்நம்பிக்கை தரும் செய்தி


எசேக்கியேல் 36,16-17,18-28

கடவுள் தன்னுடைய பெயரின் பொருட்டு அதிசயங்கள் செய்வார்புது இதயத்தை தருவார்என்பது எசேக்கியல் இறைவாக்கினரின் தனித்துவமான செய்திகள்எசேக்கியலும் அகதியாகபபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர் என்று சில விளக்கவுரையாளர்கள்கருதுகின்றனர்எவ்வாறெனினும்இவருடைய இறைவாக்குகளில் புது இதயம்புதியஉடன்படிக்கைபுதிய சட்டம்புதிய நீதி போன்றவை மிகவும் அழகானதும்மிகவும்ஆழமானவையுமாகும்இன்றைய பகுதி இஸ்ராயேலின் புதிய வாழ்வைப் பற்றி பேசுகிறதுபெண்களின் மாதவிடாய் இரத்தமாக வெளியேறிய படியால் பலர் அன்று அதனை தீட்டாககருதினர்,  இந்த உதாரணத்தை ஆசிரியர் உவமையாக பாவிக்கிறார் (சிலர் இந்த இயற்கையின்ஆச்சரியத்தை இன்னமும் தீட்டாக கருதுகின்றனர்). ஆசிரியர் மாதவிடாயைப் பற்றி பேசவில்லைமாறாக பாவத்தைப் பற்றியே பேசுகிறார்எசேக்கியேல்ஏன் மக்கள் கடவுளை வழிபட்டாலும்வேறு நாட்டுற்கு அகதிகளாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விவரிக்கின்றார்
தீட்டானது இஸ்ராயேலருடைய நாடும் மக்களுமட்டுமல்லகடவுளுடைய பெயரும்கூட என்பதுஎசேக்கியேலுடைய புதிய போதனைஎனவே மக்கள் மட்டில் இல்லாவிடினும்தனது பெயரின்பொருட்டுடாவது கடவுள் மக்களை மீட்க வேண்டியவராக இருக்கிறார் என்பது இவரது வாதம்கடவுள் இரண்டு விதமான மீட்புச் செய்ற்பாடுகளை செய்ய இருக்கிறார்
). கூட்டிச் சேர்த்தல் (וְקִבַּצְתִּי אֶתְכֶם வெக்வாட்செதி 'எத்கெம்)
). சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டுவருதல் 
(וְהֵבֵאתִי אֶתְכֶם אֶל־אַדְמַתְכֶם׃ வெஹெவெ'தி 'எத்கெம் 'எல்-'அத்மத்கெம்)இதனையே இஸ்ராயேல்மக்கள் விரும்பினர்(இதுவே புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்கும்ஈழத்தழிழர் நமக்கும்தேவையாக இருக்கிறது.) ஆண்டவரே இவர்கள் விரும்பியவற்றை செய்யப்போகிறார் எனஅழகாக சொல்கிறார் இந்த புலம்பெயர்ந்த இறைவாக்கினர்எசேக்கியல். 26-28 வரையானவசனங்கள் மிகவும் முக்கியமானவைபல விசேட அம்சங்கள் இங்கே சொல்லப்படுகின்றன
). புதிய இதயம் (לֵב חָדָשׁ லெவ் ஹாதாஷ்)
). புதிய ஆவி (רוּחַ חֲדָשָׁה ரூவாஹ் ஹதாஷாஹ்)
). கல்லுக்கு பதிலான சதையான இதயம் (וְנָתַתִּי לָכֶם לֵב בָּשָׂר வெநாததி லாகெம் லெவ் பாசார்).). ஆண்டவரின் ஆவி (רוּחִי ரூஹி
). ஆண்டவிரின் நியமங்களும் சட்டங்களும் 
(בְּחֻקַּי תֵּלֵ֔כוּ וּמִשְׁפָּטַי תִּשְׁמְרוּ பெஹுக்காய் தெலெகூவுமிஷ்பாதாய் திஷ்மெரூ). 
இறுதியாக பழைய உடன்படிக்கை புதிய வார்த்தைகளில் சொல்லப்படுகிறதுஅதாவது கடவுள்இவர்களின் ஆண்டவராகவும்மக்கள் ஆண்டவரின் மக்களாகவும் இருப்பார்கள்இதுதான்மோசேயுடன் செய்து கொண்ட உடன்படிக்கைஅது இங்கே புதியதாகவும்வித்தியாசமானதாகவும் சொல்லப்படுகிறது


உரோமையர் 6,3-11

கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளை அழகாக விவரிக்கும் திருமுகங்களில் உரோமையருக்குஎழுதப்பட்ட திருமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்ததுஇந்த பகுதியிலே திருமுழுக்கினால்கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் நன்மை எடுத்துரைக்கப்படுகிறதுதிருமுழுக்கு (βάπτισμα பப்டிஸ்மாஒருவருக்கு புதுவாழ்வு அருளுகின்றதென்பது நமது நம்பிக்கைஇதனை மரணம்என்று வர்ணிக்கிறார் பவுல்திருமுழுக்கு இந்த நல்மரணத்தை கொண்டுவருகின்றதென்றும்திருமுழுக்கு ஒருவகை அடக்கச் சடங்கு என்றும் வித்தியாசமான பாவனையில்விளங்கப்படுத்துகிறார்
உரோமையர்கள் கிறிஸ்துவோடு உயிர்க்க வேண்டும் என்றால் அவர்கள் அவரோடு இறக்கவேண்டும் என்பது கட்டாயம் என்கிறார்பவுல் இங்கு உருவகங்களை கையாள்கின்றார் என்பதைஅவதானமாக நோக்க வேண்டும்திருமுழுக்கை ஒரு வகையான மாய வித்தையாக தவறாக கண்டஉரோமையருக்கு திருமுழுக்கு ஒரு திருவருட்சாதனம்அத்தோடு அது வாழப்படவேண்டும்என்கிறார்மாற்றம் இல்லாமல் திருமுழுக்கினால் பயன் இல்லையென்று காட்டமாகவும்சொல்கிறார்
பாவ வாழ்கை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது (ὅτι ὁ παλαιὸς ἡμῶν ἄνθρωπος συνεσταυρώθη, ஹொடி ஹொ பலாய்யொஸ் ஹேமோன் அந்த்ரோபொஸ் சுன்னெஸ்தாவ்ரோதே - நம்முடைய பழைய மனிதம் சிலுவையில் உடன் அறையப்பட்டுள்ளது) என்ற உருவகத்தின்வாயிலாக கிறிஸ்தவர்கள் பாவ வாழ்க்கையை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றவாதத்தை முன்வைக்கிறார்இறந்தோர் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டனர் என்றவரிகளின் ஊடாகபவுல் சிலருக்கு உயிர்ப்பு எற்கனவே கிடைத்துவிட்டது என நம்பினாரா எனஎண்ணத்தோன்றுகிறதுஇவரின் வாதங்களை ஒரு இறையியல் வளர்ச்சியாகவே காணவேண்டும்பாவம் என்பது மரணம்வாழ்வு என்பது உயிர்பு என்ற சிந்தனையே இங்கேநோக்கப்படவேண்டியதுபவுலுடைய உயிர்ப்பு மற்றும் திருமுழுக்கு போன்ற வாதங்களைவிளங்கிக்கொள்ள திருமுகங்களை அவற்றின் பின்புலத்திலும்எழுதப்பட்ட காலநிலைகளுக்கும்ஏற்றபடி வாசிகக் வேண்டும்

நற்செய்தி
லூக்கா 24,1-12
இயேசு உயிர்பெற்று எழுதல்
(மத் 28:1-10; மாற் 16:1-8; யோவா 20:1-10)
1வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப்பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; 2கல்லறைவாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே நுழைந்தபோதுஅங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. 4அதைக் குறித்து அவர்கள்குழப்பமுற்றார்கள்அப்போது திடீரெனமின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்அவர்களுக்குத் தோன்றினர். 5இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர்அவர்கள் அப்பெண்களை நோக்கி, 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்தேடுவதேன்?6அவர் இங்கே இல்லைஅவர் உயிருடன் எழுப்பப்பட்டார்கலிலேயாவில்இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். 7மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரேஎன்றார்கள். 8அப்போது அவர்கள்அவருடைய வார்த்தைகளை நினைவிற்கொண்டு 9கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவைஅனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். 10அவர்கள் மகதலாமரியாயோவன்னாயாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சிலபெண்களும் ஆவர்.அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். 11அவர்கள்கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை. 12ஆனால்பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார்அங்கு அவர் குனிந்து பார்த்தபோது உடலைச்சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள்வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

இன்றைய நற்செய்தி நாம் எற்கவே குருத்து ஞாயிறில் வாசிக்கப்பட்டதன் தொடர்ச்சிஇந்தபகுதியிலே மூன்று விதமான நபர்களை சந்திக்கின்றோம்அவர்கள்வானதூதர்கள்பெண்கள்திருத்தூதர்கள்நான்கு நற்செய்தியாளர்களும் இந்த நிகழ்வை வித்தியாசமாகவும் அடிப்படையில்ஒற்றுமையானதாகவும் காண்கின்றனர்(ஒப்பிடுகமத் 28,1-10: மாற் 16, 1-8: யோவான் 20,1-10)லூக்காவின் நற்செய்தி மற்றைய நற்செய்திகளை வாசித்தவர்களுக்கு பல கேள்விகளைஎழுப்பலாம் அவை

கல்லறையில் இருந்தது ஒரு மனிதராஇரண்டு மனிதர்களாஅல்லது அவர்கள்வானதூதர்களா?
பேதுரு கல்லறைக்கு தனியாக சென்றாரா அல்லது யோவானும் சென்றாரா?
இயேசு சீடர்களுக்கு கலிலேயாவிலா அல்லது எருசலேமிலா தோன்றினார்?
உண்மையில் இவை மாறுதல்கள் அல்ல மாறாக பல தரவுகளின் தொகுப்புக்கள் என்றநோக்கப்படவேண்டும்இப்பொழுது லூக்காவின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

.1: பெண்கள் வாரத்தின் முதல் நாள் சென்றதிலிருந்து அவர்கள் இந்த நாளுக்காககாத்திருந்தார்கள் என்பது புலப்படுகிறதுமுதல் நாள் என்பது எமக்கு ஞாயிறு தினமாகும்இவர்கள் நறுமணப் பொருட்களை எற்கனவே தயார் நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும்

.2: வழமையாக கல்லறையின் வாயிற் கதவுகள் பெரிய கற்களினால் மூடப்பட்டிருக்கும்பெண்களுக்கு அதனை திறப்பது சாதாரணமாக கடினமாக இருக்கும்.

.3: விலக்கப்பட்ட வாயிற் கல்லைப்போலவெறுமையான கல்லறையும்சுற்றப்பட்டதுண்டுகளும் இயேசு ஏற்கனவே உயிர்த்துவிட்டார் என்பததை புலப்படுத்துகின்றன

.4: வானதூதர்கள் லூக்கா நற்செய்தியில் மிகவும் முக்கியமனவர்கள்இங்கே லூக்காஇவர்களை வானதூதர் என்று சொல்லாமல்வெண்ணாடையணிந்தவர்கள் என்கிறார். (ἄνδρες δύο அந்திரஸ் துவோ - இரண்டு மனிதர்கள்)இவர்களுடைய திடீர் தோற்றமும்வெண்ணாடையும்இவர்கள் சாதாரன மனிதர்கள் இல்லையென்பதை காட்டுகிறது

.5: இதுதான் லூக்கா வாசகர்களுக்கும் அவரது கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும் செய்திதலைகுனிந்து நிற்காதீர்க்ள்உயிர்த்தவரை கல்லறையில் தேடாதீர்கள்!!!

.6-7: ஆண்டவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்று செயற்பாட்டு-வினை பாவிக்கப்பட்டுள்ளது(உயிருடன் எழுப்பப்பட்டார்)ஆக கடவுள் இயேசுவை உயிரோடு எழுப்பியுள்;ளார் என்கிறார்ஏற்கனவே கலிலேயாவில் இயேசு சீடர்களுக்கு சொன்னவற்றை இம்மனிதர்கள் 
நினைவூட்டுகின்றனர்ஆனால் ஏன் லூக்கா இதனை பெண்களுக்கு மட்டும் நினைவூட்டுகிறார்ஒருவேளை இந்த பெண்கள்ஆண் சீடர்களை விட இயேசுவை அதிகமான நம்பியிருக்கலாம்அல்லது இந்த பெண்கள் லூக்காவின் வாசகர்களை அடையாளப்படுத்தலாம்ஆண்டவர்மூன்றாம் நாள் உயிhப்;பார் என்பது நினைவுபடுத்தப்படுகிறதுஇங்கே செய்வினை (உயிர்ப்பார்பாவிக்கப்பட்டுள்ளதுஆக இயேசுவின் உயிர்ப்பிற்கு அவர்தான் காரணம்

வவ.8-10: இந்த பெண்கள்மகதலா மரியாயோவன்னாயாக்கோபின் மரியா போன்றவர்கள்லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே பரீட்சயமானவர்கள்இவர்கள் இம்மனிதர்களின் செய்தியைநினைவுகூறுகிறார்கள்சென்று திருத்தூதர்களுக்கு அறிக்கையிடுகிறார்கள்லூக்கா மீண்டுமாகபெண்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறார்.

வவ.11-12: திருத்தூதர்கள் இவர்களின் செய்தியை வெற்று செய்தியாக பார்த்து நம்பமறுக்கின்றனர்.  பேதுரு கல்லறைக்கு ஓடியதுநம்பாமையினால் என்பதை விடபெண்கள்சொன்னதை உறுதிப்படுத்த இவ்வாறு செய்தார் என்றும் எண்ணலாம்பயந்து ஒளிந்திருந்தவர்ஆண்டவரை அன்புசெய்த படியால்தான் ஓடிச்செல்கிறார் என்றும் நம்பலாம்ஆனால் பேதுருஇன்னும் ஆண்டவரின் உயிர்பை நம்பவில்லைவியப்புற்றவராகவே திரும்பிச் செல்கிறார்வியப்புஎன்கிற இந்த வார்த்தை (θαυμάζω தௌமாட்சோ - வியப்புஆச்சரியம்புதினம்)லூக்காநற்செய்தியில் அவ்வளவு நல்ல வார்த்தை கிடையாதுபல வேளைகளில் ஆண்டவரைநம்பாதவர்களே இவ்வாறு வியக்கின்றனர்இஃது லூக்காவின் செய்திஆண்டவர்உயிர்த்துவிட்டார்அவர் கல்லறையில் இல்லைபெண்கள் நம்பினர் அத்தோடு திருத்தூதர்இன்னும் நம்பவில்லைபின்னர் நம்புவர்

படைப்புகள் அன்று தொடங்கி இன்று வரை இறைவனின் அன்பையும் பிரசன்னத்தையும் நமக்குகாட்டும் ஒரு முக்கியமான புத்தகம்படைப்புகள் வாயிலாக பேசிய இறைவன்வரலாற்றின்நிகழ்வுகள் வாயிலாகவும் மக்களோடு பேசியுள்;ளார்இறுதியாக எல்லாவற்றிக்கும் மேலாக தனதுமகன் வாயிலாக பேசியுள்ளார்

ஆண்டவரேஅரச மற்றும் குழு பயங்கரவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகைகூட்டிச் சேர்த்து நல் உலகை அமைப்பீராகஆமென்


நம்முடைய ஆண்டவர் இறந்தாலும்அவர் கல்லறையில் இல்லை
வெறுமையான கல்லறை அவர் உயிர்ப்பின் அடையாளம்
ஆண்டவருக்கு தைலம் பூசுவதை விட
அவர் உயிர்ப்பினை அறிக்கையிடுவது முக்கியமானதாகிறது
அதனைத்தான் அவரும் விரும்புகின்றார்
பக்தி முயற்ச்சிகள் முக்கியமானவை
இருப்பினும் அவை மறைபரப்பாக மாற வேண்டும்

அன்பு ஆண்டவரே
உமது உயிர்பை அனுபவிக்கவும்
அதனை அறிவிக்கவும் வரம் தாரும்ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...