புதன், 13 ஏப்ரல், 2022

 


பெரிய-தூய வியாழன்
(பரிசுத்த வாரம்)
14,04,2022
முதல் வாசகம்விடுதலைப் பயணம் 12,1-8.11-14
பதிலுரைப்ப பாடல்திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 11, 23-26
நற்செய்தியோவான் 13,1-15

பெரிய வியாழனில்புதிய கட்டளையை ஆண்டவர் சீடர்களுக்கு கொடுத்ததால்கட்டளைவியாழன் என்று லத்தின் மொழியில் அழைக்கப்படுகிறது (mandatum மன்டாதும்)நற்கருணையை ஏற்படுத்திய படியால் இந்த வியாழன் குருத்துவத்தின் வியாழனாகவும்மாற்றம்பெறுகிறதுமிருகங்களையும்பறவைகளையும்தானியங்களையும் ஒப்புக்கொடுத்துதெய்வங்களை திருப்திப்படுத்தும்அக்கால-இக்காலபயங்கர உலகில் கடவுளே வந்துபாதங்களைக் கழுவிதன்னை ஒப்புக்கொடுத்துபலி என்றால் இதுதான் மக்களேஎன்றுபோதிக்கிறார்
இன்றைய நாள் திருச்சபையின் வரலாற்றிலும் கிறிஸ்தவ கலாச்சாரத்திலும் மிக முக்கியமானநாள்ஒவ்வொரு நாள் திருப்பலியும் இந்தமுதற் திருப்பலியின் மீள் வடிவமாகும்இந்தத்திருப்பலிதான் திருச்சபையின் இதயமும்மூச்சும்பெரிய வியாழனில் திருப்பலிக்கு பின்னர்செய்யப்படுகின்ற திருமணித்தியாலங்கள்கெத்சமனி தோட்டத்தில் ஆண்டவர் இயேசுமனக்கலக்கமும் வேதனையும் அடைந்து செபித்ததை நினைவூட்டுகின்றனஆண்டவர்கேட்டதற்கு இணங்க நாம் அவரோடு விழித்திருந்து செபிக்க முயல்கிறோம்ஆண்டவரின் இறுதிஇராவுணவு (Ultima Cena  உல்திமா சேனாபல்லாயிரம் ஆண்டுகளாககிறிஸ்தவ ஓவியம் மற்றும்சிற்பக் கலையின் அங்கமாக மாறியிருக்கிறதுஇவற்றுள் இத்தாலிய சிற்ப ஓவியர் வரைந்ததுஇன்று வரை மனிதரின் கலை ஆர்வத்தையும்ஆன்மாவின் தெய்வீக தேடலையும் அடுத்ததலைமுறைக்கு எடுத்துச் செல்கிறதுஇறுதி இராவுணவில் ஆண்டவர் பாவித்த கிண்ணத்தைவைத்து பல விதமான கதைகளையும்கட்டுக்கதைகளும் இயேசுவைச் சாராதவர்களால்உருவாக்கப்படுகின்றனசில குறிப்பிட்ட சினிமாக்காரர்களும்சில உலகியல்மெய்யியல்வாதிகளும்தங்கள் வங்கிக் கணக்குகளை பெருக்க இந்த புனிதமான நாளைபொருளாக பாவிக்க முயல்கின்றனர்இவர்களின் கற்பனை ஆண்டவரை நிந்திக்க முயல்கிறதுஇதற்கு நல்ல ஒரு உதாரணம் - பல வருடங்களுக்கு முன் வந்த ' டாவின்சி கோட்' (The Da Vinci Code - Dan Brownஎன்ற திரைப்படம்
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த நாள்உணர்வு பூர்வமான நாள்இதயத்திற்கு நெருக்கமானநாள்கட்டுக்கதைகளையும் புராணங்களையும் நம்ப வேண்டிய ஆன்மீக வறுமையில் நாமோநம்திருச்சபையோஅல்லது இறையரசோ இல்லைநமக்குஆண்டவரின் கிண்ணத்தைவிட அந்தகிண்ணம் தாங்கிய இரத்தமே முக்கியமானதுஏனெனில் அது ஆண்டவரின் இரத்தம்

வி.: 12,1-8.11-14
1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: 2உங்களுக்குமாதங்களில் தலையாயது இம்மாதமேஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! 3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்அவர்கள் இம்மாதம்பத்தாம்நாள்குடும்பத்துக்கு ஓர் ஆடுவீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில்உண்போரின்எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். 5ஆடு குறைபாடற்றதாககிடாயாகஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும்தேர்ந்தெடுப்பதுவெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். 6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதைவைத்துப் பேணுங்கள்அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின்அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். 7இரத்தத்தில் சிறிதளவு எடுத்துஉண்ணும்வீடுகளின் இரு கதவு நிலைகளிலும்மேல் சட்டத்திலும் பூச வேண்டும். 8இறைச்சியை அந்தஇரவிலேயே உண்ணவேண்டும்நெருப்பில் அதனை வாட்டிபுளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக்கீரையோடும் உண்ண வேண்டும்.
11நீங்கள் அதனை உண்ணும் முறையாவதுஇடையில் கச்சை கட்டிகால்களில் காலணிஅணிந்துகையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள்இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12ஏனெனில்நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்றுஎகிப்து நாட்டில்மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன்நானே ஆண்டவர்! 13இரத்தம்நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும்நான் இரத்தத்தைக் கண்டுஉங்களைக் கடந்து செல்வேன்எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போதுகொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

புளிப்பற்ற அப்ப விழா
14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும்இதனை ஆண்டவரின் விழாவாகநீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள்இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாகஇருப்பதாக!

பாஸ்கு (פֶּסַח பெசா) என்பது கடந்து போதலைக் குறிக்கும்பாஸ்கு விழா இஸ்ராயேலருடையமுக்கிய விழாவாகிஆண்டவர் எகிப்திலே இஸ்ராயேல் மக்களை மீட்டதையும்அழிக்கும் வானதூதர் இஸ்ராயேல் வீடுகளைக் கடந்து சென்றதையும்இஸ்ராயேலர் செங்கடலை கடந்ததையும்குறிக்கின்றனஅநேகமாக நிசான்-சித்திரை மாதம் 14ம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டதுஓரு செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிட்டு குடும்பமாக கொண்டாடப்பட்ட இந்த விழாஅதேமாதம் 15ம் தொடங்கப்பட்ட புளிக்காத அப்ப விழாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதுஇந்தஇரண்டு விழாக்களும் வரலாற்றிலே தனித் தனியாக தொடங்கப்பட்டுபின்நாளில்இஸ்ராயேலிரின் மீட்பு வரலாற்றோடு சேர்ந்துஒரே விழாவானதுமத்தேயுமாற்குலூக்காபவுல்போன்றோர் ஆண்டவரின் இறுதி உணவை பாஸ்கா விழாவாக காண்கின்றனர்யோவான்இறையியலிலே சற்று முன்னே சென்று ஆண்டவர் சிலுவையில் மரணித்ததேபாஸ்காவிழாவென்று காண்கிறார்

குருமரபு பாரம்பரியம் என்று காணப்படும் இந்த பகுதிமத்திய கிழக்கு பகுதிகளின் நாடோடிவாழ்கையை நினைவுகூறுகிறது என்பர் ஆய்வாளர்கள்வசந்த காலத்தின் தொடக்கத்தில் புதியமேய்சல் நிலங்களைத் தேடி மந்தைகளை கூட்டிச் செல்கிற நாடோடி மக்கள்தெய்வங்களிடம்பாதுகாப்பு வேண்டிசெய்யப்பட்ட ஒரு வகை பலி விழாக்களை ஒட்டி இது அமைந்துள்ளதுகுருபலிப்பீடம்ஆலயம் இவை இந்த பகுதியில் இல்லாமையானதுஇந்த விழா மிகவும் புரதனமானதுஎன காட்டுகிறதுமதத்திற்கு வெளியில் உண்டாகிபின்னர்இஸ்ராயேலின் மதத்திற்குள்உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்(எம்முடைய தைப்பொங்கலுக்கும் இப்படியான அழகானவரலாறு ஒன்று உள்ளது). 

வவ. 1-4: பல புராதன கால அட்டவணைகள்வசந்த காலத்தையே வருடத்தின் முதலாவதுமாதமாக கொண்டிருந்தனகுடும்ப விழா என்பதும்அயலவரையும் சேர்த்துக்கொள்ளட்டும்என்பதும்மனிதன் ஓரு சமூக பிராணி என்பதற்கு நல்ல உதாரணம்ஆண்டவர் ஆரோனிற்கும்மோசேக்கும் இடும் கட்டளையின் பின்னனியில்ஏற்கனவே வேறு மாதங்களை இவர்கள் முதல்மாதமாக கொண்டிருந்தனர் என்பது புலப்படுகிறதுகுடும்பங்களின் முக்கியத்துவத்தையும் இந்தவரிகள் காட்டுகின்றனகுடும்பங்கள் தனித்து இயங்கக் கூடாது அவை மற்றவர்களையும்உள்வாங்க வேண்டும் என்ற சிந்தனையும் இங்கே காணப்படுகிறதுகுடும்பம் என்பதை குறிக்கஎபிரேயம் 'வீடு' (בַּיִת பாயித்என்ற சொல்லையே பாவிக்கிறதுஇதிலிருந்து குடும்பம்இல்லத்தோடு சம்மந்தப்பட்டது என்பது புலப்படுகிறது

வவ. 5-6: ஆட்டின் தேர்வுத்தன்மை விவரிக்கப்படுகிறதுதொடக்க காலத்தில் அனைத்துஆடுகளும் நல்லவைகளாகவே கருதப்பட்டனபின்னர் இறையியலும்அறிவியலும் வளர வளரசெம்மறி நல்லதையும்சாதாரண ஆடு தீமையையும் குறிப்பதாக மாறிவிட்டதுஇதற்கு இவற்றின்உடலமைப்புக்கள் காரணமாக இருந்திருக்கலாம்குறைபாடு அல்லது நோய் என்பன சாபம்என்று நம்பப்பட்ட அந்த காலப்பகுதியில்குறைபாடுள்ள விலங்குகளும் அவ்வாறேகருதப்பட்டனஆண்டவர் வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையே தெரிவு செய்யலாம்என்கிறார்ஒரு வருடம் பூர்த்தியான ஆடு அத்தோடு கிடாய் போன்றவை தெரிவு செய்யப்படவேண்டும் என்பதிலிருந்து அக்கால சமுதாயம் பெண்விலங்குள்மற்றும் குட்டி விலங்குகள்மட்டில் அக்கறை உள்ளவர்களாக இருந்தனர் என்பதும் புலப்படுகிறது.  

வவ. 7-8.11: இரத்தங்களை பூசுதல் ஒரு வகை பாதுகாப்பு வேண்டி பலி ஒப்புக்கொடுக்கும்சடங்குசட்டங்களிலும் நிலைகளிலும் பூசுதல்இக்காலங்ளில் ஏற்கனவே இவர்கள் சிறிய வகைவீடுகளில் வாழத் தொடங்கிவிட்டனர் எனலாம்(கிறிஸ்து சிலுவையில் தொங்கிதனதுஇரத்தத்தால் அனைவரையும் ஒப்புரவாக்கிவிட்டார்ஆனாலும் இன்னும் சில கிறிஸ்தவர்கள்இயேசுவை திருப்திப்படுத்த சில ஆலயங்களில் அப்பாவி மிருகங்களை பலியிடுவதைஎன்னவென்று சொல்வதுஇது கிறிஸ்தவ நாகரீகம் மற்றும் கிறிஸ்தவ இறையலுக்குபொருத்தமானது அல்ல) இறைச்சியை உண்ணும் விதமும்கசப்புக் கீரையும்சாதாரணபாலைவன மேய்சல்காரர்களின் வறிய உணவை குறிக்கிறதுவாட்டி உண்ணுதல்சமைக்கபாத்திரம் இன்மையையும்கசப்புக் கீரை அவர்களின் தொட்டுண்ணும் உணவையும் குறிக்கலாம்உண்ணுபவர்களின் முறைஎதோ ஒரு அவசரத்தை காட்டுகிறதுகுறிப்பிடப்பட்டுள்ள ஆடைஅணிகள் சாதாரண நாடோடி மக்களின் உடைகள்இடையில் கச்சை (מָתְנֵיכֶם חֲגֻרִים மாத்நெகெம்ஹகூரிம்), காலில் காலணி (עֲלֵיכֶם בְּרַגְלֵיכֶם 'அலெகெம் பெராக்லெகெம்)கையில் கோல் (מַקֶּלְכֶם בְּיֶדְכֶם மக்கெல்கெம் பெயெத்கெம்) போன்றவைஇவர்களுக்கு அவசரமான ஒரு பயணஅனுபவத்தை நினைவூட்ட சொல்லப்படுகிறதுஅத்தோடு இவ்வளவு காலமும் சாதாரனசெமித்திய கலாச்சார சடங்காக இருந்ததுஇப்போது ஆண்டவரின் பாஸ்காவாக மாறுகிறதுஇதுவே விடுதலைப் பயண ஆசிரியரின் மையச் செய்தி

வவ. 12-14: தலைப்பிள்ளைகளின் மரணம்ஒரு இனத்தின் எதிர்காலத்தின் மரணத்தைக்குறிக்கும்கடவுள் கொலை செய்வாராஎப்படி கடவுள் தன் மக்களை காக்க இன்னொருமக்களினத்தை சாகடிக்க முடியும் (அவர்கள் பாவிகளானாலும் சரி)இஸ்ராயேலர்கடவுள்மக்கள் என்றால் எகிப்தியர் யார் மக்கள்இவை தற்காலத்தில் நம்பிள்ளைகளால் எழுப்பப்படும்கேள்விகளில் சிலஅவை நியாயமான கேள்விகளும் கூடஇங்கே கடவுள் எகிப்தியரைசாவடித்தார் என்பதை விடகடவுள் துன்புற்று துணையில்லாமல் இருந்த இஸ்ராயேலரைகாக்கிறார் என்பதையே கருப்பொருளாக எடுக்க வேண்டும்பாரவோன் தன்னை கடவுளாகநினைத்ததும்அவர் மக்களும் அவர் தலைவர்களும் இந்த பாரவோனின் மோலாதிக்கசிந்தனைக்கு உரம் இட்டதும்அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கின்றனகடவுள் எகிப்தியரைஉடனடியாக தண்டித்ததாக விவிலியம் காட்டவில்லை மாறாக பல சந்தர்பங்கள்கொடுக்கப்பட்டதன் பின்னரே தண்டனை இறுதியாக வருகின்றதுஅதே வேளைதண்டனையையும் கடவுள் நேரடியாக கொடுக்கவில்லை அதுவும் வானதூதர்கள் வழியாகவேவருகின்றனகடவுளின் தண்டனையும் அவர் கோபமும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாதவைஅத்தோடு அவற்றை சூழலியலில் மட்டுமே பார்க்க வேண்டும்
இவற்றை அவற்றின் பின்புலம் அறியாமல் வாசித்தால் நம்முடைய கடவுள் பற்றிய அறிவில் பலசவால்களை சந்திக்கலாம்எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளின் கோபத்தை மற்றும் தண்டனைபற்றிய ஆன்மீகத்தை இயேசுவின் பார்வையில் வாசிக்க வேண்டும்.   
இந்த வரிகளில்ஆண்டவர்தான் உன்மையான கடவுள் என்று காட்ட ஆசிரியர் கொடுக்கும்விளக்கம். אֲנִי יְהוָה அனி அடோனாய் (நான் கடவுள்), என்று இங்கே கடவுள் மோசேக்குசொல்வதுபின்நாளில் யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப் பற்றி சொல்லும்வசனங்களை ஒத்திருக்கின்றனஇரத்தம் முதல் ஏற்பாட்டில் பல அர்தங்களைக் கொடுக்கிறதுஇரத்தம் உயிரின் அடையாளம் என்பது மிகவும் முக்கியாமான ஒரு செய்திகடவுள் எகிப்தின்மக்கள்விலங்குகள் மற்றும் தெய்வங்கள் மேல் தீர்ப்பிடக்கூடியவர் என்பதும் இந்த கதையில்மிக முக்கியமான செய்திகளில் ஒன்று (מֵאָדָם וְעַד־בְּהֵמָ֑ה וּבְכָל־אֱלֹהֵי מִצְרַיִם אֶֽעֱשֶׂה שְׁפָטִים אֲנִי יְהוָֽה׃மெ'ஆதாம் வெ 'அத்-பெஹெமாஹ்வுவெகோல்-எலோஹே மிட்ஸ்ராயிம் ''எசெஹ் ஷெபாதிம்'அனி அதோனாய்)இரத்தம் உயிரின் அடையாளம் அத்தோடு அதனை மனிதர் சிந்தவோ அல்லதுஉண்ணவே கூடாது என்று இஸ்ராயேலர் கருதினர்இதன் முக்கியத்துவத்தையும் இங்குகாணலாம்
இன்றிலிருந்து இந்த விழா ஆண்டவரின் நினைவு நாளாக இஸ்ராயேல் மக்களுக்கு மாறுகிறது

திருப்பாடல் 115
சாவினின்று தப்பியவர் பாடியது
1அல்லேலூயாஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்ஏனெனில்எனக்கு இரங்குமாறு
நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2அவரை நான் மன்றாடிய நாளில்எனக்கு அவர் செவிசாய்த்தார்.
3சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன் பாதாளத்தின் துன்பங்கள்
என்னைப் பற்றிக் கொண்டன் துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரேஎன் உயிரைக் காத்தருளும்என்றுகெஞ்சினேன்.
5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.
6எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்நான் தாழ்த்தப்பட்டபோது
எனக்கு மீட்பளித்தார்.
7‛என் நெஞ்சேநீ மீண்டும் அமைதிகொள்ஏனெனில்ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.
8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும்செய்தார்.
9உயிர் வாழ்வோர் நாட்டில்நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
10‛மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
11‛எந்த மனிதரையும் நம்பலாகாதுஎன்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?
13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்துஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
14இதோஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என்பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்.
15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16ஆண்டவரேநான் உண்மையாகவே உம் ஊழியன்நான் உம் பணியாள்உம் அடியாளின்மகன்;
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரேஉமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19உமது இல்லத்தில் முற்றங்களில்எருசலேமின் நடுவில்ஆண்டவரேஉமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா!

இந்த 116வது திருப்பாடல் ஐந்தாவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதுஇதனை தனிமனித புகழ்சிப் பாடல் என சில ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்மிகவும் ஆபத்தான சூழ்நிலைஒன்றை பின்புலமாக காட்டுகிறார் ஆசிரியர்இதற்கு காரணமாக மனிதர்களின்ஏமாற்றுத்தனத்தையும்தன்னுடைய வெகுளிதனத்தையும் அவர் சாடுகிறார்இப்படியானசூழ்நிலையில் செபம் உதவிக்கு வருகிறதுகடவுள் அவர் குரலைக் கேட்கிறார்இந்த கடவுள்அருள் மிக்கவர்இரக்கமும்உண்மையுமுள்ளவர் என்று பாடல் தொடர்ந்து முன்னேருகிறதுஎபிரேய கவிநடையான 'படி அடுக்குமுறையில் இந்த பாடல்அமைக்கப்பட்டுள்ளது

1. துன்ப நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ.1-2)
1. செபத்தினால் துன்பங்களை சந்தித்தல் (வவ.3-4)
1. கடவுளில் முழுமையாக தங்கியிருத்தல் (வவ. 5-7)
1. நம்பிக்கை அனைத்தையும் புதியதாக்கிறது (வவ. 8-11)
2. கடவுள் துன்பங்களுக்கு விடையளிக்கிறார். (வவ.12-14)
2. கடவுள் துன்பங்களை அகற்றுகிறார் (வவ.15-16)
2. மீட்பு நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ. 17-19)

.1: அல்லேலூயா என்ற புகழ்ச்சி வார்த்தையில் இந்த திருப்பாடல் தொடங்குகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்)இந்த புகழ்ச்சி சொல் எபிரேய விவிலியத்தில் 115வது திருப்பாடலின்இறுதியான சொல்லாக இருக்கிறது. 116வது திருப்பாடலின் முதலாவது சொல்லாக இல்லை
ஆசிரியர்தான் ஏன் கடவுள் மீது அன்புகூருகிறார் (אָהַבְתִּי 'ஆஹவ்திஅன்புகூறுகிறேன்என்பதற்க்குஆண்டவர் தன் குரலைக் கேட்டதை காரணமாகச் சொல்கிறார்ஆண்டவர்ஒருவரின் குரலைக் கேட்கிறார் என்பதுஒருவருக்கு துன்பத்திலும் மன ஆறுதலைக்கொடுக்கிறதுஇதனை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகிறார்

.2: முதலாவது வரியில் சொன்ன அதே அர்த்தம் வேறு சொற்பிரயோகங்களில் இந்த வரியிலும்திருப்பிக்கூரப்படுகிறதுமன்றாடிய நாளில் ஆண்டவர் தனக்கு செவிசாய்த்ததாகச் சொல்கிறார்
בְיָמַי אֶקרָֽא׃ வெயாமய் 'எக்ரா'- நான் கூப்பிடும் நாட்களில்இந்த வரியின் இரண்டாவது பிரிவை, 'நான் வாழுகின்ற வரைதேவையில் ஆண்டவரை உதவிக்காக கூப்பிடுவேன்என்று சில ஆங்கிலவிவிலியங்கள் மொழிபெயர்க்கின்றன

.3: தன்னுடைய துன்பத்தின் நிலையை அடையாளங்களில் அவர் உருவகிக்கின்றார்சாவின்கயிறுகள் தன்னை பிணித்துக்கொண்டன என்கிறார்இதனை சாவின் கண்ணிகள் என்னைசூழ்ந்து கொண்டன என்று எபிரேய பாடம் தருகிறது אֲפָפ֤וּנִי ׀ חֶבְלֵי־מָ֗וֶת 'அபாபூனி ஹெவ்லேமோவெத். மேலும்  இதனை வேறு சொற்களில்பாதாளத்தின் துன்பங்கள் தன்னைபற்றிக்கொண்டன என்கிறார்பாதாளம் (שְׁאוֹל ஷெ'ஓல்)இங்கே இவருக்கு மரண அனுபவத்தைக்கொடுத்திருக்கும்
இப்படியான அனுபவங்கள் தனக்கு துன்பத்தையும் துயரத்தையுமே தருகிறது என்கிறார்צָרָ֖ה וְיָגוֹן אֶמְצָא׃ ட்சாராஹ் வெயாகோன் 'எம்ட்சா'- துன்பத்தையும் துயரத்தையும் நான்கண்டுகொள்கிறேன்

.4: ஆசிரியர் தான் ஆண்டவரை தொழுததாகச் சொல்கிறார்இதனை எபிரேய விவிலியம்בְשֵׁם־יְהוָה אֶקְרָא (பெஷெம்-அதோனாய் 'எக்ரா'), நான் ஆண்டவரின் பெயரில் அழைத்தேன் என்றுவாசிக்கிறது
இதனை அந்த வரியின் இரண்டாவது பிரிவு, 'என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன்என்று மீளசொல்கிறது

.5: ஆண்டவரை கெஞ்சி மன்றாடுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்கடவுள் அருளும்இரக்கமும் உள்ளவராக இருப்பதுதான் அதற்கான காரணம் என்கிறார்חַנּוּן יְהוָֹ֣ה וְצַדִּ֑יק ஹனூன்அதோனாய் வெட்சாதிக். ஆண்டவருடைய அருளும் நீதியும் இன்னொரு சொல்லின்விளங்கப்படுத்தப்பட்டுள்ளதுஅதாவது ஆண்டவர் இரக்கம் உள்ளவராக பாடப்படுகிறார்

.6: ஆண்டவர் எளிய மனத்தோரை பாதுக்கிறவர் (פְּתָאיִם பெதா'யிம்எளியோர்)தன்னையும்தான் தாழ்த்தப்பட்ட போது (דַּלּוֹתִי தல்லோதிநான் தாழ்த்தப்பட்டேன்) பாதுகாக்கிறார் என்கிறார்அதாவது தான் எளியமனத்தவர் இதனால்தான் ஆண்டவரின் பாதுகாப்பு தனக்கு கிடைக்கிறதுஎன்கிறார்வாசகர்களும் எளிய மனத்தோராய் ஆண்டவரின் பாதுகாப்பை பெறமுடியும் என்பதுஇவர் வாதம்

.7: தன் நெஞ்சை அமைதி கொள்ளச் சொல்கிறார்இந்த இடத்தில் தன் நெஞ்சைஇரண்டாவது ஆளாக வர்ணித்து அதற்கு தான் முதலாவது ஆளாக கட்டளை கொடுக்கிறார்பலமொழிகளின் இலக்கியங்கள் இப்படியான வழிமுறையை பின்பற்றுகின்றனஎபிரேய மொழிஇதனை (שׁוּבִי נַפְשִׁי) ஷுவி நப்ஷி - என் ஆன்மாவே திரும்பு என்று காட்டுகிறதுஅதாவது தன்ஆன்மாஇதனை உயிர் அல்லது சுயம் என்றும் மொழி பெயர்க்கலாம்இப்படியான அலையும்ஆன்மாவை மீண்டும் அமைதிக்கு திருப்ப கட்டளை கொடுக்கிறார்இதற்கு காரணமாகஆணடவர் அதற்கு நன்மை செய்தார் என்று பாடுகிறார்நன்மை செய்ததைஆசிரியர் இறந்தகாலத்தில் குறிப்பிடுகிறார்ஆக ஆண்டவரின் நன்மைத்தனம் வெறும் எதிர்காலம் அல்ல என்பதுபுலப்படுகிறது

.8: மூன்று விதமான ஆண்டவரின் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படுகின்றனஅதாவது
அவர் உயிர் சாவினின்று விடுவிக்கப்படுகிறது (חִלַּצְתָּ נַפְשִׁי ஹில்லாட்ஸ்தா நப்ஷி)
அவர் கண் கலங்காமல் பாதுகாக்கப்படுகிறது (אֶת־עֵינִי מִן־דִּמְעָה 'எத்-'எனே மின்-திம்'அஹ்). 
அவர் கால் இடறாதபடி காக்கப்படுகிறது  (אֶת־רַגְלִ֥י מִדֶּֽחִי 'எத்-ரக்லி மித்தெஹி). 

.9: இந்த வசனம் மிகவும் இனிமையான வசனம்இஸ்ராயேலர்கள் தங்கள் நாட்டைஉயிர்வாழ்வேர் நாடு என்று அழைப்பார்கள் (בְּאַרְצ֗וֹת הַחַיִּים பெ'அர்டஸொத் ஹஹய்யிம்). இவர்கள்இரண்டாவது வாழ்வு அல்லது மரணத்தின் பின் வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருக்காதபடியால்வாழ்வோரின் நாடே இவர்களின் இலக்காக இருக்கிறதை இந்த வரியில் காணலாம்
அதுவும் இந்த வாழ்வோர் நாட்டில்தான் ஆண்டவரின் திருமுன் வாழ்ந்திடுவதாகச் சொல்கிறார்இதனை ஆண்டவர் முன் நடந்திடுவேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது
இரண்டும் ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது (אֶתְהַלֵּךְ לִפְנֵי יְהוָ֑ה 'எத்ஹல்லெக் லிப்னேஅதோனாய்). 

.10: இஸ்ராயேல் புலம்பல் பாடல்கள் கூட நம்பிக்கையை மய்யமாக கொண்ட பாடல்களேதமிழ்க் கலாச்சாரத்தைப் போலஇஸ்ராயேல் கலாச்சாரத்திலும்புலம்பல் என்பது உண்மையில்நீதிக்கான ஒரு வேண்டலே
இந்த வரியில் தான் மிகவும் துன்புறுகிறதாக சொன்னாலும் (אֲנִ֗י עָנִיתִי 'அனி 'அநிதிநான்துன்புற்றாலும்), அவர் நம்பிக்கையோடு இருந்ததாகச் சொல்கிறார்

.11: இந்த வரியில் எந்த மனிதரையும் நம்பலாகாது என்று தன்னுடைய ஆதங்கத்தைப்பாடுகிறார்இது அவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றபின்புலத்தைக் காட்டுகிறது எனவும் எடுக்கலாம்
இங்கே இவர் மனிதர்களை சபிக்கிறார் என்பதைவிடமனிதர்களிலும் கடவுளை அதிகமானநம்புகிறார் என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கிறது எனலாம்இங்கே எழுவாய்ப் பொருள்மனிதர் மீதான கோபமல்லமாறாக கடவுள் மீதான ஆழமான விசுவாசம்எந்த மனிதரையும்என்று சொல்லி அனைத்து மனிதர்களையும் உள்வாங்குகிறார் போல தோன்றுகிறதுஎபிரேயமூல பாடம் அனைத்து மனிதர்களையும்பொய்யர்கள் என்கிறது (כָּל־הָאָדָם כֹּזֵב கோல்-ஹா'ஆதாம்கோட்செவ்). 

.12: முக்கியமான ஒரு கேள்வியை அனைத்து வாசகர்களிடமும் கேட்கிறார்ஆனால் கேள்வியைஅவர் தன்னிடமே கேட்பது போல அமைக்கிறார்ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்கும்எப்படி ஒருவரினால்பிரதிபலன் செய்ய முடியும் என்பது அவர் கேள்விஇதற்கு விடையாகமனிதர்களினால் எந்த விதமான கைமாறையும் கடவுளுக்கு செய்ய முடியாது என்பது விடையாகவரும்

.13: மீட்பின் கிண்ணம் என்ற சொல் இங்கே எழுவாய்ப் பொருளாக வருகிறதுכּוֹס־יְשׁוּע֥וֹת אֶשָּׂ֑א கோஸ்-யெஷு'ஓத் 'எஸ்ஸெ' (மீட்பின் கிண்ணத்தை உயர்த்துவேன்). இந்த மீட்பின்கிண்ணத்தைக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை தொழுவதாகச் சொல்கிறார்
இந்த வரி புதிய ஏற்பாட்டில்நற்கருணைக் கிண்ணத்திற்கு ஒப்பிடப்படுகிறதுஇருப்பினும் 
இந்த இடத்தில் இது திரவ பலிக்கான கிண்ணத்தையே குறிக்கிறது எனலாம்முதல் ஏற்பாட்டுக்காலத்தில்ஆண்டவருக்கு மிருக பலிதானிய பலிமற்றும் திரவப் பலிகள் காணிக்கையாககொடுக்கப்பட்டனதிரவ பலி என்பது எண்ணெய் மற்றும் இரசத்தைக் குறிக்கும்

.14: இந்த வரியுடன் ஒப்பிடுகின்றபோதுமுதல் வரி காணிக்கையை குறிப்பது தெளிவாகத்தெரிகிறதுஆண்டவருக்கு பொருத்தனைகளை தான் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார் 
(נְדָרַי לַיהוָה நெதாரய் லஅதோனாய்-ஆண்டவருக்கு பொருத்தனைகள்). பல விதமானபொருத்தனையாகக்  வழக்கிலிருந்திருக்கின்றனஉழைப்பில் பத்தில் ஒன்றைக் கொடுத்தல்நகர்களை கடவுளுக்கு அர்ப்பணித்தல்தலைச்சான் உயிரிணங்களை கடவுளுக்கு கொடுத்தல்செபங்களை பொருத்தனையாகக்  கொடுத்தல்அத்தோடு தலைமுடியையும் பொருத்தனையாகக்கொடுத்தலும் பிற்காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன
இவர் என்ன பொருத்தனை செய்வார் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லைஆனால்அதனை அவர் ஆண்டவர் மக்கள் முன்னிலையில் செய்வதாகச் சொல்கிறார் (כָל־עַמּֽוֹ கோல்-'அம்மோஅனைத்து அவர் மக்கள்). 

.15: இந்த வரியும் இன்னும் சற்று வித்தியாசமாக இருக்கிறதுவழக்கமாக மரணத்தை 
இஸ்ராயேலர்கள் போற்றுவது கிடையாதுமுக்கியமாக முதல் தேவாலயத்தின் காலத்தில்மரணத்தை அவர்கள் கடவுளின தண்டனை அல்லது ஒருவகையான துன்பமாகவே பார்த்தார்கள்அதுவும் சிறு பாராயத்தில் மரணம்அல்லது நல்லவர்களின் மரணம் போன்றவை அவர்களால்ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததுஅவர்கள் மரணத்தின் பின் வாழ்வையும் முதல்தேவாலயத்தின் காலத்தில் நம்பவில்லை
இந்த வரியில்ஆண்டவருடய அன்பர்களின் மரணம் அவர் பார்வையில் மதிப்புக்குரியதுஎன்கிறார் ஆசிரியர்יָקָר בְּעֵינֵ֣י יְהוָ֑ה הַ֝מָּ֗וְתָה לַחֲסִידָֽיו׃ யாகார் பெ'எனே அதோனாய்ஹம்மாவெதாஹ்லஹசிதாய்வ். கடவுளுடைய கண்களில்ல ஒப்பற்றதுஅவர் அன்பர்களின் சாவு

.16: தன்னுடைய அடையாளத்தை பல ஒத்த கருத்து வரிகள் தெளிவு படுத்துகிறார்தன்னைஆண்டவரின் ஊழியன் என்கிறார் (אֲֽנִי־עַבְדְּךָ 'அனி-'அவ்தேகாநான் உம் ஊழியன்). இந்த வரிமீண்டும் இன்னொருமுறை அதே வார்த்தைகளில் சொல்லப்படுகிறதுதமிழ் விவிலியம் ஊழியன்பணியாளன் என்ற ஒத்த கருத்துச் சொற்களைப் பாவித்தாலும்எபிரேயம் ஒரே சொல்லைஇரண்டு முறைபாவிக்கிறது (עַבְדְּךָ 'அவ்தேகா)இப்படியாக எபிரேயத்தில் முக்கியமான வரிகள்அமைக்கப்படுகின்றனஇறுதியாக தன்னை ஆண்டவரின் அடியாளின் மகன் என்றும் சொல்கிறார்(בֶּן־אֲמָתֶךָ பென்- 'அமாதெகாஉம் அடியாளின் மகன்)இதுவும் ஆண்டவரின் பணியாளனைகுறிக்கும் மிக முக்கியமான வார்த்தை பிரயோகம்

வவ.17-18: இறுதியாக தான் கடவுளுக்கு என்னென்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாகவிளங்கப்படுததுகிறார்.. ஆண்டவருக்கு நன்றிப் பலி செலுத்தி (זֶבַח תּוֹדָה ட்செவாஹ் தோதாஹ்நன்றிப் பலி)அவர் பெயரைத் தொழுவதாகச் சொல்கிறார்நன்றிப்பலி பலி வகைகளில் ஒன்று
அத்தோடு மக்கள் முன்னிலையில் ஆண்டவருக்கு பொருத்தனைகள் நிறைவேற்றுவதாகச்சொல்கிறார்இந்த வாக்குறுதியை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்

.19: ஆண்டவருக்கு அவர் செய்யவிருக்கின்ற பொருத்தனைகளை எங்கே செய்யப்போகிறார்என்பது விவரிக்கப்படுகிறதுஅதனை அவர் ஆண்டவரின் இல்லத்தின் முற்றத்தில்செய்யவிருக்கிறார்அது எருசலேம் தேவாலயம் என்ற அடுத்த வரி விளங்கப்படுத்துகிறதுஇந்தவரி மூலமாக இந்த திருப்பாடல் இரண்டாம் தேவாலயத்தின் காலப் பாடல் என எடுக்கலாம்போல தோன்றுகிறது
இறுதியாக இந்த திருப்பாடல் அல்லேலூயா என்ற புகழ்சசி சொல்லுடன் நிறைவேறுகிறது(הַֽלְלוּ־יָֽהּ ஹல்லூ-யாஹ்ஆண்டவரை புகழுங்கள்). 


1கொரி 11,23-26
23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம்ஒப்படைக்கிறேன்அதாவதுஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்திஅதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என்உடல்இதை என் நினைவாகச் செய்யுங்கள்என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின்கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதியஉடன்படிக்கைநீங்கள் 
இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்என்றார். 26ஆதலால்நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடையசாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

புதிய ஏற்பாட்டில் நற்செய்திகளைத் தாண்டிநற்கருணை ஏற்பாட்டினைப் பற்றி விவரிக்கின்றமுக்கியமான பகுதி இதுவாகும்இந்த விவரிப்பின் மூலம்நற்செய்திகள் எழுதப்படுவதற்குமுன்னமே ஆரம்ப திருச்சபை நற்கருணைக் கொண்டாட்டங்களை நிறைவேற்றியது எனகாணலாம்பவுல் எழுதியிருக்கும் வசனங்கள்நற்செய்தியாளர்கள் எழுதியிருக்கும்வசனங்களோடு அதிகமாக ஒத்திருப்பததைக் காணலாம். 1கொரிந்தியர் 11வது அதிகாரம்ஆரம்பகால திருச்சபைக் கொண்டாட்டங்களில் இருந்த பிணக்குகளை தீர்க்க எழுதப்பட்டதுஎன நம்பப்படுகிறதுபவுல் இந்த வசனங்களை நினைவூட்டியதன் வாயிலாக இன்று போலஅன்றும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்திருந்ததையும்இது எண்பிக்கிறது

. 23: பவுல் தன்னுடைய செய்திகளுக்கும்தான் பெற்றுக்கொண்ட செய்திகளுக்கும்வித்தியாசம் காட்டுகிறார்திருத்தூதர்களிடமிருந்தே பவுல் இந்த வரிகளைப் பெற்றிருப்பார்ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன் Εγὼ γὰρ παρέλαβον  ἀπὸ τοῦ κυρίου ὃ καὶ παρέδωκα ὑμῖν எகோ கார் பாரெலாபொன் அபொ டூ கூரியூஹொ காய் பாரெதோகாஹுமின்நான் இதனை ஆண்டவரிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்அதை உங்களிடம்ஒப்படைத்தேன்) என்று அவற்றிக்கு உரமேற்றுகிறார்அதுவும் இந்த இரவை அவர்ஆண்டவர்காட்டிக்கொடுக்கப்பட்ட இரவு என்கிறார் (νυκτὶ ᾗ παρεδίδετο நுக்டி ஹே பாரெதிதெடொ). 

. 24ஆக ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் யூதர்களின் பாஸ்கு விழாகொண்டாடப்பட்டிருக்கிறது என நிறுவலாம்இந்த வரியில் சில முக்கியமான வினைச் சொற்கள்பாவிக்கப்படுகின்றனஇயேசு ஆண்டவர் முதலில் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்(εὐχαριστήσας எவுகாரிஸ்டேசாஸ்நன்றிசெலுத்திக்கொண்டு)நன்றி செலுத்துதல் இங்கே ஒருதொடர் வினையாக நடைபெறுகிறதுபின்னர்ஆண்டவர் அப்பத்தை உடைக்கிறார் (ἔκλασεν எக்லாசென்-உடைக்கிறார்). பின்னர் இந்த நிகழ்வின் முக்கியமான வார்த்தைகள்சொல்லப்படுகின்றன

வவ. 24-25: நினைவாகச் செய்ய சொன்னதை பவுல் மையப்படுத்துகிறார்விடுதலைப்பயணநூல், 12வது அதிகாரத்தில்முன்னைய பாஸ்காவைஆண்டவர் தன் நினைவாகவே செய்யச்சொன்னார்ஆனால் இங்கே அப்பத்தை தன் உடலாகவும்இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றிபுதிய உடன்படிக்கையை நினைவுகூற சொல்கிறார் என்று பவுல் அழகாக சொல்லுகிறார்இங்கேபவுல் ஆண்டவருடைய சொந்த வரிகளை உச்சரிக்கிறார்ஆண்டவர் இதனை அரமேயிக்கத்தில்சொல்லியிருக்க வேண்டும்அந்த வரிகள் இங்கே கிரேக்க மொழியில் பதியப்படுகின்றன (τοῦτό  μού ἐστιν τὸ σῶμα  τὸ ὑπὲρ ὑμῶν· τοῦτο ποιεῖτε εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν டூடொ மூ எஸ்டின் டொசோமா டொ ஹுபெர் ஹுமோன்டூடொ பொய்யெய்டெ எய்ஸ் டேன் எமேன் அனாம்னேசின்  'இது உங்களுக்கான என் உடல்இதை என் நினைவாகச் செய்யுங்கள்': τοῦτο τὸ ποτήριον ἡ καινὴ διαθήκη ἐστὶν ἐν τῷ  ἐμῷ αἵματι· τοῦτο ποιεῖτε ὁσάκις ἐὰν πίνητε εἰς τὴν ἐμὴν ἀνάμνησιν டூடொ டொ பொடேரியோன் ஹே காய்னே தியாதேகே எஸ்டின் என் டோ எமோஅய்மாடிடூடொ பொய்யெய்டெஹெசாகிஸ் எயான் பினேடெஎய்ஸ் டேன் எமேன்அனாம்னேசின் 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கைநீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'), 

. 26: இதுவே பவுலுடைய முக்கிய செய்திநினைவுகூரப்படும் இந்த உணவுஆண்டவரின்சாவை முன்னறிவிக்கிறதுஆக ஆயத்தம் இல்லாமலும்தகுதியில்லாமலும் உண்ணப்படும்இவ்வுணவு அவரின் சாவை கொச்சைப்படுத்துகிறது எனலாம்καταγγέλλετε(காடான்கெல்லெடெஅறிவிக்கின்றீர்கள்).  ஆண்டவருடைய சாவை அறிவித்தல்முக்கியமானநற்செய்தி அறிவிப்பாக இருந்திருக்கிறது என எடுக்கலாம்

யோவான் 13,1-15
சீடரின் காலடிகளைக் கழுவுதல்
1பாஸ்கா விழா தொடங்கவிருந்ததுதாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கானநேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல்அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். 2இயேசுவைக்காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின்உள்ளத்தில் எழச்செய்திருந்ததுஇரவுணவு வேளையில், 3தந்தை அனைத்தையும் தம் கையில்ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச்செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4இயேசு பந்தியிலிருந்து எழுந்துதம்மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில்கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோதுஅவர், 'ஆண்டவரேநீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?' என்று கேட்டார். 7இயேசுமறுமொழியாக, 'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது பின்னரே புரிந்துகொள்வாய்என்றார். 8பேதுரு அவரிடம், 'நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்என்றார்இயேசு அவரைப் பார்த்து, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடுஉனக்குப் பங்கு இல்லைஎன்றார். 9அப்போது சீமோன் பேதுரு, 'அப்படியானால் ஆண்டவரேஎன் காலடிகளை மட்டும் அல்லஎன் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்என்றார். 10இயேசு அவரிடம், 'குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும்அவர்தூய்மையாகிவிடுவார்நீங்களும் 
தூய்மையாய் இருக்கிறீர்கள்ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லைஎன்றார். 11தம்மைக்காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததுஎனவேதான்'உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லைஎன்றார். 12அவர்களுடைய காலடிகளைக்கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்துஅவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13நீங்கள் என்னைப் 'போதகர்என்றும் 'ஆண்டவர்என்றும் அழைக்கிறீர்கள்நீங்கள் அவ்வாறுகூப்பிடுவது முறையேநான் போதகர்தான்ஆண்டவர்தான். 14ஆகவே ஆண்டவரும்போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர்மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15நான் செய்தது போலநீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

யோவான் நற்செய்தி பல அர்தங்களையும் அடையாளங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால்அதனை அவதனமாக வாசிக்க வேண்டும். 13 தொடக்கம் 17வரையான அதிகாரங்கள்இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் நடந்த தனித்துவமான உரையாடல்களைகொண்டமைந்துள்ளனஇன்றைய வாசகத்திலே வருகின்ற பாதங்களை கழுவுகின்ற நிகழ்வுயோவான் நற்செய்தியின் தனித்துவத்தைக் காட்டுகின்ற பகுதிகளில் மிக முக்கியமான ஒன்றுஎன்று கருதலாம்யோவான் நற்செய்தியாளர்இயேசுவைப் பற்றி மற்றைய நற்செய்திகள்தராதவற்றை தெரிவு செய்து தருவதில் வல்லவர்இவருக்கு மாற்கு நற்செய்தி மற்றும்வேறு மூலதரவுகளை விடஇன்னும் அதிகமான தரவுகளும் பாரம்பரியங்களும் கிடைத்திருக்கிறதுஎனலாம்.

.1: குறிப்பிட்ட பாஸ்கா விழாவை சீடர்கள் எப்போது கொண்டாடினார்கள் என்பதை இந்தவசனத்தில் இருந்து கணிப்பது கடினம்சமநோக்கு நற்செய்தியாளர்களுக்கும்யோவானுக்கும் 
இடையில் பாஸ்கா விழாவின் நாள் மட்டில் பல வேறுபாடுகள் தோன்றுவது போல உள்ளதுயோவானுடைய கணிப்பின்படி இயேசு பாஸ்கா உணவுண்ட நாளை மற்றவர்களை விட ஒரு நாள்முன்கூட்டி கணித்தது போல தோன்றுகிறதுஇதற்கான காரணம்இரண்டு வகையான காலஅட்டவணைகள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என எடுக்கலாம்ஆனால் இந்த விடையும்  திருப்திகரமானதாக இல்லை என்றே தோன்றுகிறதுஎவ்வாறு எனினும் நிசான் மாதம் 15ம் நாள்இவ்விழா கொண்டாடப்பட்டது எனலாம்யோவான் நற்செய்திப்படி இயேசு காலங்களையும்நேரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார்தமக்குரியோர் (τοὺς ἰδίους டூஸ் இதியூஸ்தனக்குரியவர்கள்) என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்சீடர்களைக் குறிக்கலாம்யோவானின் நற்செய்தியின் வேறு இடங்களில்இது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக்குறிக்கிறது
இயேசு தனக்குரியவர்களிடம் இறுதி வரைக்கும் அன்பு செலுத்துகிறார் (τέλος ἠγάπησεν αὐτούς டெலொஸ் ஏகாபேசென் அவ்டூஸ்). இந்த தமக்குரியோர் இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்தான்என்பதும் சொல்லப்படுகிறது

.2: இயேசுவை காட்டிக்கொடுக்கும் திட்டம் யூதாசுடையது என்பதையும் தாண்டிஅதுஅலகையுடையது என்கிறார் யோவான்யூதாசினுடைய இதயம் இப்போது கடவுளுடையஇடமல்லமாறாக அலகையுடையது என்கிறார் யோவான் (διαβόλου ἤδη βεβληκότος εἰς τὴν καρδίαν  ἵνα παραδοῖ αὐτὸν Ἰούδας Σίμωνος Ἰσκαριώτου, தியாபொலூ ஏதே பெப்லேகொடொஸ்எய்ஸ் டேன் கார்தியான் ஹினா பாராதொய் அவுடொன் இயூதாஸ் ட்சிமோனொஸ்இஸ்காரியோடூசாத்தான்இதயத்துள் போட்டிருந்தான்அதாவது சீமோனின் யுதாஸ்இஸ்காரியோத்திற்கு காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை).

.3: மீண்டுமொருமுறை தன்னுடைய பணிகளை நன்கு அறிந்திருந்தார் இயேசு என்று கூறி
இயேசுவின் தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் தன்னுடைய வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்யோவான்முதல் ஏற்பாட்டு கடவுளைப்போல இயேசுவே அனைத்தையும் தீர்மானிக்கிறார்தந்தைதன் கையில் அனைத்தையும் கொடுத்துள்ளார் என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (πάντα  ἔδωκεν αὐτῷ பான்டா எதோகென் அவுடோ-அனைத்தும் அவருக்கு கொடுக்கப்பட்டது). 
அத்தோடு அவர் தந்தையிடம் இருந்து வந்தவர்அவரிடமே திரும்பி செல்ல வேண்டும்என்பதையும் அறிந்திருக்கிறார் (ἀπὸ θεοῦ ἐξῆλθεν καὶ πρὸς τὸν θεὸν ὑπάγει, அபொ தியூஎட்செல்தென் காய் புரொஸ் டொன் தியூன் ஹுபாகெய்கடவுளிடம் இருந்து வந்தவர்அத்தோடுகடவுளிடம் போகிறவர்). 

வவ.4-5: இங்கே சில நோக்கப்படவேண்டிய செயற்பாடுகள் நடைபெறகின்றன

பந்தியிலிருந்து எழும்புதல் (ἐγείρεται ἐκ τοῦ δείπνου எகெய்ரெடாய் எக் டூ தெய்ப்னூ
இரவிலிருந்து எழும்புகிறார்): பணிசெய்ய ஒருவர் தன்னுடைய நிலையை விட்டு எழுந்திருக்கவேண்டும் என்பதனைக் குறிக்கலாம்உணவருந்துதல் போல இப்போது தான் செய்யப்போகும்செயலும் முக்கியம் என்பது காட்டப்படுகிறது.  

மேலுடைகளை கழட்டி வைத்தல் (τίθησιν τὰ ἱμάτια திதேசின் டா ஹிமாடியாஉடையைஎடுக்கிறார்): ஒருவர் தன்னுடைய மேன்மையை தியாகம் செய்ய வேண்டும் என்பதைக்குறிக்கலாம்யூதர்கள் மூன்றுபடியான உடைகளை அணிந்தனர்இங்கே இயேசு மேலுடைகளைகழற்றுகிறார்வெற்றுடம்பை காட்டுவது யூத கலாச்சாரத்திற்கு ஒவ்வாது என்பதை அறிந்திருந்தபடியால் அவர் மூன்றாம் அடுக்கு உடையை மட்டுமே கழற்றியிருக்க வேண்டும் என்பதுபுலப்படுகிறது.  

துண்டை இடுப்பில் கட்டுதல் (λαβὼν λέντιον διέζωσεν ἑαυτόν லாபோன் லென்டியோன்தியெட்சோசென் ஹெஅவ்டொன்துன்டொன்றை எடுத்து தன்னைச்சுற்றி கட்டினார்): இன்னொரு குறைவான நிலைக்கு தன்னை அர்ப்பணித்ததைக் குறிக்கும்.

பின்னர் குவளையில் தண்ணீர் எடுத்து (ὕδωρ ஹுதோர்-நீர்)சீடர்களுடைய காலடிகளைக்கழுவி (πούς பூஸ்-கால்), இடுப்பில் இருந்து துண்டால் துடைக்கிறார் (ἐκμάσσειν τῷ λεντίῳ எக்மாஸ்சென் டோ லென்டியோ-துண்டால் துடைத்தார்). காலடிகளைக் கழுவுதலும்அதனைதன்னுடைய துண்டால் துடைத்தலும்சாதராணமாக சேவகர்கள் அல்லது அடிமைகள் செய்கின்றவேலைஅதனை ஆண்டவரே செய்கின்றமைநல்ல ஒரு உதாரணமாக அமைகிறதுகாலடிகளைக் கழுவவும்பின்னர் கால்களை துடைக்கவும்மேலுடைய இடைஞ்சலாக இருக்கும்அதனால்தான் அதனை கழற்றி வசதியான துண்டு உடுத்தப்படுகிறதுஇந்த அடையாளம்வாயிலாகமேலுடைகள் என்ற சில அமைப்புக்கள் கழற்றப்பட்டால்தான் பணிசெய்ய முடியும்என்ற செய்தியை யோவான் தனக்கே உரிய பாணியில் தருகிறார் எனலாம்

இங்கே இரண்டு செய்திகளை அவதானிக்கலாம்
). ஒருவர் பாதங்களைக் கழுவமற்றவரை தன்னைவிட உயர்ந்தவராக கருதவேண்டும்
). தன்னுடைய மேன்மையில் இருந்து அவர் இறங்கி வர வேண்டும்

வவ. 6-10: பேதுருவின் கேள்விகளும்ஆண்டவரின் பதிலும் புதிய ஏற்பாட்டில் பேதுருவின்நடத்தையை பற்றி தெரிந்த வாசகர்களுக்கு பெரிய வியப்பாக இருக்காதுபேதுருவின்கணிப்பின்படிஇயேசுமெசியா மற்றும் இறைவனின் உத்தம மகன்அவர்ஒரு சாதாரணகலிலேய யூதனின் பாதங்களை கழுவுவதை சகித்துக்கொள்ள முடியாதுஅதே வேளைஅனைத்தையும் அறிந்திருக்கிற இயேசு ஆண்டவர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்றமுன்கூட்டிய அறிவும் இப்போது இந்த பேதுருவுக்கு இல்லை
ஆண்டவரே நீரா என் பாதங்களை கழுவுவது(κύριε, σύ μου νίπτεις τοὺς πόδας; கூரியேசு மூநிப்டெய்ஸ் டூஸ் பொதாஸ்ஆண்டவரே நீர் என் பாதங்களை கழுவுவதா?) என்ற கேள்வியின்மூலம்பாதங்களை ஆண்டவர் நிலையில் இருப்பவர் கழுவுவதை யூத கலாச்சாரம் ஏற்காதுஎன்பது அழகாகச் சொல்லப்படுகிறது
இங்கே அவரின் சாதாரண அறிவிற்கப்பாற்பட்ட அன்பு பேசுகிறது (γνώσῃ δὲ μετὰ கினோசே தெமெடா-பின்னர் அறிவாய்). பேதுருவின் அறியாமையை நன்கு அறிந்திருந்த ஆண்டவர்தன்னுடைய கழுவுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி அடையாளமாக சொல்லபேதுரு அதனைஉடல் ரீதியான கழுவுதலாக எடுத்து ழுழு உடலையையும் கழுவச் சொல்லி கேட்கிறார்கடவுளோடு கூடவே இருந்தாலும்பணியாளர்கள் தங்களை இற்றைப்படுத்தாவிட்டால்ஆண்டவரின் எண்ணங்களை செவ்வனே புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு பேதுரு ஒரு நல்லஉதாரணம்
இந்த உரையாடலின் மூலமாக ஒருவர் இயேசுவின் சீடனாக மாற அவருக்கு இயேசுவுடன்பங்கிருக்க வேண்டும்இந்த பங்கு இயேசுவை செயலாற்ற அனுமதிப்பதன் வாயிலாக வருகிறது
இதனால்தான் இயேசு பேதுருவை அவருடைய கால்களை கழுவ தன்னை அனுமதிக்குமாறுகேட்கிறார்பாதங்களை கழுவுதல் ஆரம்ப காலத்திலே ஒரு முழுமையான குளியலாக இருந்துபின்னர் அது ஒரு அடையாள தூய்மை சடங்காக மாறியதுஇயேசுவும் அதனை ஒரு அடையாளசடங்காகவே செய்கிறார்இந்த சடங்கை செய்வதன் மூலம் அனைவரும் தூய்மை அடையமுடியாதுஏனெனில் தூய்மை என்பது ஒருவருடைய உள்மனத்துடன் சம்மந்தப்பட்டது
இதனால்தான் யூதாசின் கால்களை இயேசு கழுவியும் அவர் தூய்மையில்லாதவராகவேதொடர்ந்தும் இருக்கிறார்.

. 11: யூதாசைப் பற்றி இயேசுவிற்கு முதலே தெரிந்திருந்தது என்று சொல்லி மீண்டுமாக இயேசுஅனைத்தையும் அறிந்திருந்த ஆண்டவர் என்கிறார் யோவான் (ᾔδει γὰρ τὸν παραδιδόντα αὐτόν· ஹேதெய் கார் டொன் பாராதிதொன்டா அவ்டொன்தன்னை காட்டிக்கொடுப்பவரை முன்னரேஅறிந்திருந்தார்).


வவ. 12-15: இந்த வரிகள் இந்த பகுதியின் மிகவும் முக்கியமான செய்திகளைத் தாங்கி வருகிறதுபணியாளர்கள் தங்களின் செயற்பாடுகளின் பின்னர்தமது நிலைக்கு திரும்பி வரவேண்டும்என்கிறார் போலஆண்டவர் பாதங்களை கழுவியதன் பின்னர்தன்மேலாடையை அணிந்துகொண்டு மேசைக்கு திரும்புகிறார்தன்னுடைய செயலின் அடையாளத்தை அவர்கள்புரிந்துகொண்டார்களா என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் (γινώσκετε τί πεποίηκα ὑμῖν; கினோஸ்கெடெ டி பெபொய்ஏகா ஹுமின்நான் செய்தது உங்களுக்கு புரிந்ததா?). 
யோவான் நற்செய்தியில் இயேசு தன்னுடைய தெய்வீகத்தை அப்படியே ஏற்றுஉறுதிப்படுத்துவார்இங்கே தனக்கே உரித்தான இரண்டு சொற்பதங்களை ஏற்றுக்கொள்கிறார்(ὁ διδάσκαλος καί· ὁ κύριος ஹோ திதாஸ்கலோஸ் காய் ஹோ குரியோஸ்ஆசிரியரும்ஆண்டவரும்தான்தான் உண்மையான ஆசிரியரும் ஆண்டவரும் என்கிறார்செய்திஎன்னவெனில் இந்த ஆசிரிய-ஆண்டவரின் முன்மாதிரியையை (ὑπόδειγμα ஹுபொதெய்க்மா-உதாரணம்) தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்பதுமுதல் ஏற்பாட்டில் நானேகற்றுத்தருவேன் என்று கடவுள் எரேமியாவிற்கு சொன்னதை நினைவிற்கு கொண்டுவருகிறது(காண் எரே 31,34)இங்கே யோவான் முக்கியமான சில படிப்பினைகளை முன்வைக்கிறார்:


குருத்துவத்திற்கு வரைவிலக்கணமும் அகராதியும் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு!
இயேசு இல்லாத குருத்துவம்மூட நம்பிக்கையின் அடையாளம்.  
இயேசுநற்கருணையிலே கடவுளையே பலிப்பொருளாக்கி,
 மனிதத்தின் தெய்வீகத்தை போதிக்கிறார்
பாதங்களை கழுவ விடுவதல்ல
மாறாக கழுவுவதேகுருத்துவம் என்கிறார்.

ஆண்டவரேகுருத்துவத்தின் நாளில்குருக்கள் உம்மையே பற்றிக் கொள்ள வரம் தாரும்
ஆமென்

தம்பிக்கும்அனைத்து குருத்துவ உடன் சகோதரர்களுக்கும்முக்கியமாக அக மற்றும் புறகாரணிகளால் துன்புறும் குருக்களுக்கு சமர்ப்பணம்

(காப்பக அறிவிப்பு:
இந்த விளக்கவுரை 2016ம் வருடம் ஏற்கனவே இத்தாலிறெஜியோ எமிலியாவில், 21, பங்குனி2016 இல் எழுதப்பட்டதுஇப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள்

http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும்யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகபணியகத்தின்http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்றவலைத்தளத்திலும்
ஏற்றப்படுகின்றனஅங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குருத்தோலை ஞாயிறு (இ) 13.04.2025 - Palm Sunday

  குருத்தோலை   ஞாயிறு  ( இ ) 13.04.2025   Fr. M. Jegankumar Coonghe OMI, ‘Nesakkarangal,’ Iyakachchi, Jaffna.     முதல்   ...