புதன், 23 ஏப்ரல், 2025

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் ‘நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ’ Paschal Sunday 2 C 2025




We miss you dear Papa Francesco! Long live your memory, your name and your witness to Jesus. Amen. 


பாஸ்கா காலம் இரண்டாம் வாரம்

நீ என்னைக் கண்டதால் நம்பினாய்காணாமலே 

நம்புவோர் பேறுபெற்றோர்

 

Fr. M. Jegankumar Coonghe OMI,

Amaithi Thendral,

Mullaitivu,

lunedì 21 aprile 2025

 

முதல் வாசகம்தி.பணி 5:12-16

திருப்பாடல்: 118

திருவெளிப்பாடு 1:9-13.17-19

யோவான் 20:19-31  

 

முதல் வாசகம்தி.பணி 5,12-16

 

12மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டனஅனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லைஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்து கொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; 16எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும்தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள்அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

 

 இந்த பகுதி திருத்தூதர்கள்ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்எருசலேமில் ஆற்றிய மறைபரப்பு பணியைப் பற்றி விவரிக்கின்றதுஏற்கனவே பேதுருவும்மற்றையவர்களும் மக்கள் மத்தியில் பிரசித்தமாய் காணப்பட்டனர்சில அரும் அடையாளங்களையும் அவர்கள் இயேசுவின் பெயரால் செய்யத்தொடங்கியிருந்தனர்அனனியா மற்றும் சப்பிராவின் நிகழ்வும் இந்தவேளையில் தான் நடைபெற்றிருந்ததுஇதனால் மக்கள் இவர்கள் சொல்வதைக் கேட்கவும்பல நோய்களை குணபடுத்திக்கொள்ளவும் திருத்தூதர்களின் பின்னால் குவியத்தொடங்கினர்இப்படியான ஒரு வேளையிலேதான் இந்தக் காட்சி நடைபெறுகிறது

 

. 12: இந்த காலப்பகுதியில் பலர் மாயவித்தைகளையும் வினோதங்களையும் செய்திருக்கலாம்

ஆனால் திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் அரும் அடையாளங்களைச் செய்ததை லூக்கா வித்தியாசமாகக் காட்டுகிறார்இவை மக்களின் பார்வையையும் திருத்தூதர்களின் பால் ஈர்த்தது

 சாலமோன் மண்டபம்எருசலேம் கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்ததுபாரிய 

தூண்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மண்டபம்நண்பர்களும் யூதர்களும் சந்திக்கும் 

இடமாக இருந்ததுபழைய சாலமோன் ஆலயத்தின் எச்சம் எனவும் இதனை சில ஆய்வாளர்கள் 

காண்கின்றனர்ஏரோது இதனை பெருப்பித்திருந்தான்இயேசு ஆண்டவர் அதிகமான வேளைகளில் மக்களையும் சீடர்களையும் சந்திக்கும் இடமாகவும் இது இருந்ததுஅதனைப் போலவே தொடக்க திருச்சபையும் இந்த இடத்தில் அதிகமாக கூடியதுமக்கள் ஆலயத்தினுள் செல்வதற்கு முன் இந்த 

இடத்தில் கூடி ஆன்மீக காரியங்களைப் பற்றியும் விவாதித்தனர்உரோமையர் எருசலேமை அழித்தபோது இந்த மண்டபமும் முழுவதுமாக அழிந்து போனது. (மேலும் வாசிக்க

 http://www.bible-history.com/jerusalem/firstcenturyjerusalem_royal_porticoes.html) ) 

 

. 13: ‘மற்றவர் எவரும் எனலூக்கா யூதர்களை குறிக்கிறார் எனக் கொள்ளலாம்அவர்கள் 

இந்தத் கூட்டத்தில் சேராவிடினும்இந்தக் கூட்டத்தின் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் இது காட்டுகிறதுஇக்காலத்தில் சாதாரன யூதர்கள் கிறிஸ்தவர்களின் மேல்  மிக மரியாதை வைத்திருந்ததை இவ்வாறு நோக்கலாம்

 

.14: நம்பிக்கைக் கொண்டிருந்தவர்கள் என்ற ஒரு எச்சவினை பாவிக்கப்பட்டுள்ளது (πιστεύοντες பிஸ்டெயுஒன்டெஸ்இது ஆரம்பகால கிறிஸ்தவர்களைக் குறிக்கலாம்ஆண்களையும் பெண்களையும் சரிவர குறிப்பிட்டிருப்பதுஆரம்ப கால திருச்சபையில் பாலினம் ஒரு பிரச்சனையாக 

இல்லாதிருந்ததை காணலாம்

 

.15: பேதுருவின் நிழலாவது நோயாளிகளில் விழாதா என எண்ணுமளவிற்கு பேதுரு புனிதராக 

உருவெருத்திருந்தார்பேதுரு அதிசயம் செய்கிறவராக நோக்கப்படுகிறார்பலவீனமாக இருந்த 

பேதுரு புனிதராக மாறியிருக்கிறார்ஆரம்ப கால திருச்சபையில் தலைவர்கள் மிக முக்கியத்துவம் பெற்றவர்கள் ஆனார்கள் என்பதையும் இது காட்டுகிறதுலூக்கா திருச்சபைத் தலைவர்களிடம் தனி மரியாதை கொண்டிருந்தார் என்பதையும் இந்த வரி காட்டுகிறது

 

.16: எருசலேமில் மட்டுமல்லபுற நகர்ப்பகுதியிலிருந்தும் நோயாளர்கள் திருத்தூதர்களின் தொடுகைக்காக கொண்டுவரப்பட்டிருந்தனர்அனைவரும் நலமடைந்தனர் என்பதுஆண்டவரின் 

தரிசனம் அங்கே அதிகமாக உணரப்பட்டதாக காட்டுகிறார் லூக்காலூக்கா இந்தப் பகுதியை ஒரு 

முன்னுரை போலவே காட்சிப்படுத்துகிறார்பின்னர் வருகிற பகுதிகள் எவ்வாறு திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை காட்டும். ἐθεραπεύοντοἅπαντες எபெராபெயுஒன்டொ 

ஹபான்டெஸ்அனைவரும் குணமாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்இந்த வரியில் இறந்த கால 

வினைமுற்று பயன்படுத்தப்படுகிறதுஇது ஒரு தொடர்ச்சியான செயலைக் குறிக்கிறதுஆக இந்த குணமாக்கல் ஒரு தொடர் செயற்பாடாகவே காட்டப்படுகிறது

 

 

 

 

 

 

 

 

 

திருப்பாடல் 118

நன்றிப் புகழ் மாலை

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில் அவர் நல்லவர்என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அனைவரும் சாற்றுவார்களாக!

5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.

6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?

7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக்கண்ணாரக் காண்பேன்.

8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிடஇ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிடஇ ஆண்டவரிடம்

அடைக்கலம் புகுவதே நலம்!

10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்ஆண்டவர் பெயரால்

அவர்களை அழித்துவிட்டேன்.

11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்ஆண்டவர் பெயரால்

அவர்களை அழித்துவிட்டேன்.

12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்நெருப்பிலிட்ட முட்களைப்போல்அவர்கள் சாம்பலாயினர்ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்ஆனால்இ ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.

14ஆண்டவரே என் ஆற்றல்என் பாடல்என் மீட்பும் அவரே.

15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றதுஆண்டவரது வலக்கைவலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்உயிர் வாழ்வேன்ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;

18கண்டித்தார்இ ஆண்டவர் என்னைக் கண்டித்தார்ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்அவற்றினுள் நுழைந்து நான்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20ஆண்டவரது வாயில் இதுவேஇது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21என் மன்றாட்டை நீர் கேட்டதால்இ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்இ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளதுநம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம்

அகமகிழ்வோம்.

25ஆண்டவரேமீட்டருளும்ஆண்டவரேவெற்றிதாரும்!

 

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27ஆண்டவரே இறைவன்அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

28என் இறைவன் நீரேஉமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்என் கடவுளே!

உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில்இ அவர் நல்லவர்என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

 

 

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது

 

 

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

 

 

). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு

 இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார்முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பதுஇ கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார்ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்இரக்கம்). ஆண்டவருக்கு அஞ்சுவோர் என்று 

எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

 

 

.1: ஆண்டவர் நல்லவர்இ அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேய நம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃  லா'ஓலாம் ஹஸ்தோ). ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு 

முன்னால் மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி 

காட்டுகிறது.

 

 

.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக் கேட்கப்படுகிறார்கள்இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம்இதனை ஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நாயிஸ்ரா'ஏல்- செல்வார்களாக இஸ்ராயேலர்). 

 

 

 

.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன் 

குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது, அதாவாது ஆண்டவரின் குருக்களுக்கு கொடுக்கப்படுகிறதுகுருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵֽית־אַהֲרֹן  யோ'ம்ரூ-நாவெத்-'அஹரோன்ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக). 

 

 

.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக் கேட்கிறார் ஆசிரியர்இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம்அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கான ஒத்த 

கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன יִרְאֵי יְהוָה  யிர்' அதோனாய்

ஆண்டவருக்கு அஞ்சுவோர்). 

 

 

). வவ.5-13: அரசரின் சாட்சியம்.  இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல்அரசர் 

தன்னுடைய  இராணுவ துன்பங்களின் போது, எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார்இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம்மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.

 

 

.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும்இ ஆண்டவர் அதனைக் கேட்டதாகவும் சொல்கிறார்இந்த வரியுடன் காட்சி மாறுகிறது, இங்கே பேசுகிறவர் அரசராக மாறுகிறார்ஆசிரியர் அரசர் போல பேசுகிறார், அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம்பின்வரும் 

வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன

 

 

.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் 

(יְהוָה לִי לֹא אִירָא அதோநாய் லி லோ' 'இரா') 

என்ற ஆழமான நம்பிக்கைஇ வரியாக தரப்படுகிறதுஇந்த வரி தாவீதின் காட்சியை 

நினைவுபடுத்துவது போல உள்ளதுஆண்டவர் தன் பக்கம் உள்ளதால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்

 

 

.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார்ஆண்டவரை தனக்கு 

துணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் 

(יְהוָה לִי בְּעֹזְרָי  அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்கடவுள் எனக்கு என் உதவியாக). 

 

 

.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார் ஆசிரியர்இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம்நம்பிக்கை வைத்தலை, அடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் 

(לַחֲסוֹת  லாஹசோத்அடைக்கலம் புக). 

 

 

.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறதுஉயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் 

நெதிவிம் ( בִּנְדִיבִים׃  பின்திவிம்உயர்குடிமக்களில்

எனக்காட்டுகிறதுஇவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை

 

 

வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார்

ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும்இங்கே இவர் வேற்றினத்தார் என்று சொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும்இவர்களை எபிரேய விவிலியம்  גּוֹיִם  (கோயிம்வேற்று நாட்டு மக்கள்என்று காட்டுகிறதுஇவர்கள் பல திசைகளில் 

ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள்இது போரில் எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன்

 

 

.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லதுஇ அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும்இதனால்தான் தன் எதிரிகளை தேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים  தெவோரிம்தேனீக்கள்). 

 

 எதிரிகள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும்இ தான் அவர்களை நெருப்பைப் போல் 

சுட்டெரிப்பேன் என்கிறார்முட்கள், நெருப்பில் விரைவாக சாம்பலாகும், இதனைப்போலவே 

ஆண்டவரின் துணையால் எதிரிகள், முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்

 

 

.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார்ஏதிரிகளின் தள்ளுதல் பலமாக 

இருந்தாலும், ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.

 

 

). .14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.

 

.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளதுபாடல்இ என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் 

( זִמְרָה  ட்சிம்ராஹ்இசைஇ பாடல்இ பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் 

என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.

 

 

.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் 

(קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் 

பலம் என்று காட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்நீதிமான்களின் கூடாரங்கள்). 

 

 

.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம்இது பலம்இ உரிமைஇ வாரிசு போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறதுஅதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாக இருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை). இடக்கை 

பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லைஇருப்பினும் 

இதற்கும் விதிவிலக்கு இருந்ததுஇஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கை 

பழக்கமுடையவராக இருந்தார்இ அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள் புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா'). 

 

 

.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார்தான் 

இறக்கமாட்டேன் என்கிறார்அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம்இ ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுத்இறவேன்וַאֲסַפֵּ֗ר  வா'அசாபெர்எடுத்துரைப்பேன்). 

 

 

.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார்ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும்இ இந்த கண்டிப்பால் தான் அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார்

 

 

.19: தான் பாவியாக இருந்தாலும்இ ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும்இ தன்னை நீதிமான் என்று காட்டுகிறார்இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும் என்பது இவர் நம்பிக்கைஇந்த வாயில்களில் தான் நுழைவதுஇ ஆண்டவருக்கு நன்றி செலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק  'அரெ-ட்சாதெக்நீதியின் வாயில்கள்). 

 

 

 

). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.

இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளதுஇது 

ஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம்இ ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பதுஇ பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டதுஇ நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம்இ கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறதுஇ இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம்இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.

 

 

.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்என்பவர்கள்இ ஆண்டவரின் மக்கள் அனைவரையும் 

குறிக்கலாம்ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.  

 

 

.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போலஆண்டவர் இவருக்கு செவிசாய்த்ததைஇ அவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார்

 

 

.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்புஇ எபிரேய விவிலியத்தில் 

(אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ ' எவென் மா'அசூ ஹபோனிம்இ ஹாய்தாஹ் 

லெரோ'ஷ் பின்னாஹ்

என்று உள்ளதுஇது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும்இதற்கான சரியான காரணம் சரியாக தெரியவில்லைபல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்குகொடுக்கப்படுகிறதுசிலர் இதனை 'தலைக்கல்என்கின்றனர்சாதாரணமாக மூலைக்கற்கள் அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும்இ இருப்பினும் இவை முக்கியமான கற்களாக இருக்கின்றனஇந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறதுஇதனைவிட வேறு பல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறதுசிலர் சுவரில் இருக்கும் பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர், இன்னும் சிலர், இதனை அழகாக செதுக்கப்பட்டு, உயரத்தில் இருக்கும், இணைக்கும் கல்லாகவும் 

இதனை பார்க்கின்றனர்எது எப்படியாயினும் இது, முக்கியமான கல் என்பது மட்டும் மிக 

தெளிவாக தெரிகிறது.  

 

 புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர் 

(காண்க லூக் 20:17: தி.பணி 4:11:1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த உதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7). அனைத்து இடங்களிலும் இது ஆண்டவரின் 

அதிசயமாகவே பார்க்கப்படுகிறது

 

 

.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே, 

இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது

 

 

.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்க வேண்டும்இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளதுஇந்த குறிப்பிட்ட நாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடுஇ அந்த நாளில் ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה  நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்- 

நாம் மகிழ்வோம், நாம் களிப்படைவோம்).

 

 

.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறதுஇதனை பாடலுக்கான பதிலுரையாகவும் எடுக்கலாம்ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்ற வரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம்போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள் போலவும், உள்ளனהוֹשִׁיעָה נָּא  ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளுהַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.,

 

 

.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளதுஅனேகமாக இந்த வரியை குருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம்இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது

 ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם  יְהוָה  பாரூக் ஹபாபெஷெம் அதேனாய்

என்பதுஇ இந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம்பிற்காலத்தில் இந்த பகுதிஇ புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டதுஇந்த வரியின் இறுதிப் பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃

பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்). 

 

 

.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கே நன்றாக புலப்படுகிறதுஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாச பிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்ஆண்டவரே இறைவன்). 

அதோனாய் அல்லது யாவே என்பதுஇ இஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல்யாவே என்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால்இ அதனை எழுதியவர்இ வாசிக்கும் போது 'அதோனாய்;' என்றனர்பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும் இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.

 

 ஆண்டவரை ஒளியாக கருதுவதால்இ அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர்கிளைகளை கையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர்முதல் ஏற்பாட்டுக் காலத்தில்இ இஸ்ராயேல் 

நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டனகிரேக்க நாட்டில் வேறு கிளைகள் 

பயன்படுத்தப்பட்டிருக்கலாம்இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும் வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டனஇந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும் இடப்பட்டனபிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்த கொம்பிலிருந்து வந்தவையே

 

 

.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறதுஇதுதான் திருப்பாடல்களின் நோக்கம்ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே). 

இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்திஇ அவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேאֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகாபுகழ்ந்தேற்றுவேன்). 

 

 

). .29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.

 

 

 இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறதுஅரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார்ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்பதுஇ அதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி 

(ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ  தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோநல்லவர், அதாவது 

அவரது பேரன்பு என்றும் உள்ளது).

 

 

இரண்டாம் வாசகம்

திருவெளிப்பாடு 1:9-13.17-19

 

9உங்கள் சகோதரனும்இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11'நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதிஎபேசுசிமிர்னாபெர்காம்தியத்திராசர்தைபிலதெல்பியாஇலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வைஎன்று அக்குரல் கூறியது.

 

12என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன்அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன்அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்

 

17நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன்அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; 'அஞ்சாதேமுதலும் முடிவும் நானே. 18வாழ்பவரும் நானேஇறந்தேன்ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன்சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. 19எனவே நீ காண்பவற்றைஅதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.

 

 

விவிலியத்தில் அதிகமாக ஆய்வுசெய்யப்பட்ட நூல்களில் திருவெளிப்பாடு ஒரு முக்கியமான நூல் எனக் கொள்ளலாம்இது ஒரு வகை வெளிப்பாட்டு மற்றும் ஆரம்ப யூத இலக்கிய வகையைச் சார்ந்ததுஇதன் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு எனக் கணிக்கின்றனர். 1-2 ஏனோக்கு, 2-3 பாருக்கு, 4 எஸ்ரா போன்றவையும் இவ்வகையை சார்ந்தவையேஆரம்ப காலத்தில் இது ஒரு திருமடலாகவே கருதப்பட்டதுஅதிகமான காட்சிகள்உருவகங்கள்அடையாளங்கள்

இலக்கங்கள்என மிகவும் குறியீட்டு மொழிகளைக் கொண்டமைந்துள்ள இந்தப் புத்தகத்தை அவதானமாகவும்அதன் மூல சூழ்நிலை தேவைகளிலும் வாசிக்க வேண்டும்

 இது இறைவார்த்தை என்றபடியால் எமது இன்றைய தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் இது பதிலளிக்கக் கூடியதுஆனால் இலகுவில் தவறாக பாவிக்கப்படக்கூடிய ஆபத்தையும் இதன் வாசகர்கள் எதிர்நோக்குவர்திருவெளிப்பாட்டு இலக்கிய வகை நூல்கள்தன்மையை (முதன் நபர்பேசுபொருளாகவே கொண்டிருக்கின்றனஅவ்வப்போது கதையின் தலைவர்க்கு சிலர் தோன்றி வெளிப்பாடுகளை விளங்கப்படுத்துவதைக் காணலாம்இதனுடைய செய்தியாகஅறிவிற்கப்பாற்பட்ட செய்திகளை விவரிக்கப்படுவதை எடுக்கலாம்இதனுடைய நோக்கமாகவாசகர்கள் தங்களது வாழ்வில் வரும் துன்பங்களையும்அல்லது தாங்கள் இவ்வுலகில் சந்திக்கும் அஞ்ஞானத்தையும் எதிர்கால கண்கள் கொண்டு பார்க்கவும் இதனால் புத்துணர்ச்சியடையவும் எழுதப்பட்டது என எடுக்கலாம்நான்கு தடவைகள் யோவான் என்றொருவர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இதன் ஆசிரியராக திருச்சபைதிருத்தூதர் யோவனை முன்மொழிகிறதுஇக்கருதுகோளுக்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்களும் புதுவாதங்களும் இன்னும் தொடர்கிறதுஒவ்வொரு தடவையும் இந்நூலை வாசிப்பவர்ஆச்சரியங்களையும்இனிமையையும் உணர்வர்

 

இதன் ஆசிரியத்துவம்ஆழமான எபிரேத்தையும்அரமெயிக்கத்தையும்அத்தோடு தகுந்த முதல் ஏற்பாட்டு அறிவையும் காண்பிக்கிறதுநிச்சயமாக உரோமையர் கிறிஸ்தவர்களுக்கெதிராக தூண்டிவிட்ட கலாபனைகளுக்கு பதிலளிப்பதாகவும்கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்நூல் எழுதப்பட்டது என நம்பலாம்இருபத்தோரு அதிகாரங்களைக் கொண்டுள்ள இப்புத்தகம்ஏழு திருச்சபைகளுக்கான கடிதங்கள்விண்ணக காட்சிகள்ஏழு முத்திரைகள்ஏழு எக்காளங்கள்திருச்சபைக்கும் தீய சக்திகளுக்குமான போராட்டம்ஏழு துன்பக் கிண்ணங்கள்எதிர்கிறிஸ்துவின் ஆட்சியும்-அழிவும்கிறிஸ்துவின் வெளிப்பாடு-கடவுளின் நகர்

இறுதியாக முடிவுரையையும் கொண்டு அமைந்துள்ளது

 

.9: பத்மோஸ் (Πάτμος) ஏஜியன் கடலில் அமைந்துள்ள ஒரு மலைத் தீவுதனிமையிலுள்ள இந்த எரிமலைத் தீவில்தான் யோவான் ஆண்டவரின் திருவெளிப்பாட்டை தாம் பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்இன்று இது கிரேக்க நாட்டிற்கு உரியதாகும்யோவானுக்கு முன்னமே உரோமைய வரலாற்று ஆசிரியர்களினால் இந்த தீவு அறியப்பட்டிருந்ததுஉரோமையர்கள் தங்கள் சிறைக்கைதிகளை இந்தத் தீவில் அடைத்திருந்தனர்முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் அழைப்பினைப்போன்று யோவான் ஒரு முன்னுரை கொடுக்கிறார்இந்த வசனம் முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் துன்பங்களை அப்படியே வர்ணிக்கிறதுஅதாவது வேதனையிலும்மனவுறுதியிலும்ஆட்சியுரிமையிலும் பங்குகொள்ளுதல்யோவான் தன்னை ஒரு உடன் சகோதரனாக இந்த போராட்டத்தில் இணைத்துக்கொள்கிறார்தான் பாத்முவுக்கு கடத்தப்பட்டதன் நோக்கமும் அதுவே என்கிறார்

 

.10: யோவான் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் அல்லது ஆவி அனுபவத்தில் இருந்தார் என்றும் மொழிபெயர்க்கலாம்ஞாயிற்றுக் கிழமை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஆண்டவரின் நாள் என்று கிரேக்க மூலத்தில் உள்ளது (ἐν τῇ κυριακῇ ἡμέρᾳ என் டே கூரிஅகே ஹெமெரா

ஆண்டவருடைய நாளில்). இது அக்கால வழக்கத்தில் இருந்த சீசரின் நாள் அல்லது அரசரின் நாள் என்ற பின்புலத்தை நினைவூட்டுகிறதுஓரு எகிப்திய தொலமி அரசன் ஒவ்வொரு 25வது நாளையும் தன்னுடைய நாளாக அறிவித்தான்இந்த பின்புலத்திலே கிறிஸ்தவர்கள் ஆண்டவரின் உயிர்ப்பு நாளை ஆண்டவரின் நாளாக கடைப்பிடிக்கத் தொடங்கினர்இது எபிரேயர்களின் ஓய்வு நாளை அடிப்டையாகவும் கொண்டிருக்கலாம்எக்காளங்கள் இறைசெய்தியை குறிக்கின்ற அறிகுறிகள்

 

.11: இந்த ஏழு திருச்சபைகளும் எபேசிலிருந்து இலாவோதேகியா செல்லும் பிரதான வீதியை பாதையாக கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுஇந்த ஏழு திருச்சபைகளும்ஏழு பிரதான சிறு நகர்களைக் அடிப்படையாகக் கொண்டு அமைந்தருந்தனயோவானுடைய காலத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் தொகையையும் இந்த நகர்கள் கொண்டமைந்திருந்தனசுருள் ஏட்டில் எழுதச் சொன்னது முதல் ஏற்பாட்டில்எசாயாஎரேமியா மற்றும் எசேக்கியல் இறைவாக்கினர்களுக்கு கடவுள் கொடுத்த ஏட்டுச் சுருள்களை நினைவூட்டுகின்றன

 இந்த நகர்கள் இன்று பெயர் மாற்றப்பட்டுள்ளனஅவை துருக்கி நாட்டின் பகுதிகளாக மாறிவிட்டனபவுலுடைய காலத்தில் இவை கிரேக்க பண்பாட்டில் வளர்ந்துஉரோமைய அரசியலில் பக்குவப்பட்டுகிறிஸ்தவ நகர்களாக மாறிக்கொண்டிருந்தன

 

.12: இந்த ஏழு விளக்குத் தண்டுகள் எருசலேம் தேவாலயத்திலிருந்த ஏழு விழக்குத் தண்டுகளை 

நினைவூட்டுகிறது. (מְנוֹרָה  மினோராஹ் - ஒர் அடியையும் ஏழு தண்டுகளையும் விளக்குகள்

காண்க வி. 25,31. எபிரேயர்களுக்கு நிறைவை குறித்த இந்த விளக்கு தண்டுஇங்கே கிறிஸ்தவர்களுக்கு ஒரே கடவுளையும்ஒரே உயிர்த்த ஆண்டவரையும் அவரின் திருச்சபைக் கூட்டத்தையும்

குறிக்கிறது

 

.13: இந்த வசனம் அப்படியே தானியேலை நினைவூட்டுகிறதுதானியேலில்இந்த மானிட மகனுக்குபல விளக்கங்கள் இருந்தாலும்யோவான் இந்த மானிட மகனை ஆண்டவர் 

இயேசுவாகவே தனது கருத்தியலுக்கு ஏற்றவாறு காண்கின்றார் (காண்கதானி 7,13). நீண்ட அங்கிஇங்கே ஆண்டவரின் நித்தியத்தையும்இறைதன்மையையும்தெய்வீகத்தையும் குறிக்கலாம்பொன்பட்டை அவரது அதிகாரத்தையும் தெய்வீக உரிமையையும் குறிக்கிறதுποδήρης பொதேரேஸ்நீண்ட அங்கி

 

வவ.14-16: இந்த வரிகள் அங்கு காணப்பட்ட நபரின் காட்சியை விவரிக்கின்றனஅவருடைய 

தலைமுடி வெண்பணி போலவும்அவர்களுடைய கண்கள் தீப்பிழம்பு போலவும்காலடிகள் வெண் கம்பளிபோல பளபளப்பதாகவும்அத்தோடு அவருடைய குரல் வெள்ளப் பெருக்கு போல காண்ப்படுகிறது

 அவர் தன்னுடைய வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருக்கிறார்இது அவருடைய அதிகாரத்தைக் காட்டுகிறது (ἀστέρας ἑπτὰ அஸ்டெராஸ் ஹெப்டாஏழு விண்மீன்கள்). இரு புறமும் 

வாள் அவருடைய வாயிலிருந்து வெளிவருகிறதுஇந்த அடையாளம் இறைவார்த்தையைக் 

குறிக்கும் அடையாளம் (ῥομφαία δίστομος ஹரொம்பாய்யா திஸ்டொமொஸ்இரண்டு பக்கம் 

கூர்மையான வாள்)அவருடைய முகம் நண்பகல் சூரியன் போல 

இருக்கிறது (ἥλιος ஹேலியொஸ்). 

 

.17: காட்சியைக் கண்ட யோவான் தனது நிலைப்பாட்டை ஓர் இறைவாக்கினரைப் போல ஒப்பனை செய்கிறார்ஆண்டவர் தனது பலத்தை கொடுப்பது போல வலக்கையை வைத்து அதிகாரம் கொடுக்கிறார்ஆண்டவர் தன்னை முதலும் முடிவும் என்று சொல்வது எசாயா இறைவாக்கை நினைவூட்டுகிறது (காண்எசாயா 41:4). நான் இருக்கிறேன்என்று சொல்வதும் (ἐγώ εἰμι 

எகோ எய்மிமுதல் ஏற்பாட்டு இறைவெளிப்பாடுகளை நினைவூட்டுகிறது

இதே அர்த்தத்தில் முடிவுரையிலும் பல வசனங்கள் வரும் (ஒப்பிடுக: 21:6: 22:13).

 ஆண்டவர் தன்னைம முதலும் முடிவும் என்கிறார் (πρῶτος καὶ ὁ ἔσχατος 

புரோடொஸ் காய் ஹொ எஸ்காடொஸ்முதலும் முடிவும்). 

 

நற்செய்தி

யோவான் 20:19-31

 

19அன்று வாரத்தின் முதல் நாள்அது மாலை வேளையூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் 

இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் 

நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.

20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார்ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுகதந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை 

அனுப்புகிறேன்என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோஅவை மன்னிக்கப்படும்எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோஅவை மன்னிக்கப்படாஎன்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமாஇயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள்தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்துஅதில் என் விரலை விட்டு

அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.

26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார்கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் 

நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.

27பின்னர் அவர் தோமாவிடம், 'இதோஎன் கைகள்இங்கே உன் விரலை இடுஉன் கையை நீட்டி என் விலாவில் இடுஐயம் 

தவிர்த்து நம்பிக்கைகொள்என்றார்.

28தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்நீரே என் கடவுள்!' என்றார்.

29இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார்அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும்நம்பி அவர் பெயரால் 

வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

 

 இந்தப் பகுதியில் பயத்திலிருந்து நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு மாற்றத்தை சீடர்கள் பெற்றதை அவதானிக்கலாம்இந்த பகுதிக்கு முன்னர் இயேசு ஏற்கனவே மகதலா மரியாவிற்க்கு தோன்றியிருந்தார் அத்தோடு தனது திருத்தூதர்களுக்கும் தனது உயிர்ப்பைப் பற்றி அறிவிக்க சொல்லியருந்தார்மரியா ஆண்டவரின் உயிர்ப்பை விட அவர் தன்னை சந்தித்ததையே பற்றி மகிழ்ந்திருந்தார்எனவே யோவான் இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்கிறார்

 

.19: மாலை நேரம் கதவுகள் மூடியிருப்பது சீடர்களின் பய உணர்வையும் மனச் சிக்கல்ளையும் அழகாக படம்பிடிக்கிறது ὀψίας τῇ ἡμέρᾳ ஒப்ஸியாஸ் டே ஹேமெராநாளின் மாலை

சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி கதவுகை மூடி வைத்திருக்கிறார்கள்ஆண்டவர் இவர்களின் நடுவில் நிற்பதும்அமைதி உண்டாகுக என்று சொல்வதும்கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான செய்தியோவானின் வாசகர்களுக்கும் இது முக்கியமாக தேவைப்பட்டதுஅமைதியை தரக்கூடியது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமேஅத்தோடு கதவுகள் மூடியிருந்தாலும்மாலையானாலும் ஆண்டவரின் சக்தியை தடுக்க முடியாது என்கிறார்

 

வவ.20-21: ஆண்டவர் தனது உடலை காட்டுவதன் மூலமாக தான் ஒரு மாய ஆவி இல்லை 

என்பதையும்இது ஒரு வகை மனம் சம்பந்தமான அனுபவம் இல்லை என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்வர்இங்கே இயேசுவின் அதே பணிமாற்றங்கள் இன்றி திருத்தூதர்கள் வாயிலாக மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறது.  இது ஏற்கனவே ஆண்டவர் தான் வாழ்ந்தபோது சொன்ன வார்த்தைகளை நிறைவுசெய்கிறது (காண்: 14,27: 16,33). இரண்டு முறை அமைதி தருவதாகச் சொல்வது

அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு அமைதி எவ்வளவு தேவையாக இருந்தது என்பதை கோடிடுகிறது. εἰρήνη ὑμῖν. எய்ரேனே ஹூமின் - அமைதி உங்களுக்கு உரித்தாகுக. καθὼς ἀπέσταλκέν με ὁ πατήρ, - காதோஸ் அபெஸ்டால்கென் மெ ஹொ பாடேர்தந்தை என்னை அனுப்பியது போல,  κἀγὼ  ⸀πέμπω ὑμᾶς. காகோ பெம்போ ஹூமாஸ் - நானும் உங்களை அனுப்புகின்றேன்

 

வவ.22-23: இங்கே பல செய்திகள் பறிமாறப்படுகின்றனஉண்மையில் 

திருத்தூதர்கள் ஆவியை நிறைவாக ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னரே பெற்றுக்கொண்டனர்இந்தப் பகுதி திருத்தூதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலை காட்டுகிறது என எடுக்கலாம்அத்தோடு தொடக்கநூலில் ஆண்டவர் மனிதனை படைத்து தனது ஆவியை ஊதியே உயிரைக் கொடுத்தார்இங்கே தனது ஆவியை ஊதி மீண்டும் புது பிறப்பு கொடுக்கிறார் (ἐνεφύσησεν καὶ λέγει எனெப்புசுசென் காய் லெகெய்ஊதிச் சொல்கிறார்), 

என எடுக்கலாம்பாவங்களை மன்னித்துஒப்புரவு அருட்சாதனம் ஏற்றபடுத்தப்பட்ட 

நிகழ்வாகவும் ஆய்வாளர்கள் இந்நிகழ்வைக் காண்கின்றனர்

 

வவ.24-25: தோமாவின் பேச்சும் அவரது செயல்களும் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பிரள்வுகளைக் காட்டுகிறதுதோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட ஆண்டவரின் தரிசனத்தை நம்பவில்லை என்றே தோன்றுகிறதுதோமா மற்றவர்களைவிட விசுவாசத்தில் குறைந்தவர் என்று சொல்வது யோவானின் செய்தியல்லஇவருடைய பெயர் அரமெயிக்க மொழியில் இருவர் என்ற அர்தத்தைக் கொடுக்கிறது Θωμᾶς δὲ εἷς ἐκ τῶν δώδεκα, ὁ λεγόμενος Δίδυμος தோமாஸ் தெ எய்ஸ் எக் டோன் தோதெகாஹொ லெகொமெனொஸ் திதுமொஸ்தோமா பன்னிருவருள் ஒருவர்அவர் திதுமொஸ்-இருவர் என அழைக்கப்படுகிறவர்.

 தோமாதான் ஆண்டவருடன் இறக்கவும் முதன் முதலில் ஆயத்தமாக இருந்தவர் (11,16). அதே 

வேளை தன்னுடைய வினாக்களை அஞ்சாது ஆண்டவரிடம் கேட்கவும் தயாராக இருந்தவர் (14,5). 

தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட ஆரம்பகால திருச்சபையின் மனித முகம் என்றே எடுக்கவேண்டும்ஆண்டவரின் காயங்கள்அவரின் சிலுவை மரணத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன

 

வவ.26-27: எட்டு நாட்கள் என்பது கிரேக்கர்களின் ஒரு வார அளவைக் குறிக்கும் 

ἡμέρας ὀκτὼ ஹெமெராஸ் ஒக்டோஎட்டு நாட்களில்கதவுகள் 

மூடியிருந்ததும்இயேசு உள்ளே வந்ததும்சீடர்கள் இன்னும் பயத்திலே இருந்ததையும் குறிக்கிறதுஆண்டவர் இரண்டு முறை அவர்களுக்கு அமைதி கொடுத்தும் அவர்கள் பயத்திலே இருக்கிறார்கள்ஆக மற்ற சீடர்களுக்கும் தோமாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லைஆண்டவர் தோமாவிற்கு சொல்லும் செய்தி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியதுஅதுஅச்சம் விலக்கி நம்பிக்கை கொள்ளுங்கள் என்பதாகும்யோவான் நற்செய்தியின் நோக்கமும் இதுவேεἰρήνη ὑμῖν. 

எய்ரேனே ஹூமின்அமைதி உங்களுக்குγίνου ἄπιστος ἀλλὰ πιστός. 

கினூ அபிஸ்டொஸ் அல்லா பிஸ்டொஸ்அவநம்பிக்கை கொள்ளாதேவிசுவாசம் கொள்.

 

.28: கிறிஸ்தவ நாகரீகத்தினதும்விசுவாசத்தினதும் முக்கியமான கோட்பாடு இதுஇயேசுதான் 

ஆண்டவர்அவரேதான் கடவுள் (ὁ κύριός μου καὶ ὁ θεός μου -  ஹொ கூரிஹொஸ் மூ காய் கெஹா தியூஸ் மூஎன் ஆண்டவரே சக என் கடவுளே!)

 

வவ.29-31: யோவான் இவ்வாறு தன் நற்செய்தியின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறார்இயேசுவைக் காணாமல் அவரை நம்புதலே இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்க்கைக்கு தேவையாக இருந்ததுயோவான்இயேசுவின் அனைத்து செய்ற்பாடுகளையும் நற்செய்தி உள்வாங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்இங்கனம்நற்செய்திகள் சில குறிப்பிட்ட தேவைகளுக்காவே எழுதப்பட்டது என்பது புலனாகிறதுநற்செய்திகள் உண்மையில் இயேசுவின் அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்

μακάριοι οἱ μὴ ἰδόντες  καὶ πιστεύσαντες. 

மாகாரியொய் ஹொய் மே இதொன்டெஸ் காய் பிஸ்டெயுசான்டெஸ்பார்க்காமல் நம்புகிறவர்கள் பேறுபெற்றவர்கள்.

 

மதம் என்று சொல்லி மதம் பிடித்த சாத்தானின் ஏவலர்கள் 'ஜிகாத்'

என்று வன்முறை செய்கிறார்கள்

கடவுளின் மக்களை கொலை செய்தார்கள் அன்று 

இவர்கள் போதிப்பது கடவுளை அல்ல,

அப்படி போதித்தாலும் அவர்கள் கடவுள்சாத்தானே (இபிலிசு).

இந்த சாத்தானின் பிடியிலிருந்துஇவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவே காப்பாராக.

 

பொய்மை அழியட்டும்,

பொய் தெய்வங்கள் அழியட்டும்.

அதனை பறைசாற்றும் மூடர்கள் மனமாறட்டும்ஆமென்.

 

 

போரினையும், வன்முறையையும், அதன் அமைப்புக்கள் ஒவ்வொன்றையும்

எதிர்த்து, ஏழைகளுக்காக குரல் கொடுத்து, வாழந்து, ஏழையாகவே மாறிப்போன,

அன்பு திருத்தந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

 

இயேசுவிற்கு வெற்றிஅவர் பெயர் வாழ்கஆமென்.

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Third Sunday in Easter Season C, 2025: பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம், 04.05.2025

  பாஸ்காக்   காலம்   மூன்றாம்   வாரம் , 04.05.2025 மனிதர்களுக்குக்   கீழ்ப்படிவதைவிட   கடவுளுக்கு   அல்லவா   கீழ்ப்படிய   வேண்டும் ?  ...