திங்கள், 24 டிசம்பர், 2018

Christmas Day Mass: கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ)

Christmas Day Mass: கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ)


கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (,,)

மிஜெகன்குமார் அமதி
தூய மரியாள் ஆலயம்
பன்விலகண்டி
ஞாயிறு, 24 டிசம்ப, 2017


முதல் வாசகம்எசாயா 62,11-12
பதிலுரைப் பாடல்திருப்பாடல் 96
இரண்டாம் வாசகம்தீத்து 3,4-7
நற்செய்திலூக்கா 2,15-20
எசாயா 62,11-12
11உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: 'மகள் சீயோனிடம் சொல்லுங்கள்
இதோஉன் மீட்பு வருகின்றதுஅவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது அவரது செயலின் பயன் அவர் முன்னேஉள்ளது.' 12'புனித மக்களினம்என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்என்றும் அவர்கள்அழைக்கப்படுவார்கள்நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்என்றும் இனி 'கைவிடப்படாத நகர்என்றும்பெயர் பெறுவாய்.

எசாயாவின் 62வது அதிகாரம்மிகவும் அழகிய பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த அதிகாரம் முழுவதும்நம்பிக்கை வசனங்களால் நிறைந்துள்ளதுஅதேவேளை மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளைஇப்பகுதி தாங்கி வருகிறதுஎவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோஅதே போலஅவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து

.11: ஆண்டவர் எருசலேமை 'மகள் எருசலேம்என்று அழைக்கும் படி எசாயா வாhத்தைகளை பாவிக்கிறார்(בַת־צִיּוֹן பாத்-ட்சியோன் மகள் சீயோன்). அத்தோடு ஆண்டவருடைய இறைவாக்கு உலகின் கடைக்கோடிக்கும்அறிவிக்கப்படுகிறதுஅதாவது ஆண்டவருடைய வாக்கிற்கு எந்த நாடும் அல்லது மக்களினமும் வெளியில்இல்லை என்பது சொல்லப்படுகிறதுமகள் சீயோனுக்கு சொல்லப்படும் முதலாவது நற்செய்திஷஉன் மீட்புவருகிறது(יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹ் பா), இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச் சொல்லில்தொடர்பிருக்கிறது கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள் இனி தூயவர்கள் என அறியப்படுவார்கள்ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம்கடையெல்லைவரைஎன்று சொல்லிஆசிரியர் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்இஸ்ராயேல் வீழ்த்தப்பட்டபோது அனைவரும்அதனைக்கண்டார்கள் ஆகவே மீட்பு வருகின்ற வேளையிலும் அனைவரும் அதனை அறியவேண்டியவர்களாகஇருக்கிறார்கள்
ஆண்டவரின் வெற்றிப்பரிசு (שָׂכָר சாகார்) என்பது இங்கே போர் வெற்றிப்பொருட்களைக் குறிக்கிறதுஇதுஅடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிக்கலாம்அடிமைகளாக 
இருக்கிறவர்கள் என்ன ஊதியத்யைப் பெற்றாலும் அது விடுதலை என்ற உன்னதமான பரிசுக்கு நிகராகமுடியாதுஅதேபோல 'கைமாறுஎன்ற சொல்லும் (פְּעֻלָּה  பெ'யூலாஹ் செயலின் பயன்) இங்கேபயன்படுத்தப்படுகிறதுஇவற்க்கு மேலாக சீயோனுக்கு மீட்பு (יָשַׁע யாஷ') என்ற செய்தி வருகிறதுஇதற்கு ஒத்தகருத்தாகத்தான் மற்ற சொற்பதங்கள் பாவிக்கப்படுகின்றன.

.12: இஸ்ராயேல் தூய மக்களினமாக மாற்றம் பெருகிறது (עַם־הַקֹּדֶשׁ  'அம் ஹகோதெஷ் புனித மக்களினம்).  அத்தோடு அவர்கள் ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள் என்ற பெயரையும் பெறுகிறார்கள் (גְּאוּלֵי יְהוָה கெ'ஊலெ அதேனாய் - ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்)
இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கைகொடுக்கிறார்அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறதுஷதேடப்படுகிற நகர் (דְרוּשָׁ֔ה עִירதெரூஷாஹ் 'இர் - பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல(לֹא נֶעֱזָבָה׃ லோநெ'எட்ஸாவாஹ் - கைவிடப்பட்டவள் அல்ல). 

தீத்து 3,4-7
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களைமுன்னிட்டு அல்லமாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டுபுதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூயஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியைநம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகிநாம் எதிர்நோக்கிஇருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்

திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம்செய்தியிலும்இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது

ஷநம் மீட்பராம் கடவுள்(σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேயூ) என்பது 
இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள்இங்கே பவுல் இயேசுவை முதல்ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார்இயேசுவை கடவுளாக கண்டது திருச்சபை தந்தையர்களின் கண்டுபிடிப்புஎன்ற பிற்கால பேதகத்திற்கு இந்த சொற்பதம் நல்லதொரு விசுவாசச் சான்று

ஷநன்மையும் மனித நேயமும்(ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία ஹே கிரேஸ்டொடேஸ் காய் ஹேபிலான்த்ரோபியாஇவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர்இதுநன்மையையும்பரிவையும் பிரிக்க முடியாது எனக் காட்டுகிறது

கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாதுஅது கடவுளின்இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல்தீத்துவை (ஆயர்களைஅதனைச் செய்யச்சொல்கிறார்கடவுள் மனித குலத்தை மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம்கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்கிறார்

பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராகஇனி வரும் காலங்களில் திருச்சபையைவழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாகபாரம்பரியம் கருதுகிறதுஇம்மடல்களை வாசிக்கும் போதுஅக்கால பிரச்சனைகளும்அக்கால கிறிஸ்தவநம்பிக்கையும் நமக்கு புரியும்கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்குகாணலாம்.

லூக்கா 2,15-20
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்புஇடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள்நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்என்றுசொல்லிக்கொண்டு, 16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தகுழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத்தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும்இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்துவியப்படைந்தனர். 19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவைகண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப்போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம்நிகழ்ந்திருந்தது. 21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்ததுதாயின் வயிற்றில்உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா அவதானமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம்மத்தேயு இயேசுவை புதியமோசேயாகவும்மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளைலூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லதுஅனைத்தின மக்களின் கடவுளாகக் காட்டுவார்லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள்இயேசுவின்பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால்இயேசுவை அவர்எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும்லூக்கா சின்கிறேசிஸ்(Syncresisஎன்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார்அதாவது லூக்கா யோவானையும் 
இயேசுவையும் ஒப்பிடுகிறார்இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும்காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார்லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்இயேசுவின்பிறப்புஇடையர்களும் வானதூதர்களும்இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல்நாசரேத்திற்கு திரும்பிச்செல்லுதல்மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில் இயேசுவின் முழு குழந்தைப் பருவமும்உள்ளடக்கப்பட்டுள்ளதுஇன்றைய பகுதியிலே,

வானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக்காட்டுகிறார்மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும்கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம்காட்டலூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார்வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பலவேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்'ஆக்)சில அதிவிசேடமான இடங்களின் கடவுளின்பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள்புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றியஅறிவு நன்கு வளர்ந்திருந்தது
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதுநற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள்கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக 
இருக்கிறார்கள்.

இடையர்களின் பெத்லகேம் வருகை(ποιμένες  பொய்மெனஸ் இடையர்கள்) இடையர்கள் பற்றி இயேசுபிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லைஅவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல்நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர்சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்கள்உடலிலும் உடையிலும் அழுக்காக இருந்தார்கள்அந்த சமூதாயம் அவர்களை உள்ளத்திலும் அழுக்கானவர்கள்எனக் கண்டதுஇவர்களை அதிகமான அக்கால மக்கள் திருடர்களாகவே கண்டார்கள் (பிழையாக). 
ஆனால் விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லைகடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவேகாட்டினார்தலைவர்களையும் அவரைப்போலவே நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார்இயேசுவும் தன்னைநல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின்மிக முக்கியமான வசனம் இதுபேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும்ஆயர்களாகவேஇருக்கச்சொல்கிறார்லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார்ஒன்றுநல்ல ஆயரின் பிறப்புஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறதுஇரண்டுதாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும்லூக்கா அறிவிக்கிறார்.

( Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலோஸ்நானே நல்ல ஆயன்

இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம்சிந்திக்க வைக்கிறதுஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம்அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறதுஅத்தோடு அவர்களின் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறதுசோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்

பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்யாருக்கு சொன்னார்கள்மரியாவுக்கும் யோசேப்புக்கும்என்று நினைக்கிறேன்யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார்மற்றவர்கள் அனைவரும்வியப்படைந்தனர்இந்த மற்ற அனைவரும் யார்(πάντες οἱ ἀκούσαντες பான்டெஸ் ஹொய் அகூசான்டெஸ்கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம்வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல்(θαυμάζω தௌமாட்சோ: வியப்படைஆச்சரியப்படுமகிழ்பயங்கொள்மரியாதைகொள்வணங்குஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின்இந்த பதிலுணர்வுவெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்லூக்காவின் மரியா சாதாரண இளம்பெண் அல்லஅவர் திருச்சபையின் முன்னோடிநம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்காமரியா பல வேளைகளில்இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவதுமரியாவை யார் எனக் காட்டுகிறது

இடையர்களின் ஆட்டமும் பாட்டும்கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக்காட்டுகிறார்எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லிகடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும்சொல்கிறார்.

பிறந்த குழந்தை ஆண்டவர்நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்;, போர் வெறியாலும்சமய மூட நம்பிக்கையாலும் 
அல்லலுறும் இவ்வுலகைகுழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!
சத்தம் சந்தடியாக மாறிபோயிருக்கும் நத்தார் விழாவை,
அதன் உண்மையான நிலைக்கு ஆண்டவர் கொண்டுவருவாராக.

இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...