சனி, 21 ஜனவரி, 2023

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு. 3rd Sunday in Ordinary Times, A, 2023; 22.01.2023

                                                              ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு.

                                                                                                      22.01.2023

       
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
  Chaddy, Velanai,
Jaffna
           21.01.2023. 


முதல் வாசகம்எசாயா 8,23-9,3
பதிலுரைப்பாடல்திருப்பாடல் 27
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,10-13.17
நற்செய்திமத்தேயு 4,12-23

எசாயா 9,1-4
 1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது முற்காலத்தில்செபுலோன் நாட்டையும்நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்பிற்காலத்திலோபெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்புபிறஇனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். 2காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்சாவின் நிழல் சூழ்ந்துள்ளநாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. 3ஆண்டவரேஅந்த இனத்தாரைப்பல்கிப் பெருகச் செய்தீர்அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்அறுவடை நாளில்மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்கொள்ளைப்பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். 4மிதியான்நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர்உடைத்தெறிந்தீர்அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

 எசாயா இறைவாக்குப் புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்தில்முதல் ஒன்பதுவசனங்கள் வரவிருக்கும் மெசியாவையும்அவர் எதிரி (அயல்நாடுகளுக்கு செய்யவிருப்பதையும் விளக்குகின்றனஇதனை மெசியாக்கால விடியல் எனவும்அழைக்கின்றனர்இந்த வரிகளை நம்பிக்கையின் வரிகளாக காணவேண்டும் எனநினைக்கின்றேன்அத்தோடு இந்த வரிகளை நாம் வாசிக்கும் போதுஅசிரியர்கள்வடநாடான இஸ்ராயேலுக்கு செய்தவற்றை நினைவில் கொள்வது நலமாக இருக்கும்அசிரியா கி.மு 7ம் நூற்றாண்டில் வட அரசான இஸ்ராயேலை தாக்கி அதனைகைப்பற்றயதுஅசிரியர்கள்சமாரியவை சூறையாடிஇஸ்ராயேல் நிலப்பரப்பையே மாற்றிஅமைத்தார்கள்மக்களை அடிமைகளாக தம் தலைநகர் நினிவேக்கு கொண்டுசென்றார்கள் என ஒரு பாரம் பரியம் நம்புகிறதுஇவர்களின் கைப்பற்றுதலால் வட அரசின்பல நகர்களும்கோத்திரங்களும் இல்லாமலேயே போயினஇது இஸ்ராயேலுக்க மிகவும்துன்பம் நிறைந்த காலம்தென்னரசான யூதேயாவை விடவட அரசு இஸ்ராயேல்பலவழிகளில் வல்லமையுடையதாக இருந்ததுஇருந்தபோதும் அழிந்து போனதுஅசிரியாவின் வருகையினால் கடவளின் மக்களானஇஸ்ராயேல் இனமும் மாற்றம்பெற்றதுஇன்று வரை இந்த வட அரசின் மக்களுக்கு என்ன நடந்தது என்பது அவ்வளவுதெளிவாக இல்லை

.1: இந்த வரி தமிழ் மற்றும் ஏனைய விவிலியங்களில் 8,23 வது வரியாகஅமைக்கப்பட்டுள்ளதுஇந்த வரியின் முக்கிய பாடுபொருளாக நெப்தலியும்செபுலேனும்காட்சிப்படுத்தப் பட்டுள்ளனமூன்றாம் திக்லத் பிலயேசர் சமாரியாவை தாக்கியபோதுஇந்த நிலங்களை அசிரியாவுடன் இணைத்தான்
எசாயா ஆசிரியர்முற்காலத்தில் செபுலோனுக்கும்நப்தலி நாட்டிற்கும் கடவுள் அவமதிப்புசெய்தார் எனச் சொல்கிறார்

செபுலோன் (זְבֻלֽוּן), இவர் யூதாவின் பத்தாவது மகன்இவருடைய தாயார் லேயாலேயாவிற்கு இவர் ஆறாவதும் இறுதியுமான மகன்இவர்தான் கலிலேய பகுதியில்குடியேறியவர்களின் ஆரம்ப பிதாவாக கருதப்படுகிறார்செபுலோன் என்றால் மகிமைஎன்றும் பொருள்படும்செபுலோன் பகுதி பல வளமான காட்டு நிலங்களைஉள்ளடக்கியதாக இருந்ததுநீதிமான்களுடைய காலத்தில் இந்த பகுதி முக்கியமானஇடமாக இருந்திருக்கிறதுஇறைவாக்கினர் யோனா இந்த பகுதியிலிருந்து வந்தவர் எனநம்பப்படுகிறது (2அர 14,25)செபுலோனையும் நப்தலியையும் எசாயா இணைத்து ஆசிவார்த்தைகளை கூறுவதுபிற்காலத்தில் இந்த பகுதியில் (கலிலேயாவில்இயேசுபணிசெய்ததை நினைவூட்டுகிறது என்று கிறிஸ்தவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

நப்தலி (נַפְתָּלִי), இவர் யாக்கோபின் ஆறாவது மகன்இராக்கேலின் பணிப்பெண்ணானபில்காலின் இரண்டாவது மகன்நப்தலி என்றால் என்னுடைய மல்யுத்தம் என்று பொருள்இது இராக்கேல் தன் சகோதரி லேயாவினுடன் கொண்டிருந்த மனக் கசப்பைக்காட்டுகிறதுஇந்த குலத்திலிருந்து பல இராணுவ வீரர்கள் நீதிபதிகள் மற்றும் அரசர்கள்காலத்தில் தோன்றியிருக்கிறார்கள்பாராக் என்ற ஒரு முக்கியமான தலைவர் இந்தகோத்திரத்தை சார்ந்தவரேஇந்த பகுதியும் அடர்த்தியான காடுகளையும் மலைத்தொடர்களையும் கொண்டிருந்ததுநப்தலி பென்-கதாத் என்ற சீரிய தலைவனால்கைப்பற்றப்பட்டதுபின்னர் இந்த பகுதி அசிரியாவுடன் 
இணைக்கப்பட்டது
 இந்த இரண்டு கோத்திரங்களின் அழிவுஆண்டவருடைய தெரிவிலே உண்டானது என்றுஎசாயா காண்கின்றார்இது இவ்வாறு இருக்கபிற்காலத்தில் அதிகளவாக புறவினத்தவர்வாழ்ந்த பெருங்கடல் வழிப்பகுதிஅதாவது தோர் மகாணம் (கார்மேல் மலைக்குகீழ்ப்பகுதி)யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிகள்மற்றும் புறவினத்தர் வாழும்கலிலேயா போன்றவை ஆண்டவரால் மேன்மைப்படுத்தப்படும் என்கிறார்.

.2: இந்த வரி புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது (ஒப்பிடுக மத் 4,15: ✽✽லூக் 1,79). இந்த வரி திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ள அதே வேளைஒளி-இருள் என்ற இரண்டு அடையாளங்களை அழகாக பாவிக்கிறதுஇருள் (חֹשֶׁךְ ஹொஷேக்), கடவுள் இல்லாத சாபம் நிறைந்த வாழ்வின் அடையாளம்ஒளி (אוֹר ஓர்), இருளுக்கு எதிர்மாறாககடவுளின்  இருப்பையும்ஆசீரையும் குறிக்கின்றதுசாவின் நிழல்சூழ்ந்த நாடு (אֶרֶץ צַלְמָוֶת ’eredz ‘almāwetஎன்பது யூதாவின் இழிநிலையைக் குறிக்கிறதுசுடர் ஒளி உதித்தது என்பதுஅந்நாட்டில் எதிர் கால நம்பிக்கையைக் காட்டுகிறதுஇந்தஅடையாளங்கள் வாயிலாக நிகழ்கால துன்பங்கள் நிச்சயமாக மாறும் என்றநம்பிக்கையை எசாயா கொடுக்க முயல்கிறார்

(காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்சாவின் நிழல் சூழ்ந்துள்ளநாட்டில்
குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.)
(✽✽இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்நம்முடைய கால்களைஅமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.)

.3: மெசியாவின் வருகையினால் நடக்கவிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்கிறார் எசாயாஓர்இனம் பெருகுதல் என்பது அதன் வளர்ச்சியைக் காட்டுகிறதுஅது நிச்சயமாக மகிழ்சியைபெருக்கும்இதனை இரண்டு உதாரணங்கள் வாயிலாக விளக்குகிறார்

அருவடை நாளில் வேளாளர் மகிழ்வதனைப்போல்
போரின் பின்னர் எதிரி நாட்டு கொள்ளைப் பொருளை பங்கிடுதல் போல
 இந்த இரண்டு உதாரணங்களும் அக்கால மக்களுக்கு நன்கு தெரிந்த உதாரணங்கள்அக்காலத்தில் அறுவடை காலத்தில் விளைச்சலை பக்குவமாக அறுவடை செய்வதுஅவ்வளவு எளிதாக இருந்திருக்காதுஅறுவடை காலத்தில் மிருகங்களின் தாக்குதல்களும்எதிரி நாட்டின் படையெடுப்பும் மிகுதியாக இருந்திருக்கும்கொள்ளைப் பொருளைபங்கிடுதல் (בְּחַלְּקָם שָׁלָל behalqām šālāl)அக்கால போர் விழுமியமாக கருதப்பட்டதுஇதுநமக்கு நன்கு தெரிந்த ஒரு அனுபவம் ஆனால் இது நமக்கு விழுமியமல்ல மாறாக சாபம்(நம்முடைய சொத்துகள் முப்பது வருட போரில் பலரால் பகிரங்கமாகவும்பங்கிடப்பட்டதனை எப்படி மறப்பது).  

.4: மிதியான் (מִדְיָן midyān)ஆபிரகாமின் நான்காவது மகன்இவர் ஆபிரகாமின்வைப்பாட்டியின் மூலமாக பிறந்தவர்இவர் வழிவந்த மக்களை விவிலியம் மிதியானியர்என்று குறிப்பிடுகிறதுஇவர்கள் நாடோடி மக்களாக வட மேற்கு ஆரேபிய பலைவனத்தில்வாழ்ந்தனர் (தற்போதைய வடமேற்கு சவுதி அரேபியா). இவர்கள் இஸ்ராயேலருக்குமுக்கியமான எதிரி மக்களாக கருதப்பட்டனர்இந்த மிதியானியரை கிதயோன்முறியடித்திருந்தார் (வாசிக்க நீதி 7-8)எசாயா இந்த வரலாற்றை நினைவு படுத்துகிறார்போல தோன்றுகிறதுநுகமும்தோலை புண்படுத்தும் தடியும் அடிமைத்தனத்தின்சின்னங்கள்மாட்டுக்கு நுகம்பாரம் ஏற்ற பயன்படுகிறதுதடிதண்டனை கொடுக்கபயன்படுகிறதுகோல்அதிகாரத்தைக் குறிக்கிறதுஇவை எல்லாம் உடைக்கப்படும்என்கிறார் ஆசிரியர் எசாயா

திருப்பாடல் 27
1ஆண்டவரே என் ஒளிஅவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்சவேண்டும்ஆண்டவரே என்உயிருக்கு அடைக்கலம்யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்
2தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில்என் பகைவரும் எதிரிகளுமானஅவர்களே இடறி விழுந்தார்கள்
3எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும்என் உள்ளம் அஞ்சாதுஎனக்கெதிராகப் போர் எழுந்தாலும்நான் நம்பிக்கையோடிருப்பேன்
4நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்அதையே நான் நாடித் தேடுவேன்ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக்கண்டறிய வேண்டும்
5ஏனெனில்கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்தம்கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய்வைப்பார்
6அப்பொழுதுஎன்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச்செய்வார்அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்ஆண்டவரைப்புகழ்ந்து பாடல் பாடுவேன்
7ஆண்டவரேநான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்என் மீதுஇரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.  
8'புறப்படுஅவரது முகத்தை நாடுஎன்றது என் உள்ளம்ஆண்டவரே உமது முகத்தையேநாடுவேன்
9உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்நீர் சினங்கொண்டு அடியேனைவிலக்கிவிடாதிரும்நீரே எனக்குத் துணைஎன் மீட்பராகிய கடவுளேஎன்னைத்தள்ளிவிடாதேயும்என்னைக் கைவிடாதிரும்
10என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்
11ஆண்டவரேஉமது வழியை எனக்குக் கற்பித்தருளும்என் எதிரிகளை முன்னிட்டுஎன்னைச் செம்மையான பாதையில் நடத்தும்
12என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்ஏனெனில்பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க்கிளம்பியுள்ளனர்
13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும்நம்புகின்றேன்
14நெஞ்சேஆண்டவருக்காகக் காத்திருமன உறுதிகொள்உன் உள்ளம் வலிமைபெறட்டும்ஆண்டவருக்காகக் காத்திரு.

 திருப்பாடல் 27தனி மனித புகழ்ச்சிப்பாடல் என தமிழ் விவிலியத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுதாவீதுக்கு அல்லது தாவீதுடையஎன்ற ஓர் ஒற்றைச்சொல்முன்னுரையை எபிரேய விவிலியம் இதற்கு தருகிறது (לְדָוִד லேதாவித்)திருப்பாடல் 26, ஒரு நேர்மையாளர் செய்யும் விண்ணப்பம் போலவும்இந்தப்பாடல் அதன் தொடர்ச்சியாகஅந்த நேர்மையாளரின் புகழ்ச்சியாகவும் அமைந்துள்ளதுஇது புகழ்சிப்பாடலாகதோன்றினாலும்இதன் வரிகளுக்கு பின்னால் இஸ்ராயேலின் விசுவாச பிரமாணம்அடங்கியுள்ளதை அவதானிக்கலாம்இதன் காலம் மற்றும் இடத்தை அறிவது இலகுவாகஇருக்காதுஆனால் துன்பமான வேளையிலும் மற்றும் செப வேளையிலும்பாவிக்கப்படக்கூடிய ஒரு பாடல் போல தோன்றுகிறதுஒரு சில ஆய்வாளர்கள் இந்தபாடலில் சமாந்தர அடுக்கு கவிநடையை காண்கின்றனர்அதே வேளை தனியானவரிகளில் இந்த பாடல்ஏறு படி வடிவிலான கவிநடையையும் கொண்டுள்ளது

1: வவ.1-3- கடவுளின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய தேவை
 1: வவ.4-6- கடவுளிடம் பாதுகாப்பிற்கான முதலாவது செபம்
 2: வவ.7-12- கடவுளிடம் பாதுகாப்பிற்கான இரண்டாவது செபம்
2: வவ.13-14- கடவுளிடம் நம்பிக்கை வைத்தல் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது

.1: ஆசிரியர் இரண்டு கேள்விகளை கேட்கிறார் அதில் அவருடைய விடையும்அடங்கியுள்ளதுஇந்த கேள்விகள் நேர்மறையான கேள்விகள் அல்லவிடைகளைக்கொண்ட கேள்விகள் எனலாம்ஒளி மற்றும் மீட்பு என்ற சொற்கள் இரண்டு வேறுசொற்கள் என்றாலும்அர்த்தத்தில் அவை ஒத்த கருத்துச் சொற்களேஇருவருடையமீட்புதான் ஆசிரியர் சொல்லும் ஒளிஇதனையே இந்த ஆசிரியர் காட்டுகிறார்இந்தஒளியாகவும்மீட்பாகவும் ஆண்டவர் இருப்பதனால்அவர் நீதிமான்கள் யாருக்கும்அஞ்சவோ அல்லது அஞ்சிநடுங்கவேண்டியதோ இல்லை என்கிறார்முதல் ஏற்பாட்டில்ஒளியும் (אוֹר ஓர்), மீட்பும் (יֵשַׁע யெஷா), கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகின்றஅடையாளங்கள்

.2: தீயவர்கள் என்பவர்கள் இங்கே இவரின் எதிரிகளாகவும்பகைவர்களாகவும்இருக்கிறார்கள்அவர்கள் இவரின் உடலை விழுங்க முயற்சிக்கிறார்கள் என்கிறார்இதுஅவர்கள் இவரை அழிக்க முயல்கிறார்கள் என்பதை ஊகிக்கலாம்

.3: இந்த வரிஅரச வாழ்வியலை காட்டும் வரி போல மேலோட்டமாக தோன்றுகிறதுஇந்த வரியைக் கொண்டு ஆய்வு செய்கிறவர்கள்இந்த பாடலின் ஆசிரியர் ஓர் அரசராகஇருக்க வேண்டும் என நினைப்பர்ஆனால் இது சாதாரண மனிதனின் சிக்கலாகக் கூடஇருக்கலாம்அதே வேளைஆசிரியர் இதனை கற்பனையாகவும் வடித்திருக்கலாம்போர்மற்றும் படை போன்றவை அக்காலத்திலும் இக்காலத்திலும் மக்களை அச்சத்திற்குஉள்ளாக்கிய நிகழ்வுகள்இருப்பினும் ஆண்டவர் தன்னோடு இருப்பதனால் இவற்றிக்குஅஞ்சவேண்டிய தேவை தனக்கில்லை என்கிறார் ஆசிரியர்

.4: தன்னுடைய ஒரே ஒரு விண்ணப்பம் என்று சொல்லி மூன்று விண்ணப்பங்கனைமுன்வைக்கிறார் ஆசிரியர்அவை உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதேஅவர்விண்ணப்பங்களானவை
ஆண்டவரின் இல்லத்தில் வாழ்நாள் எல்லாம் குடியிருத்தல் שִׁבְתִּ֣י בְּבֵית־יְ֭הוָה
ஆண்டவரின் அழகை-இனிமையைக் காணுதல் לַחֲז֥וֹת בְּנֹֽעַם־יְ֝הוָ֗ה
அவரது கோவிலில் அவர் திருவுளத்தை காணல் וּלְבַקֵּ֥ר בְּהֵיכָלֽוֹ
 இந்த வேண்டுதல்கள் இஸ்ராயேல் நீதிமானுடைய சாதாரணமானதும்இறுதியுமானதுமானவேண்டுதல்கள்இவற்றையே அதிகமான இஸ்ராயேலர் விரும்பினர்ஆண்டவருடையஇல்லம் என இரண்டு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளனஅவை ஓர் கட்டப்பட்டஆலயத்தை குறிப்பன போல் உள்ளனஆக இந்த பாடல் எருசலேம் தேவாலயம்கட்டப்பட்டதன் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம் (בֵית־יְ֭הוָה கடவுளின் வீடு, הֵיכָלֽוֹ அவர் மாளிகை).

.5: இந்த வரியில் கடவுளின் உறைவிடம் கூடாரம் என சொல்லப்படுகிறது (אֹהֶל). இந்தசொல் பாலைவன இடப்பெயர்வு அனுபவத்தை நினைவுகூறுகிறதுஅதாவது இஸ்ராயேல்மக்கள் எகிப்திலிருந்து மீண்டு வந்தபோது நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம்செய்தனர்அப்போது ஆண்டவர் சந்திப்புக் கூடாரத்தில் தங்கினார்இதனால் கூடாரம்கடவுளின் இல்லத்தின் அடையாளமாகியதுஇந்த கூடாரத்தில் கடவுள் தன்னை எல்லாதீங்கிலிருந்தும் ஒழித்து வைப்பார் என்கிறார் ஆசிரியர்ஏனெனில் இந்த கூடாரத்திற்குள்எவரும் நுழைய முடியாதுஆக இது மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியதுஅடுத்துகுன்றின் உச்சியையும் அவர் பாதுகாப்பான இடமாக காண்கிறார்குன்றிலே என்று எபிரேயவிவிலியத்தில் உள்ளது (בְּצוּר bedzûr). குன்று பாதுகாப்பான இடம்அத்தோடு இங்குஇலகுவில் எதிரிகள் ஏறிவர முடியாதுஅல்லது மறைவாக தாக்க முடியாது

.6: மேல் சொன்ன வரியில்பாதுகாப்பிற்காக மன்றாடுகிறார்இதன் பலனை இந்தவரியில் விவரிக்கிறார்எதிரிகள் முன்னால் தலைநிமிர்தல்வெற்றியைக் குறிக்கிறதுஆண்டவரின் கூடாரத்தில் பலிசெலுத்துவம்புகழ்ச்சிப் பாடல்களை பாடுவதும் மகிழ்வைக்குறிக்கின்றனஅவை வெற்றியையும் குறிக்கலாம்

.7: இந்த வரி மீண்டுமாக வேண்டுதலை மையப்படுத்துகிறதுகுரலைக் கேட்பதும்பதிலளிப்பதும் ஆண்டவரின் செவிசாய்தலைக் குறிக்கின்றன

.8: இவர் செபிக்கும் போது அந்த செபம் கேட்கப்பட்டுவிட்டது என்றால் போல்இவரின்உள்மனம் சாற்றுகின்றதுஆண்டவரின் முகத்தை நாடுதல் என்பதுஅவரின் பிரசன்னத்தைநாடுதல் என்ற பொருள் படும்இதனைத்தான் இவர் உள்ளம் சொன்னது அதனையே அவர்செய்வதாக வாக்களிக்கிறார்

.9: இந்த வரியில் ஒரு பயத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்கடவுள் ஒருவருக்குமுகத்தை மறைத்தல் என்பதுகடவுள் ஒருவருக்கு செவிசாய்கிறார் இல்லை என்றபொருள் தருகிறதுகடவுளுக்கு உருவம் இல்லைஅவருக்கு முகமும் இல்லை ஆனால்இங்கே கடவுளை ஒரு மனித தலைவராக வர்ணிக்கிறார்இது அவரின் கடவுள்அனுபவத்தைக் காட்டுகிறதுகடவுள் முகத்தை மறைத்தல் என்ற செயலுக்கு இன்னும் பலஒத்த செயல்கள் விவரிக்கப்படுகின்றனசினம்கொண்டு அடியேனை விலக்கிவிடல்மீட்பராகிய கடவுள் தன்னை தள்ளிவிடல்மற்றும் கைவிடுதல் போன்றவை அவை

.10: இந்த வரி ஆசிரியரின் இறையனுபவத்தின் உச்சத்தைக் காட்டுகிறதுதன்தந்தையும் தாயும் தன்னைக் கைவிட்டாலும்கடவுள் தன்னை கைவிடார் என்கிறார்தன்பெற்றோர் தன்னை கைவிட்டுவிட்டார்கள் எனச் சொல்லவில்லை (כִּי־אָבִי וְאִמִּי עֲזָבוּנִי). பெற்றோர்கள் பிள்ளையை கைவிடுவது இயற்கையல்லஅதனையும் தாண்டிய அன்புஇறைவனுடையது என்கிறார். (இக்கால உலகில் பெற்றோர்கள் பிள்ளைகளை கைவிடுவதுஅவ்வளவு கடினமான செயல் அல்லஎன்பதைப்போல் பல சந்தர்பங்களைக்காண்கின்றோம்). 

.11: ஆண்டவரின் வழியை கற்றல் என்பது ஆண்டவரது நியமங்களை கற்றல் என்பதற்குசமன்ஆண்டவரின் வழிதான் செம்மையான பாதை என்கிறார் ஆசிரியர்பாதை (דֶּרֶךְ தெரெக்என்பதுவிசுவாசம்மார்கம் மற்றும் வாழ்கை முறை என்ற பல அர்தங்களைக்கொடுக்கும்.

.12: இந்த வரிஆசிரியருக்கு பல எதிரிகள் இருப்பதுபோல ஒரு காட்சியைக்காட்டுகிறதுபொய்சாட்சிகள் மற்றும் வன்முறைகள் அக்காலத்திலும்நீதிமான்களுக்குஎதிரான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றனஆசிரியர்தனக்கெதிராக சூழ்ச்சிகள் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார்

.13: இஸ்ராயேலின் பாரம்பரிய விசுவாசம்மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லைஇஸ்ராயேல் முதல் ஏற்பாட்டு காலத்தில் இவ்வுலக வாழ்க்கையே முதலும் முடிவும் எனநம்பினர்வாழ்வோர் நாடு என்பது இவ்வுலக நாட்டை குறிக்கும் (בְּאֶ֣רֶץ חַיִּֽים be’eredz haiîm). இறந்தோர் நாடு என்பது இருள் சூழ்ந்த சீயோல் שְׁאוֹל  še’ôl என்ற ஒரு பள்ளத்தைகுறிக்கும்இதனை பற்றிய சரியான புரிதல் இன்னும் இல்லைஇது மரணத்தைகுறிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர்ஆசிரியர் தான் இன்னும் நம்பிக்கையில்இருப்பதாக கூறுகிறார்

.14: இந்த வரிஆசிரியர் தன்னுடைய உள்ளத்திற்கு தானே கட்டளையிடுவதைப் போல்அமைந்துள்ளதுஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது ஒரு முக்கியமான நம்பிக்கைவிழுமியம்காத்திருத்தல் என்பது இதயத்தை சஞ்சலம் இல்லாமல் வைத்திருத்தல் என்றஒரு அர்த்தத்தை இங்கே காட்டுகிறதுஇதயம்தான் எண்ணத்தின் உறைவிடம் என்றபழைய எபிரேய சிந்தனை இங்கே புலப்படுகிறது


1கொரிந்தியர் 1,10-13.17
10சகோதர சகோதரிகளேநம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான்உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய்இருங்கள்உங்களிடையே பிளவுகள் வேண்டாம்ஒரே மனமும் ஒரே நோக்கமும்கொண்டிருங்கள். 11என் அன்பர்களேஉங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக்குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். 12நான் இதைச் சொல்லக் காரணம்உங்களுள் ஒவ்வொருவரும் 'நான் பவுலைச் சார்ந்துள்ளேன்என்றோ 'நான்அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம். 13கிறிஸ்துஇப்படிப் பிளவுபட்டுள்ளாராஅல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில்அறையப்பட்டான்அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப்பெற்றுக்கொண்டீர்கள்? 14கிறிஸ்புகாயு ஆகியோரைத் தவிர உங்களுள் வேறு எவருக்கும்நான் திருமுழுக்குக் கொடுக்கவில்லைஇதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். 15ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது. 16ஸ்தேவனாவீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன்மற்றபடி வேறு எவருக்கும்திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை. 17திருமுழுக்குக் கொடுப்பதற்குஅல்லநற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்மனித ஞானத்தின்அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாதுஅவ்வாறுஅறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

 கொரிந்திய திருச்சபையில் காணப்பட்ட முக்கியமான சிக்கல்களில் பிரிவினைவாதம்முக்கியமான இடத்தை பிடிக்கிறதுகொரிந்திய திருச்சபைபவுலால் நேரடியாகஉருவாக்கப்பட்ட திருச்சபைகளில் ஒன்று என நம்பப்படுகிறதுஇந்த திருச்சபையைபவுல் கி.பி 50களில் உருவாக்கியிருக்க வேண்டும்ஒன்றரையாண்டுகள் பவுல் இங்குபணியாற்றியபின் கொரிந்தை பிரிந்தார்பின்னர் அப்பொல்லோ என்ற ஒரு கிறிஸ்தவர்பவுலின் வேலையை தொடர்ந்தாற்றினார்இவர் பவுலோடு சேர்ந்து கொரிந்தில்பணியாற்றினாரா என்பது சந்தேகமேஆனால் பவுலுடைய பணியை இவர் தொடர்ந்தார்(ஒப்பிடுக தி.பணி 18,24-28). பவுல் இவரை தன்னுடைய உடன்-பணியாளர் என்றுஅழைக்கிறார் (காண்க தி.பணி 3,5-9). சிலர் பிற்காலத்தில் இந்த அப்பலோவைபவுலைவிட உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்இதனால் அங்கே சிலபிரிவினைகள் தோன்றியிருக்க வேண்டும்இதற்கு அப்பலோ காரணமாக இருந்திருக்கவேண்டிய தேவையில்லைஅப்பலோ கொரிந்தில் பணியாற்றிய காலத்தில்பவுலின்நெருங்கிய நண்பர்களான பிரிஸ்கில்லாவும்அக்குவில்லாவும் அங்கே இருந்தார்கள்இவர்கள்தான் இவருக்கு விசுவாசத்தை தெளிபடுத்தினார்கள்அப்பலோ தன்னுடையவாதாடும் திறமையாலும்பேச்சாற்றலாலும் அறியப்பட்டார்அப்பலோ தன்னுடையகிரேக்க மெய்யியல் அறிவின் மூலம் இயேசுவை பறைசாற்ற முயன்றார்இருப்பினும்இவருடைய மெய்யியல் பார்வைகள் கொரிந்தில் பிரிவினைகளை உண்;டாக்கியதாஎன்றகேள்விகளும் இருக்கின்றனஆனால் கொரிந்தின் பிரிவினைக்கு அப்பலோ காரணம்அல்லஅத்தோடு இவருக்கும் பவுலுக்கும் பிரச்சனைகள் இருந்ததாகவும்சொல்வதற்கில்லைதலைவர்களை நட்சத்திரங்களாக கொண்டாடி அவர்களுக்கு பால்வார்க்கும் மூடநம்பிக்கை கொரிந்தியரையும் பாதித்திருக்கிறது. (இன்றைய நம்முடையஇளசுகள் சினிமாக்காரர்களுக்கு பால் ஊற்றுவது போல்).  

.10: பவுல் மிகவும் உணர்வு பூர்வமான வார்த்தைகளை இதில் பிரயோகிக்கிறார்இயேசுவின் பெயரால் கெஞ்சிக் கேட்பதாக சொல்கிறார்பிளவுகள் (σχίσμα ஸ்கிஸ்மா)மிகவும் ஆபத்தானவை என்பதை கவலையோடு சாடுகிறார்பிளவுக்கு எதிராகஒத்தகருத்தையும்ஒரே மனத்தையும்மற்றும் ஒரே நோக்கத்தையும் கொண்டிருக்ககேட்கிறார்(அதே ஆபத்துத்தான் இன்றும் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கிறதுகொரிந்தியர்களும் அன்று கேட்கவில்லை நம்மவர்களும் கேட்பதுபோல தெரியவில்லை)

.11: பவுல் ஒரு நல்ல தலைவர்தான் கொரிந்தைவிட்டு பிரிந்தாலும் அந்த திருச்சபைமட்டிலே கரிசனையுடையவராகவே இறுதிவரை இருந்தார்அவருடைய நலன்விரும்பிகள்இன்றைய வார்த்தையில் உளவாளிகள் பவுலுக்கு கொரிந்தின் நிலைமைகளைஅறிவித்துக்கொண்டிருந்தார்கள்இவர்களில் குலோயி விட்டார் (Χλόηமுக்கியமானவர்கள்இவர்கள் கொரிந்தின் பிரிவினைகளை தங்கள் ஆயனுக்கு'போட்டுக்கொடுக்கிறார்கள்'குலோயி என்பவர் ஒரு பணக்கார வாணிக பெண்ணாகஇருந்திருக்க வேண்டும்இவர் விட்டார் என்பவர்கள்இவரின் பணியாளர்கள்அடிமைகள்மற்றும் உறவினர்களாக இருந்திருக்கலாம்இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாகஇருந்திருக்கிறார்கள்இவர் ஒரு தளத்திருச்சபையில் தலைவியாக இருந்ததற்கானவாய்ப்புக்களும் உள்ளனகுலோயி வீட்டாரின் அக்கறைஒவ்வொரு கிறிஸ்தவருக்கும்தலத்திருச்சபையில் முக்கிய பங்குள்ளது என்பதைக் காட்டுகிறது

.12: பவுல் தன்னுடைய குற்றச்சாட்டை விவரிக்கிறார்சிலர் பவுலைச் சார்ந்தவராகவும்சிலர் அப்பலோவை சார்ந்தவராகவும்மற்றும் சிலர் கேபாவை சார்ந்தவராகவும் தங்களைகாட்டுவதாக சொல்கிறார்சிலர் பவுலைஇந்த திருச்சபையின் நிறுவுனரைசார்ந்திருந்தனர்சிலர் அப்பலோவைஇந்த திருச்சபையை பவுலின் பின்னர் வளர்த்தவரைசார்ந்திருந்தனர்சிலர் கேபா அதாவது பேதுருவைஅகில திருச்சபையின் தலைவரைசார்ந்திருந்தனர். (இந்த காட்சிநம் ஈழ திருச்சபையில்சிலர் மாதாகோவில்காரர்களாகவும்சிலர் வளனார் கோவில்காரர்களாகவும்சிலர் யோவான்கோவில்காரர்களாகவும் தம்மை பிரித்து திருச்சபைக்கு பிரிவினை சாயம் பூசுவதைக்அப்படியே காட்டுகிறதுஇது கத்தோலிக்க திருச்சபை கிடையாதுஇதனை இனியும்சகிக்கவும் முடியாது). 

.13: இந்த பிரிவினை அடிப்படையில் தவறானது என்பதை இயேசுவை மையமாகக்கொண்டு விளக்குகிறார்கிறிஸ்துதான் ஒரே இலக்கும் ஒரே பாதையும்அவர் இடத்தைஎந்த தலைவரும் எடுக்க முடியாதுசிலுவையில் அறையப்பட்டவர் கிறிஸ்துகிறிஸ்துபிளவுபடாதவர்அத்தோடு திருமுழுக்கும் அவருக்கே சொந்தம்இவற்றை கேள்வியாககேட்டு அதனுள் சரியான விடையையும் வைக்கிறார் பவுல்

.14: இந்த வரி பவுலின் ஆழமான விசுவாசத்தை காட்டுகிறதுபவுல் தன்னுடையநற்செய்தி பணியின் நோக்கம்திருமுழுக்கு கொடுப்பதல்லமாறாக இயேசுவைஅறிவிப்பதே அல்லது இயேசுவை மையப்படுத்துவதே என்று கூறுகிறார்இங்கே பவுல்திருமுழுக்கை கொச்சைப் படுத்துகிறார் என்று எடுக்க முடியாதுஆனால் திருமுழுக்கு ஓர்அடையாளமேஅதே திருமுழுக்கு என்னும் சடங்கு இயேசுவிடமிருந்து மக்களை பிரிக்கும்என்றால் அது தவறு என்கிறார்அத்தோடுதான் சிலருக்கு மட்டும் திருமுழுக்குகொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறார்இவர் மிகவும் பலசாலிகிறிஸ்பு(Κρίσπος chrispos)இவர் ஒரு செபக்கூடத் தலைவர்இவர் சிலரோடு சேர்ந்து பவுலிடம்திருமுழுக்கு பெற்றார் (காண்க தி.பணி 18,8). காயு (Γάϊος)இந்த பெயரோடுதொடர்புடைய நான்கு நபர்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்இந்தகாயு என்னும் நபர் பவுலால் திருமுழுக்கு பெற்றவர்களுள் முக்கியமானவராக இருக்கலாம்

(தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும்ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார்கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக்கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.) 

.15-16: தன்னுடைய பெயரையும் திருமுழுக்கையும் வீணாக பயன்படுத்த வேண்டாம் எனகேட்கிறார்அத்தோடு தான் திருமுழுக்கு கொடுத்தவர்களில் இன்னொருவரையும் நினைவுகூருகிறார்ஸ்தேவானா Στεφανᾶς stephanas குடும்பம் பிரசித்தி பெற்ற ஆரம்ப காலகிறிஸ்தவ குடும்பம்அக்காயாவில் இவர்கள் பவுலால் கிறிஸ்தவம் பெற்றார்கள் (காண்க1கொரி 16,15: தி.பணி 17,34).  இந்த ஸ்தேவானா வீட்டாரும் பவுலுக்கு கொரிந்தியபிளவுகளைப் பற்றி சொல்லியிருக்கலாம்.  பவுல் இவர்களின் நம்பிக்கையின் பொருட்டுஇவர்களின் முக்கியத்துவத்தை தனது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார் (காண்க1கொரி 16,17-18). 
(17ஸ்தேவனாபொர்த்துனாத்துஅக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சிநீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள். 18அவர்கள் என்உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள்இத்தகையோருக்குமதிப்பு அளியுங்கள்.) 

.17: ஒரு மறைபணியாளனின் நோக்கத்தை பவுல் அறிவிக்கிறார்திருமுழுக்கல்லநற்செய்தியே தன் இலக்கு அதற்கு ஓர் அடையாளமே திருமுழுக்கு என்கிறார்மனிதஞானமல்ல சிலுவைஅது இறைஞானம் என்கிறார்இங்கே பவுல் கிரேக்க மெய்யியலைசாடுவதைப் போல் உள்ளதுகிரேக்கர்கள் தங்கள் ஞானத்தை போற்றிவந்தனர்இந்தஇயல்பு கொரிந்திலும் நிச்சயமாக இருந்திருக்கும்

மத்தேயு 4,12-23
12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப்புறப்பட்டுச் சென்றார். 13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன்நப்தலி ஆகியஇடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்றுகுடியிருந்தார். 14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறுநிறைவேறியது:
15'செபுலோன் நாடேநப்தலி நாடே!
பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே!
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
16காரிருளில் இருந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர் மேல்
சுடரொளி உதித்துள்ளது.'
17அதுமுதல் இயேசு, 'மனம் மாறுங்கள்ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20 லூக் 5:1 - 11)

18இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போதுசகோதரர் இருவரைக் கண்டார்ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன்மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயாமீனவரானஅவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். 19இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்என்றார். 20உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 21அங்கிருந்துஅப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார்அவர்கள் செபதேயுவின்மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர்அவர்கள் தங்கள் தந்தைசெபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்இயேசுஅவர்களையும் அழைத்தார். 22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(லூக் 6:17 - 19)
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

  இன்றுதொடங்கி இந்த வருடத்திற்கான மத்தேயு நற்செய்திதொடர்ந்துபயணிக்கின்றதுமத்தேயுவின் நான்காவது அதிகாரம்இயேசுவின் பொதுப்பணிக்கானஆயத்தத்தையும் மற்றும் தொடக்த்தையும் விவரிக்கின்றதுபாலை நிலத்தில் சாத்தானால்சோதிக்கப்பட்டு தன்னுடைய தெய்வீகத்தை சாத்தானுக்கும் காட்டிய இயேசு தன்பணிவாழ்வை தொடங்குகிறார்சாத்தான் இயேசுவை விட்டு அகன்ற பின்வானதூதர்கள்வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள் என மத்தேயு விவரிக்கின்றார்வானதூதர்கள்ἄγγελοι இங்கேஇயேசு சரியான பாதையில் அதாவது இறைவனின் பாதையில்இருக்கிறார் என்பதைக் காட்டுகிறதுஇயேசு பாலைவனத்தில் இருந்த போது அவர்சகோதரனும்ஆயத்த இறைவாக்ககினருமான திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்படுகிறார்யோவான் கைதுசெய்யப்பட்டதற்கு எரோது அரசனே முழுக்காரணம்என நற்செய்திகள் காட்டுகின்றனதிருமுழுக்கு யோவான்எரோதுவின் ஏற்றுக்கொள்ளமுடியாத திருமணத்தை சாடினார்அதாவது ஏரோதுதன்னுடைய சகோதரனான பிலிப்பின்மனைவியும்நபேத்திய இளவரசியுமான ஏரோதியாவை தன் மனைவியாக்கினான்இதுஇஸ்ராயேலின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்இருப்பினும் அவன் உரோமைய ஆசிபெற்ற அரசனாக இருந்த படியால் சட்டத்திலிருந்து தப்பினான்இதனால் இறைவாக்கினர்இவரை சபித்தார்இதனால் யோவான் சிறைவாசம் செல்ல வேண்டிவந்ததுபின்னர்மரணிக்கவும் வேண்டி வந்தது. (காண்க மத்தேயு 14,1-12). 

.12: இயேசு கலிலேயா சென்றதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்திருமுழுக்குயோவானின் கைது இயேசுவை சிந்திக்க வைத்திருக்கும்இயேசு தன்னுடைய ஆரம்பகாலத்திலேயே எரோதுவை சந்திக்க விரும்பியிருக்க மாட்டார்அத்தோடு அவர்இறுதிவரை ஏரோதுவை சந்திக்க விரும்பியதுமில்லைஇரண்டாவதூக கலிலேலயாஇயேசுவுடைய சொந்த மாகாணம்அங்கே தன்னுடைய பணியை அவர் தொடங்கவிரும்பியிருக்கலாம்மற்றும் தன்னுடைய தாயையும் அவர் நினைவுகூர்ந்திருக்கலாம்

.13: இந்த வரியிலிருந்து அவர் கலிலேயாவில்முதலில் நாசரேத்திற்குத்தான் வந்தார்எனப் புலப்படுகிறதுசெபுலோன் மற்றும் நப்தலி அகிய இடங்கள் ஏற்கனவே எசாயாஇறைவாக்கில் மெசியாவின் வருகையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றனஇந்தபிரதேசங்களுக்கு மெசியா வருவார் என்றும் இறைவாக்குகள் உள்ளன (காண்க எசாயா9,1). கப்பர்நாகும்இயேசுவின் பணியில் மிகவும் முக்கியமான பணித்தளம்இங்கிருந்தசெபக்கூடம் இயேசுவிற்கு மிகவும் பிரியமான செபக்கூடம்இந்த செபக்கூடத்தின்சிதைவுகளை இன்றும் காணலாம்.  
 கப்பர்நாகும் Καπερναουμகெனசரேத்து-திபேரியா ஏரியின் மேற்கு பக்கமாகஅமைந்திருக்கிறதுஇந்த வழியாகவே யோர்தான் நதி இந்த ஏரியினுள் விழுகிறது;தாடுமீன்பிடியிலும்விவசாயத்திலும் இந்த இடம் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறதுகப்பர்நாகும் என்ற இந்த இடம் முதல் எற்பாட்டில் குறிப்பிடப்டவில்லை ஆதலால் இந்தநகர் பபிலோனிய 
இடப்பெயர்விற்கு பின்னரே உருவாகியிருக்க வேண்டும்இயேசுவின் ஆரம்பகாலநண்பர்களும்முதல் சீடர்களும் இந்த இடத்தை சார்ந்தவர்களே

.14-16: மத்தேயு எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார்இந்த இறைவாக்கை நாம்ஏற்கனவே முதலாவது வாசகத்தில் விவரித்திருக்கிறோம்மத்தேயுஎசயாவைகுறிப்பிடுவதன் வழியாகமத்தேயுவிற்கு நல்ல முதல் ஏற்பாட்டு புலமைத்துவம்இருந்ததையும்எசாயா இறைவாக்கினர் அக்காலத்திலும் மிகவும் மதிக்கப்பட்டமெசியானிக்க இறைவாக்கினர் என்பதும் புலப்படுகிறதுமத்தேயுஇந்த இறைவாக்கைசெப்துவாஜிந்து நூலில் இருந்துதான் கோடிடுகிறார் ஆனால்அவர் அதனை அப்படியேகாட்டவில்லை சில மாற்றங்களைச் செய்கிறார்மத்தேயுவிற்கு இந்த 
இறைவாக்கு இயேசுவின் வருகையால் நிறைவடைகிறதுமத்தேயு பல இடங்களில்இயேசுதான் முதல் ஏற்பாட்டின் நிறைவு என்பதை காட்டுவார்இவ்வாறு இயேசுதான்எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று நற்செய்தியுரைக்கிறார்அத்தோடு மெசியாவின் கவனம்எருசலேமிற்கு மட்டுமல்ல வடக்கின் முக்கியமான இடங்களுக்கும்மேலும் பிறவினத்தவர்வாழுகின்ற இடங்களுக்கும் உண்டு என்ற ஒரு செய்தியும் இங்கே புலப்படுகிறது

ஒப்பிடுகஎசாயா 9,1-2: 1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாதுமுற்காலத்தில் செபுலோன் நாட்டையும்நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்குஉட்படுத்தினார்பிற்காலத்திலோபெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ளநிலப்பரப்புபிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மைவரச்செய்வார். 2காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்சாவின்நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.

.15: இதிலிருந்து இயேசு தன்னுடைய செய்தியை ஆரம்பிக்கிறார்அவருடையசெய்தியாக 'மனமாறுங்கள்ஏனெனில்விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது(μετανοεῖτε· ἤγγικεν γὰρ ἡ βασιλεία τῶν οὐρανῶν) என்பதைக் காட்டுகிறார் மத்தேயுமனமாற்றம்என்பது மத்தேயு நற்செய்தியில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றுஇந்தமனமாற்றம் மத்தேயு நற்செய்தியிலே யூதர்களையே முதன்மைப்படுத்துகிறது(μετανοέω மெடாநொயோ).
 மற்றய நற்செய்தியாளர்கள் இறையரசு என்று சொல்வதை (βασιλείᾳ τοῦ θεοῦ பசிலெய்யாதூ தியூ) மத்தேயு தனக்கேயுரிய யூத வடிவத்தில்விண்ணரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν. பசிலெய்யா டோன் ஹுரானோன்) என்றே குறிப்பிடுவார்இது மத்தேயுவிற்கே உரியதனித்துவம்இதன் வாயிலாக மத்தேயு தன்னுடைய நற்செய்தியை யூத சாயலில் கொடுக்கவிழைகிறார் என்பது தெரிகிறது

.18: இது முதல் சீடர்களை அழைத்த பகுதியின் தொடக்கமாகும்இயேசு கலிலேயகடற்கரையில் வழமையாக நடப்பதுபோல காட்டப்படுகிறார்இந்த வசனம்தொடக்கநூலில் கடவுள் ஏதோன் தோட்டத்தில் உலாவருவதை நினைவூட்டுகிறது(காண்க தொ.நூல் 3,8). சீமோன் பேதுருவும்அந்திரேயாவும் சகோதரர்களாககாட்டப்படுகின்றனர்அத்தோடு அவர்கள் மீனவர்கள் எனவும் மத்தேயு காட்டுகிறார்கலிலேயா கடல் மீனவர்களின் நம்பிக்கையாக இருந்ததுமீன்மீன்பிடித்தல் மற்றும் வலைஎன்பன விவிலியத்தில் இறையரசுடன் தொடர்புடைய அடையாளங்கள்ஆனால் இங்கேஇவர்கள் அடையாளங்கள் அல்லமாறாக உண்மை மீனவர்கள்யூத மக்களுள் பலவகையான தொழில் செய்கிறவர்கள் இருந்திருக்கிறார்கள்வேளான்மை இவர்களிடையேவளர்ந்த போதேமீன்பிடியும் இவர்களிடைய வளர்ந்ததாக மானிடவியல் வாதிடுகிறதுசிலர்மீன்பிடித்தலைவேட்டையாடுதலின் ஒரு வளர்ந்த தொழிலாகக் காண்கின்றனர்
(8மென்காற்று வீசிய பொழுதினிலேதோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள்உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டுமனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகியகடவுளின் திருமுன்னிருந்து விலகிதோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொண்டனர்.)

.19: இந்த வரி மத்தேயு நற்செய்தியில் மிகவும் முக்கியமான வரிஇயேசு இவர்களைபார்க்கிறார்இந்த பார்வை முதல் ஏற்பாட்டில் கடவுளின் முகப் பார்வையைநினைவுபடுத்துகிறதுகடவுளின் பார்வை என்பது அவரின் பிரசன்னத்தையும்அன்பையும்குறிக்கும்இங்கே இந்த சகோதரர்கள் அந்த பார்வையையும்அன்பையும் பெறுகிறார்கள்மனிதரைப் பிடித்தல் என்பதை (ἁλιεῖς ἀνθρώπων) இந்த சாமான்ய மீனவர்கள் அன்றுபுரிந்திருப்பார்களாஎன்பது சந்தேகமேஆனால் இந்ந வரி மத்தேயுவின் வாசகர்களுக்குமிகவும் பொருந்தும்அதாவது அவர்கள் இயேசுவின் பின்னால் வர கேட்கப்படுகிறார்கள்அத்தோடு அந்த வருகைஅவர்களை மனிதரை பிடிப்பவராக்குகிறது என்கிறார் மத்தேயுஇந்த காட்சியில் மனித குலம்உலகியல் வேலையில் மூழ்கியிருக்கும் வேளைஆண்டவரின் குரல்தன்பின்னால் வரச்சொல்லி கேட்கிறது போல காட்டப்படுகிறதுயோவான் நற்செய்தியில் பேதுருவைஇயேசு முதலில் அழைக்கவில்லைஅவர்அந்திரேயாவால் இயேசுவிடம் அழைத்து வரப்படுகிறார் (காண்க யோவான் 1,40-42)சமநோக்கு நற்செய்திகள்பேதுருவின் தலைமைத்துவத்தை எல்லா இடங்களிலும்மையப்படுத்துகிறார்கள்

.20: இந்த செய்தியும் மிக முக்கியமான செய்திஅதாவது ஆண்டவரின் குரலைக்கேட்டவர்கள் உடனே (εὐθέως eutheôs)வலைகளை விட்டுவிட்டு அவரைபின்பற்றுகிறார்கள்இந்த செய்தியும் மத்தேயுவின் வாசகர்களுக்கு நினைவூட்டப்படுகிறதுஅதாவது அவர்களையும் உடனடியாக தங்கள் உலகத்தையும் அதன் அலுவல்களையும்விட்டுவிட்டு இயேசுவை பின்பற்ற கேட்கிறது இந்த ஆசிரிய-நற்செய்தி

.21: செபதேயுவின் மக்களை அறிமுகம் செய்கிறார் மத்தேயுசெபதேயு ஒரு பணக்காரமீனவராக இருந்திருக்க வேண்டும்மாற்கு நற்செய்தியில் இவர் வேலையாட்களுடன்காணப்படுகிறார் (காண்க மாற் 1,19-20)மேலுள்ள வரியில் வந்த சகோதரர்களைப்போலஇந்த மீனவ சகோதரர்களும் (யாக்கோபுயோவான்ஒன்றாகவே அழைக்கப்படுகிறார்கள்யாக்கோபு (Ἰάκωβος யாகோபொஸ்)பெரிய யாக்கோபு என அறியப்படுகிறார்இவர்தான்சந்தியோகு மயோர் என்ற புனிதர் என நம்பப்படுகிறதுஇவர்தான் திருத்தூதர்களில்முதலாவது மறைசாட்சி (காண்க தி.பணி 12,2)யோவான் (Ἰωάννης யோஅன்னேஸ்)இவர்இயேசுவை பின்பற்றியவர்களில் மிக இளமையானவர் என நம்பப்படுகிறதுஇவரைத்தான்கத்தோலிக்க பாரம்பரியம் நற்செய்தியாளர் யோவான் எனவும்யோவான் நூல்களில்ஆசிரியர் எனவும்அத்தோடு இயேசுவின் மார்பில் சாய்ந்த அவர் அன்புச்சீடர் எனவும் நம்பிஏற்றுக்கொள்கிறதுஇந்த நம்பிக்கைகளுக்கு எதிர்கருத்துக்களும் உள்ளனஇந்தஇரண்டு சகோதரர்களும்அவர்களோடு பேதுருவும் சேர்ந்துஇயேசுவின் முதல்நெருக்கமான ஒரு குழுவை அமைக்கிறார்கள்இந்த மூவர்அதிக முக்கியமானவேளைகளில் இயேசுவோடு இருந்தார்கள்இவர்களும் தங்கள் வலைகளை தம்தந்தையுடன் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது அழைக்கப்படுகிறார்க்ள்அதாவது தம்சாதாரண உலகியல் வேலைகளில் இருந்த போதே அழைக்கப்படுகிறார்கள்

.22: இவர்களும் உடனே தம் தந்தையையும்படகையும் விட்டுவிட்டு இயேசுவைபின்பற்றுகிறார்கள்இயேசுவை இவர்கள் முன்பின் அறிந்ததில்லைதெரியாதஒருவருக்காக இவர்கள்தங்கள் தந்தையையும்சொத்துக்களையும் தியாகம்செய்கிறார்கள்எப்படிஒருவேளை இயேசுவின் முகம் இவர்களுக்கு மெசியாவைநினைவூட்டியிருக்கலாம்அல்லது இவர்கள் தங்கள் தந்தையிடம் இருந்து வெளியேறவாய்ப்பு தேடியிருக்கலாம்அல்லது இவர்கள் இஸ்ராயேலின் விடுதலைக்காககாத்துக்கொண்டிருக்கலாம்மத்தேயுஇயேசுவின் குரலை மையப்படுத்துவதால்இவர்கள்இயேசுவை ஆண்டவர் என்று உணர்ந்தே அவரை பின்பற்றுகின்றனர் என்பதுபுலப்படுகிறதுஇதுவும் மத்தேயு தன் வாசகர்களுக்கு தரும் மையச்செய்தி அதாவதுசொந்த உறவுகளையும்சொத்துக்களையும் விட இயேசு பெரியவர் மற்றும் உடனடியாகபின்பற்றபட வேண்டியவர் என்பதாகும்


இயேசு பெரியவர்உன்னதர்பிளவுபடாதவர்.
எந்த புனிதரும்தலைவரும் இயேசுவின் இடத்தை பிடிக்காமல் பார்க்கவேண்டும்.
பிரிவினைவாதம்கிறிஸ்தவத்தின் துன்பமும் சாபமும் ஆகும்
பிரிவினைவாதம் தமிழ்க் கலாச்சாரமும் அல்ல
இயேசு பாதை மட்டுமல்ல அவர்தான் அந்த பாதை காட்டும் இலக்கு!


அன்பு ஆண்டவரே உம்மை பின்பற்ற உதவிசெய்யும்ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குருத்தோலை ஞாயிறு (இ) 13.04.2025 - Palm Sunday

  குருத்தோலை   ஞாயிறு  ( இ ) 13.04.2025   Fr. M. Jegankumar Coonghe OMI, ‘Nesakkarangal,’ Iyakachchi, Jaffna.     முதல்   ...